Wednesday 29 August 2012

ச்சீ சும்மா இருடா





காதுக்குட் பேசு உன் சுவையான குரலிலே 
களவாடி கொடு பூ முத்தம் ஒன்றையே 

இயற்க்கை தந்த சலுகையில் மனம் துள்ளுகிறது 
சொல்லிவிடு எல்லை மீறென்று
நான் வேண்டுகிறேன், சொல்லி விடாதே 
'சும்மா இரு' என்று.

என் முன்னே நீ பாடாமல் 
பதுக்கி கொண்ட உன்னத சங்கீதம் 
தப்புதப்பாய் பாடுது உன் இதைய தாளம்!

என்னோடே என்கூடவே எல்லாம் 
மெல்ல மெல்ல கடந்து செல்கையிலே, ஏன்
மறைத்தாய் உன் மனதாழம்!

எவ்வளவு நேரம்தான் காத்திருக்க 
பூ மொட்டிர்க்கும் வாய் பேச்சு வருமென்று 
கனவின் ஆழ்தடத்தில் மனம் இறங்குகிறது 
சொல்லி விடாதே 'சும்மா இரு' என்று.

நூற்றி எட்டு ஆசைகளையும் 
கோடி கோடி வண்ணங்களையும், கனவின்
ஆடையாக தொடுத்து!

கண்ணும் கண்ணும் சேரும்போதும் 
மௌனமே பேச்சாகும் போதும், எல்லாவற்றையும் 
சொல்லியே ஆக வேண்டும் பிரித்து!

கரு விழியிலே ஒப்புக்கொள் அப்பிக்கொள்ளவே!
பேரழகியே உன் விருப்பத்திற்காகவே 
மனம் ஏங்குதடி 
சொல்லி விடாதே "ச்சீ சும்மா இரு டா" என்று.

ப்ரவீன் 2 சென்னை


     இதுதான் என் முதல் கட்டுரை தொகுப்பு, அதுவும் எனக்கு பிடித்தமான பயண கட்டுரை. இந்த கட்டுரை எழுத ஆரம்பித்த போது எனக்கு எந்த எதிர்பார்ப்பும், உற்சாகமும் இருக்கவில்லை, இதை எழுத எழுத என்னை அறியாமல் நானே மிகவும் நேசிக்க ஆரம்பித்துவிட்டேன். நான் இனி எத்தனை கட்டுரை எழுதினாலும் இதுதான் என்னுடைய சிறந்த படைப்பாக குறிப்பிடுவேன். என்னை மேன்மேலும் எழுத தூண்டும் என் நண்பர்களுக்கும், இந்த கட்டுரை எழுத மிக முக்கியமான காரனிகளாக இருந்த என் உயிர் தோழர்களான “சூர்ய குமார், ஜோதி ப்ரியாஇருவருக்கும் இந்த படைப்பை சமர்பிக்கிறேன். இந்த கட்டுரையை “A CELEBRATION OF FRIENDSHIP” என்று கூட சொல்லலாம்.

     நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தான். பெங்களூர் ஓசூரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் இருந்ததால் பெங்களூரை தவிர நான் வேரெந்த பெரு நகரத்துக்கும் சென்றதில்லை. நம் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையை ஒரு முறையாவது பார்க்க வேண்டுமென்ற என் நீண்ட நாள் கனவு நான் கல்லூரிக்கு சேரும் வரை நிரைவேறவில்லை.

அதுவரை எனக்கு தெரிந்த சென்னை – செண்ட்ரல் ரயில் நிலையம், மெரினா பீச், நேப்பியர்ஸ் ப்ரிட்ஜ், மஹாபலிப்புரம், E.C.R. ரோடு, தமிழக சட்டமன்ற கட்டிடம், அண்ணா அறிவாலயம், சென்னை மாநகராட்சி கட்டிடம் (ரிப்பன் பில்டிங்), L.I.C. பில்டிங், ஹை கோர்ட்டு, A.V.M. உருண்டை...... மேலிருப்பவை அனைத்தும் ஏதோ ஒரு திரைப்பட்த்திலோ, தொலைக்காட்சியிலோ பார்தவைதான்.

நான் இதுவரை சென்னைக்கு ஐந்து முறை சென்றுள்ளேன். அந்த ஐந்து முறை பயணத்தின் போது நான் ரசித்த, வெறுத்த, ருசித்த, தவிர்த்த, அலைந்த அனுபவங்களை பற்றி இங்கு உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அனைவருக்கும் ஒர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திர்க்கு பயணம் கொள்வது மிகவும் பிடித்தமான விஷயம், எனக்கு இது போன்ற ஒரு பயண கட்டுரை எழுத வேண்டுமென்ற என் நீண்ட நாள் ஆசையை, நான் இதுவரை சென்னைக்கு பயணித்ததை வைத்து பூர்த்தி செய்துக்கொள்கிறேன். வாருங்கள்! என்னுடன் சேர்ந்து நீங்களும் இந்த சிங்கார சென்னையில் பயணிக்கலாம்.

முதல் முறை:

     என் நீண்ட நாள் கனவான சென்னை பயணம் முதல் முறையாக என் பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான கலந்துரையாடல் மூலம் நிரைவேறியது. நானும் என் அண்ணனும் பெங்களூரிலிருந்து K.S.R.T.C  யின் AIRAVAT  என்ற A.C  பஸ்ஸில் பயணித்தோம். ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால், இதுதான் நான் முதல்முறையாக ஒரு A.C பஸ்ஸில் பயணிப்பது. நண்பர்களுக்கு இன்னொறு விஷயம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், இந்த பயணத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை எனக்கு நடந்த அனுபவங்கள் அனைத்துமே எனக்கு புதுசுதான் அதனால் நான் சற்று வியந்து பேசியிருப்பேன் இது மற்றவர்களுக்கு மிக சாதாரணமாக தெரியலாம். சரி மறுபடியும் பயணிப்போம், நானும் என் அண்ணனும் சென்னைக்கு விடியர்காலை நான்கு மணிக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்து சேர்ந்தோம்.

     எங்கு, எப்படி செல்ல வேண்டும் என்று தெரியாமல் இருந்தபோது, ஒரு ஆட்டோக்காரன் எங்களை பிடித்தான். அவ(ரி)னிடம், நாம் அண்ணா யுனிவர்சிட்டிக்கு செல்ல வேண்டும் அதற்கு முன்பு யுனிவர்சிட்டிக்கு அருகில்லுள்ள ஒரு நல்ல லாட்ஜிர்க்கு போகும்படி கூறி  ஆட்டோவில் அமர்ந்தோம். அந்த ஆட்டோக்காரர் தனக்கு தெரிந்த ஒரு லாட்ஜிர்க்கு கூட்டி சென்று, இங்கயே தங்கிக்கொள்ளுங்கள் அண்ணா யுனிவர்சிட்டிக்கு செல்ல இங்க நிறைய பஸ் வரும் என்றான். எங்களுக்கு அவன் காண்பித்த லாட்ஜின் மீதும், அவன் மீதும் சந்தேகமாக இருந்ததால் அந்த ஆட்டோக்காரனை கட் செய்து அருகிலுள்ள பஸ் நிறுத்தத்தில் அண்ணா யுனிவர்சிட்டிக்கு செல்லும் பஸ்ஸை விசாரித்து, பிடித்து கல்லூரி வளாகத்திர்க்கு வந்து சேர்ந்தோம். அன்று மாலை ஐந்து மணிக்குத்தான் எனக்கு கலந்துரையாடல் இருந்ததால் யுனிவர்சிட்டியை ஒரு விசிட் அடித்துவிட்டு வெளியே வந்தோம்.

     அருகில் ஏதாவது ஒரு நல்ல லாட்ஜ் கிடைக்குமா என்று விசாரித்து கடைசியாக அடையார் பஸ் டர்மினஸ் எதிரில் உள்ள TOUR & STAY HOTEL லில் தங்கினோம். இங்கு ஒரு புதுமையான விஷயம் நடந்தது, இந்த ஓட்டலின் ரிசப்ஷனில் அறை வாடகை பற்றி விசாரித்தபோது. இரண்டு படுக்கை அறையை விட மூன்று படுக்கை அறைக்கான வாடகை குறைவாக இருந்தது. நாங்கள் அந்த மூன்று படுக்கை அறையையே தேர்வு செய்தோம். சற்று நேரம் ஓய்வு எடுத்துவிட்டு பின்னர் மெரினா பீச்சிர்க்கு செல்ல சென்னை நகர பேருந்தில் ஏறினோம். இந்த பேருந்தில் நான் கவனித்த புதுமை, நட்த்துனர் இருக்கையில் அமர்ந்த படியே டிக்கெட் கொடுப்பதும், முன் நுழைவிர்க்கு பிறகு இடதுபுரம் உள்ள இருக்கையிலிருந்து பின் இருக்கை வரை அனைத்தும் பெண்களுக்காக வொதுக்கப் பட்டிருந்தது.  நம் நாட்டில் பெண்களுக்காக 50% ரிசர்வேஷன் எங்காவது உண்டா என்று கேட்பவர்களுக்கு சென்னை நகர பேருந்துகளில் காட்டலாம்.

            மெரினா பீச் சென்றடைந்தோம். அந்த கதகதப்பான பீச் மணலில் சற்று நேரம் சுற்றி திரிந்து, கடல் நீரில் கால் நனைத்தவாரு கடல் அலைகளை ரசித்து நின்றோம். கடல் நீரில் கால் நனைத்தால் ஒரு மகிழ்சியான அனுபவம் ஏற்படும். அலைகள் நம் கால்களை இடித்து பின் நோக்கி செல்கையில் நம் பாதங்கள் சற்று மணலுக்கு உள்ளே புதயும் அப்போது ஒரு கிழர்ச்சியான அனுபவம் ஏற்படும். மெரினாவின் அழகை ரசித்துவிட்டு அங்கிருந்து விடைபெற்றோம். பெங்களூருக்கு ரிட்டன் டிக்கெட் கிடைக்குமா என்று விசாரிக்க செண்ட்ரல் ரயில் நிலையம் செல்ல முடிவு செய்து திருவல்லிக்கேணி லோக்கல் ரயில் நிலையத்தை நோக்கி நடந்தோம். எனக்கு கருவாடு வாசனை என்றாலே கோமட்டலாக வரும். அந்த ரயில் நிலைய நுழைவாயிலை சுற்றி கருவாட்டை வெயிலில் காய போட்டிருந்தார்கள், எப்படியோ காலையில் அவ்வளவாக சாப்பிடாததால் வாந்தி எடுக்கவில்லை. செண்ட்ரலுக்கு டிக்கெட் வாங்கி செண்ட்ரலை நோக்கி செல்லும் வழிதடத்துக்கு வந்து சேர்ந்த சில மணித்துளிகளில் ரயில் வந்ததும் ஏறினோம். இந்த லோக்கல் ட்ரெயினில் செல்வது இதுதான் முதல்முறை. ஏதாவது ஒரு பாத்திரக்கடைக்கு சென்றால் அங்கு அந்த கடை முழுக்க பாத்திரங்களை தொங்கவிட்டிருப்பார்கள் அதுபோல இந்த ரயில் பெட்டிகளில் நிறைய கைபிடிகள் தொங்கும். செண்ட்ரல் வந்தடைந்து நேராக ரிசர்வேஷன் கவுண்டருக்கு சென்று அடுத்த நாள் பெங்களூருக்கு செல்லும் ரயிலில் உள்ள இருக்கை இருப்பு பற்றி விசாரித்தோம், 40 பேர் வெய்டிங் லிஸ்டில் இருக்கிறார்கள் என்றனர் இது வேலைக்காகது என்று, அங்கிருந்து அடையாருக்கு பஸ் பிடித்து நாங்கள் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கே வந்து சேர்ந்தோம்.

     சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு, ஒரு மூன்று மணி அளவில் கலந்துரையாடலுக்கு செல்ல தயாரானோம் அதர்க்கு தேவையான அனைத்தையும் எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேரினோம். இன்னும் நேரம் இருந்ததால், என் அண்ணன் சென்னைக்கு வந்து ஐஸ்கிரீம் சாப்பிடாமல் செல்வதா என்று ஒரு ஐஸ்கிரீம் பார்லருக்கு சென்று சாப்பிட்டோம். சென்னை ஐஸ்கிரீமுக்கு பிரசித்தமா என்ன? எனக்கு தெரியவில்லை? இதுபோன்ற ஐஸ்கிரீமை நான் என் வாழ்நாளில் வேரெங்கும் சாப்பிட்டதில்லை என்று புருடா விடப்போவதில்லை. ஆனால், இதுபோன்ற ஒரு பார்லருக்கு சென்று சாப்பிடுவது இதுதான் முதல்முறை. அதன்பிறகு, ஒரு ஷேர் ஆட்டோவை பிடித்து அண்ணா யுனிவர்சிட்டி வந்து சேர்ந்தோம். எனக்கு இந்த ஷேர் ஆட்டோ பயணமும் புதுசுதான். மாலை 4.30 மணி அளவில் 5 மணி பேட்ச்சை உள்ளே அழைத்தனர். அந்த கலந்துரையாடலின் அமைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முதல் ஒரு பெரிய அறையில் சீரியல் நம்பர் குடுத்து அதன்படி அமர வைத்தார்கள். அதன்பிறகு, சர்டிபிகேட் வெரிபிகேஷன் முடித்து கடைசியாக கலந்துரையாடல் நடக்கும் இடத்திர்க்கு சென்றோம். அங்கு ஒரு கணினி முன்பு உட்காரவைத்து, உங்களுக்கு பிடித்த கோர்ஸ் மற்றும் கல்லூரியை தேர்வு செய்ய சொன்னார்கள். எனக்கு பிடித்த என்று சொல்லமுடியாது வேரு வழியில்லாமல் B.E. MECHANICAL கோர்ஸையும், என் சொந்த ஊரான ஓசூரிலுள்ள கல்லுரியையே தேர்வு செய்தேன். சற்று நேரம் ஓர் இடத்தில் அமரவைத்து காத்திருக்க சொன்னார்கள். பின்னர் ஒவ்வொருவரின் பெயரையும் அழைத்து அலாட்மெண்ட் ஆர்டரை கொடுத்தார்கள். என் பெயரையும் அழைத்து அந்த அலாட்மெண்ட் ஆர்டரை கையில் கொடுத்தபோது எனக்கு ஏற்பட்ட ஆனந்தம் என் வாழ்வில் ஒருபோதும் ஏற்பட்ட்தில்லை, அதுதான் கடைசி என்று கூட சொல்லலாம். அதே சந்தோஷத்தில் அன்று இரவு நிம்மதியாக உரங்கினேன்.

     அடுத்த நாள் காலையில் எழுந்து சர சர வென்று தயாராகி அறையை காலிசெய்து அடுத்து எங்கு செல்வது என்று யோசித்து, மஹாபலிபுரம் போவோம் என்று முடிவு செய்து அதர்க்கான பேருந்து எங்கு வருமென்று விசாரித்து அங்கு காத்திருந்தோம். பாண்டிச்சேரிக்கு செல்லும் பேருந்தில் ஏறி மஹாபலிபுரம் சென்றோம். பேருந்து சற்று தூரம் கடந்தப்பின், சென்னையின் MOST HAPPENING PLACE என்று சொல்லக்கூடிய E.C.R. ரோடு வந்தடைந்தோம். இட்துபுரமாக நீண்ட கடற்கரையை ரசித்தவாரே பயணித்தேன். நாங்கள் சென்றது பாண்டிச்சேரி பேருந்து என்பதால் மஹாபலிபுரத்துக்கு சற்று முன்பாகவே இறங்கி விட்டோம். கடற்கரை வழியாகவே சென்று மஹாபலிபுரம் கோயிலை சென்றடைந்தோம். அன்று காலை ஏனோ எங்கள் இருவருக்கும் அந்த இடத்தை ரசிக்க விருப்பமில்லாமல் போனதால் மீண்டும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திர்கே திரும்பினோம். இத்துடன் என் முதல் சென்னை பயணம் முடிவுக்கு வந்தது.  

இரண்டாம் முறை:

     என் முதல் பயணத்தில், சென்னை மாநகர பேருந்து, ஷேர் ஆட்டோ, லோக்கல் ட்ரெயின் போன்றவை ஒரு புதிய அனுபவமாக இருந்தது. இவை அனைத்தும் என் இரண்டாம் பயணத்தின் போது பழகிவிட்டது. இந்த இரண்டாம் முறை பயணம் என் தம்பி, அதாவது என் அத்தை பையன் நவீன் உடைய பொறியியல் கல்லூரிக்கான சேர்க்கை கலந்துரையாடலில் கலந்துக் கொள்வதர்க்காக வந்தேன். இந்த பயணத்தின் போது எந்த சுவரஸ்யமான விஷயமும் நடக்கவில்லை என்றாலும், ஒரு கசப்பான அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.

நான், நவீன், என் அத்தை மூவரும் அன்று மாலை சென்னை வந்து சேர்ந்து நேராக அண்ணா யுனிவர்சிட்டி சென்றோம். அங்கு சற்று நேரம் இருந்து எந்த கல்லூரியில் எந்த கோர்ஸை செலக்ட் செய்யலாம் என்று ஒரு நீண்ட ஆராய்ச்சி செய்து முடித்தோம். ஏனென்றால் அடுத்த நாள் காலை 9 மணி பேட்ச்தான் என் தம்பிக்கான கலந்துரையாடல் நேரம். அதைமுடித்து அன்று இரவு தங்குவதர்கான ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தோம். நான் எனக்கான கலந்துரையாடலுக்கு வந்தபோது தங்கியிருந்த ஹோடலுக்கே செல்வோம் என்றேன். அடையார் பஸ் டர்மினஸ் எதிரில் உள்ள STAY & TOUR HOTEL சென்று ரூமை பற்றி விசாரித்தோம். என் அத்தைக்கு ரூம் வாடகை அதிகம் என பட்டதால் வேறு இடத்தில் விசாரிப்போம் என்றாள். இங்கிருந்துதான் ஆரம்பித்தது அந்த கசப்பான அனுபவம். இன்னும் பக்கத்தில் உள்ள சில ஹோட்டல்களில் விசாரித்தும் கட்டுப்படி ஆகவில்லை என் அத்தைக்கு. ஒருவரிடம் விசாரித்தோம், இங்கு மிக குறைவான வாடகையில் அறைகள் கிடைக்குமா என்று, அதர்க்கு அவர் – இப்படியே ஒரு இரண்டு தெரு தள்ளிப்போனால் நிறைய அறைகள் மளிவான வாடகைக்கு கிடக்கும் என்றார். நண்பர்களே, இன்னொறு விஷயம் சொல்லிக்க விரும்புகிறேன் இதை முதல் பயணத்தின் போதே சொல்ல நினைத்தேன் மறந்துவிட்டேன். அது என்னவென்றால், சென்னையில் யாரிடம் அட்ரஸ், வழி கேட்டாலும் மிக நிதானமாகவும், பணிவாகவும் உதவுகின்றனர், நான் பார்த்தவரை அப்படிதான். சரி வாங்க மீண்டும் அலைவோம், நான்  என் அத்தையிடம் அவ்வளவு தூரம் செல்ல வேண்டாம் வேறு வழியில்லை நாம் முதல் சென்ற ஹோட்டலிலேயே தங்கிக் கொள்ளலாம் என்றேன். என் பேச்சை கேட்கவில்லை என் அத்தை.

 அந்த மனிதர் சொன்ன வழியில் நடக்க ஆரம்பித்தோம், அவர் சொன்னதோ இரண்டு தெருதான் ஆனால் நாங்கள் நான்கு, ஐந்து தெருக்கள் தாண்டி வந்தும் அவர் கூறிய இடம் வரவில்லை. இன்னும் சற்று தூரம் நடந்த பிறகு ஒரு இட்த்தில் விசாரித்தோம். அவரும் எத்தனைபேர், எதர்க்காக வந்திருக்க்கிறீர்கள் என்று விசாரித்தார். மேல் மாடிக்கு கூட்டி சென்று அறையை காண்பித்தார்கள். என் அத்தைக்கு இப்போ அறை வாடகை கட்டுப்படி ஆனாலும், அறை ரொம்ப இருட்டா இருக்கு, ரொம்ப அளுக்கா இருக்குனு சொன்னாள். மளிவா போனா இப்படித்தான், பின்ன என்ன அரண்மனையா கொடுப்பார்கள் என்று நான் சற்று டென்ஷன் ஆனேன். இப்பவும் நான் அதே இட்த்திர்க்கே சென்றுவிடலாம் என்றேன், அப்போதும் என் பேச்சை கேட்கவில்லை. அந்த அறை வேண்டாமென்று அந்த இட்த்தை காலி செய்தோம்.

இன்னோறுவர் நாங்கள் அலைந்துக் கொண்டிருப்பதை பார்த்து, எனக்கு ஒரு தெரிந்த இடம் இருக்கிறது வாருங்கள் கூட்டி செல்கிறேன் என்றார். அவரை பின் தொடர்ந்து நடந்தோம். அவர் கூட்டி சென்ற இடம் சந்து சந்தாக இருந்தது, வழியில் இருந்தவர்களின் நோட்டம் எல்லாம் நம் மூவர் மேலையே இருந்தது. எனக்கு என்னவோ ஒரு தப்பான இட்த்திர்க்கு வந்துவிட்டோமோ என்று தோன்றியது. அது ஒரு மென்ஷன் போல தெரிந்தது, அதில் ஒரு அறையை காண்பித்தனர் அதுவும் நாங்கள் பார்த்த முதல் அறை போலவே இருட்டாகவும், அளுக்காகவும் இருந்தது. எனக்கும் என் தம்பிக்கும் அவன் அம்மா செய்யும் செயல்கள் சற்றும் பிடிக்கவில்லை, அந்த அறையும் பிடிக்கவில்லை என்று வந்துவிட்டோம். என் அத்தை சரி வாங்க நீ சொன்ன இட்த்திர்க்கே செல்வோம் என்றாள். எனக்கும், என் தம்பிக்கும் கோபம் கோபமாக வந்தது வேறு வழியில்லாமல் வந்த வழியிலே மீண்டும் நடந்தோம்.

சற்று தூரம் நடந்த பிறகு மீண்டும் என் அத்தை தன் வேலைய ஆரம்பித்தால், ஒரு ஜெண்டில் மேனிடம் இங்கு தங்குவதர்க்கு மளிவான விலையில் அறைகள் கிடைக்குமா என்று விசாரித்தாள். அவரும் நீங்கள் யார்? எதர்க்காக வந்திருக்கிரீர்கள்? என்று விசாரித்தார். அதன் பிறகு, என் அத்தை இங்கு ஒரு ரூம் பார்த்தோம் 600 ரூபாய் வாடகை சொல்றான் என்றாள். அதர்க்கு அந்த ஜெண்டில் மேன், அத 600 ரூபாய்னு பாக்காதிங்க ஆளுக்கு 200 ரூபானு பாருங்க, இங்க தங்கினால்தான் உங்களுக்கு கிட்ட அப்படி இப்படி என்று விளக்கிக் கொண்டிருந்ததை கேட்டு என் அத்தை மண்டைய ஆட்டி ஆட்டி ஆமாங்க, கரக்ட்டுங்க என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அந்த ஜெண்டில் மேனிடம் போதனை பெற்ற என் அத்தை, வாங்க அங்கையே போய் தங்கிக்கொள்வோம் என்றாள். எனக்கு வந்துச்சு பாருங்க கோபம், சரமாரியாக திட்டி விட்டு மீண்டும் நாங்கள் முதலில் விசாரித்த ஹோட்டலுக்கே சென்று தங்கினோம். நம்மில் சில பேர் இப்படிதான் இருக்கிறோம் என்ன செய்வது, யாராவது ஒரு மூன்றாவது மனிதர் சொன்னால்தான் புரிகிறது. இதுபோன்ற அலைச்சலை என் வாழ்நாளில் வேரென்றும் அனுபவித்ததில்லை. என் நண்பர்கள் பலப் பேர் சொல்வார்கள் இதை எல்லாம் ஒரு நல்ல அனுபவமாக எடுத்துக் கொண்டு ரசிக்க பழக வேண்டும் என்று.

மறு நாள் காலையில் என் தம்பியின் கலந்துரையாடலில் கலந்துக் கொண்டு அவனுக்கு பிடித்த, ச்சே இங்கும் பிடித்த என்று சொல்ல முடியாது. என்னை உட்பட பலப்பேரின் வழிகாட்டுதலில் தன் விருப்பமாக மாற்றிக் கொண்ட கோர்ஸ் மற்றும் கல்லூரியை தேர்வு செய்தான். அங்கு எல்லா வேலைகளும் முடித்துவிட்டு, சற்று நேரம் கிண்டி நேஷ்னல் பார்க்கில் சுற்றி விட்டு,(இந்த அளவுக்க ஒரு ஒரு மட்டமான நேஷ்னல் பார்க் நான் எங்கும் பார்த்ததில்லை) ஊருக்கு வந்து சேர்ந்தோம். இம்முறை சற்று கலைப்புடனும், நிறைய வெறுப்புடனும்.

மூன்றாம் முறை:

     இந்த மூன்றாம் முறை பயணம் என் வாழ்நாளில் மறக்க முடியாத பயணம், நான் மிகவும் சந்தோஷமாக இருந்த தருணம். இந்த ‘மிக சந்தோஷம்எதற்கு என்று உங்களுக்கு கடைசியில் புரியும். இந்த பயணம் ஆரம்பிப்பதர்க்கு முன்னர் ஒரு சமாச்சாரம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஏதாவது ஒரு மிக யதார்த படமோ, உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கும் படங்களிலிலோ, அந்த படத்தை ஆரம்பிக்கும்போது ஒரு ஸ்லைடு பொடுவார்கள். ‘இந்த படத்தின் மூலம் யார் மனதையும் புன் படுத்தாமல்.....................என்று. அதுபோலவே, இந்த பயணத்தை ஆரம்பிப்பதற்க்கு முன்பு நானும் இதுபோன்ற ஒரு ஸ்லைடு போட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

“இனிமேல் வரப்போகும் என் பயண அனுபவத்தில் சில நண்பர்களின் பெயர்கள், அவர்களிடம் இருந்து இந்த பயணத்தின்போது நான் கற்றது, வெறுத்தது, மேலும் பல நல்ல அனுபவங்களை மிக யதார்தமாக அதாவது, இந்த பயணத்தின் போது என்னென்ன நடந்த்தோ அதை அப்படியே பதிவு செய்ய விரும்புகிறேன். இதன் மூலம் யார் மனதையும் புன் படுத்தும் நோக்கம் எனக்கில்லை. அதை மீரியும் உங்களை ஏதாவது காயப் படித்திருந்தால் மன்னித்துவிடுங்கள்.

     நினைச்சதை எழுத என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்குது பாருங்க. சரி வாங்க நம்ம பயணத்தை ஆரம்பிப்போம். இந்தமுறை என் சென்னை பயணம் ஒரேஒரு நாள் மட்டும்தான். நானும் எனக்கு மிகவும் பிடித்தமான நண்பன் சூர்யாவும்தான் இந்த பயணத்தின் நாயகர்கள். நாங்கள் இருவரும் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து கொண்டிருந்தபோது, இந்த ப்ராஜக்ட்டுனு ஒன்னு வருமில்லங்க அது விசயமாக ஒரு கன்ஸல்டன்சியில் விசாரிக்க சென்றதுதான் இந்த பயணம். நானும் சூர்யாவும் விடியர்காலை ஒரு 5.30 மணியளவில் ஓசூரிலிருந்து சென்னைக்கு பஸ் ஏறினோம். நண்பன் சூரிய குமார் பற்றி ஒரு சிரிய அறிமுகம். இருங்க, இருங்க அதர்க்கு முன்னாடி நட்பை பற்றிய என் புரிதலை சொல்லிவிடுகிறேன்.

FRIENDSHIP என்பதன் பொருளை ஒரே வார்த்தையில் கூறவேண்டுமென்றால் அதை SHARING என்று சொல்ல்லாம். உங்கள் நண்பனுக்கு தெரியாததை நீங்கள் ஸேர் செய்யும்போதும், உங்களுக்கு தெரியாததை உங்கள் நண்பன் ஸேர் செய்யும்போதுதான் இருவருக்கிடையிலும் உள்ள நட்பின் பிணைப்பு வழுவடைகிறது, என்பது என் கணிப்பு. அப்படி நானும், சூர்யாவும் நிறைய பகிர்ந்துக் கொண்டதால்தான் ஒரு இணைப்பிரியாத நட்பு நம் இருவரிட்த்தில் இன்றும் இருக்கிறது. என் கல்லூரி நண்பர்கள் நாங்கள் இருவரும் பேசிக்கொள்வதை பார்த்து ‘ரெண்டு பேரும் ஒன்னு கூடிட்டாய்ங்கடாஎன்று கேலி செய்வார்கள். நிறைய பேர் பார்த்து பொறாமை பட்டதும் உண்டு. நாம் அனைவரும் நம் சிறு வயதிலிருந்து பல நண்பர்களை கடந்து வந்திருப்போம். என்னை பொறுத்த மட்டில் கல்லூரியில் உண்டாகும் நட்புதான் உன்னதமாகவும், உண்மையாகவும் இருக்கும் என நம்புகிறேன். அப்பேர்ப்பட்ட நட்பு எனக்கு கல்லுரியில் சூர்யா உட்பட இன்னும் சில நண்பர்களிடம் உணர்ந்தேன். இப்போ சூர்யாவிடம் வருவோம், இவன் நல்லவனா கெட்டவனா என்பதை இங்கு பேசப்போவதில்லை. சொல்லப்போனால் ஒருவரை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்றுதான் சொல்லுவேன். ஏனென்றால் நம் வாழ்கையில் பலக் கேள்விகளுக்கு விடை தெரியாமலையே வாழ்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறோம் அப்படி இருக்கும் போது எப்படி இன்னொருவரை பற்றி கணிக்க முடியும்.

இதை பற்றி பேசும்போது நான் சமீபத்தில் பார்த்த ‘தீன்பத்திஎன்ற ஹிந்தி திரைப்படம் நினைவிக்கு வருகிறது. இதில் அமிதாப் பச்சன், மாதவன் போன்றவர்கள் நடித்திருப்பார்கள். பொதுவாக, நான் ஒரு படம் பார்க்கும்போது அதுல வரும் வசனங்களை கூர்ந்து கவனிப்பேன். அப்படி இந்த படத்தில் என்னை கவர்ந்த வசனத்தை இங்கு சொல்ல ஆசைப் படுகிறேன். இந்த பட்த்தில் அமிதாப் ஒரு கணித மேதை, அவர் செய்யும் ஆராய்ச்சிகளை தொடர்ந்து நிராகரித்து வருவார்கள். ஒரு நாள் அவர் கல்லூரில்யுள்ள சக பேராசிரியர் ஒருவர் அமிதாபின் ஆராய்சியை படித்துவிட்டு நெகிழ்ந்து போய், கீழ் வருமாறு உரையாடுவார்கள்..............

சக பேராசிரியர்: கடவுள் இருக்கிறார் என்றால் அவரும் கண்டிப்பாக        கணித வாதியாகதான் இருக்க முடியும். பாருங்கள் அவருடைய படைப்புகளை, நம் வாழ்கையின் அடுக்குகளை பாருங்கள் ஒரு சமன்பாடு(EQUATION) மாதிரி.

அமிதாப்: கடவுள் ஒரு கணிதவாதி என்றால் நம் அனைத்து கேள்விகளுக்கும் விடை இருந்திருக்க வேண்டும், ஆதாரம்(PROOF) இருந்திருக்க வேண்டும், சமன்பாடு இருந்திருக்க வேண்டும். பின்னர் ஆதாரமும், சமன்பாடும் இருக்கிறது என்றால் இங்கு யார் கடவுள்?
நாம் இறந்தப் பிறகு வேரென்ன இருக்கிறது? இறப்புதான் சமன்பாடு. பின்னர், பணம் என்பது என்ன? அதில் ஒரேஒரு எண் தான் தவரானது, பசி. பசி தான் பணம்.

     நான் இங்கே எதற்கு இதை குறிப்பிடுகிறேன் என்றால். எனக்கே தெரியலிங்க, பிடித்திருந்தால் எடுத்துக்கோங்க. நான் கடந்து வந்த நண்பர்கள் அனைவரும் ஒரே மாதிரியாகதான் என்னிடம் பழகினார்கள் ஆனால் இதில் சூர்யா மட்டும் சற்று வித்யாசமானவன். சூர்யாவிடம் இருக்கும் இந்த வித்யாசம்தான் என்னை மிகவும் கவர்ந்த விஷயம். அது என்ன வித்தியாசம் என்று நான் இங்கு சொல்ல விரும்பவில்லை, போக போக உங்களுக்கே தெரிய வரும். ஹலோ, சார் டிக்கெட் எடுங்க சார் டிக்கெட்டு, ஹோ! நாங்க ரெண்டு பேரும் பஸ் ஏறிட்டோம் இல்லையா..... MIND VOICE: (ஆமாண்டா டேய்...censored மொக்க போடாதடா) சென்னைக்கு ரெண்டு டிக்கெட் கொடுங்க; சென்னைக்கு எத்தனை மணிக்கு ரீச் ஆகும்; மதியம் 12.30 மணிக்கா; ஒ.கே;

பொதுவா நானும் சூர்யா ஒன்னு சேர்ந்தோம்னா நிறைய நேரம் சினிமா பத்திதான் பேசுவோம். அப்படி வாழ்கைக்கு தேவைப்படாத பல விஷயக்களை பேசிகிட்டும், சிரிச்சுக்கிட்டும் பயணத்தில் இருந்தோம். பயணத்தின் நடுவே சூர்யாவின் பள்ளி கால தோழன் சபரி அவர்கள் போன் செய்தார். இந்த பயணத்தைப் பற்றி சபரியிடம் கரைத்துக் கொண்டிருந்த சூர்யா, என்ன ஆச்சுனு தெரியல தீடீர்னு சூர்யா சொன்னான், ‘டேய் சபரி உங்கூட ட்ராவல் பன்றதவிட ப்ரவீன்கூட ட்ராவல் பன்றதுதான் எனக்கு ரொம்பபிடிச்சிருக்கு டானு சொன்னான். அப்போ எனக்கு ஒரு ப்ளாஷ்பேக் தோனிச்சுங்க, அதாவது இதே சூர்யா இதே ப்ராஜக்ட்டுக்காக ஒரு நாள் பெங்களூருக்கு சென்றிருந்தோம். அங்கு எதுவும் எங்களுக்கு சாதகமாக அமையாததால் மீண்டும் ஓசூருக்கே திரும்பினோம். ஓசூர் வந்து சேர்ந்ததும் என்னை பார்த்து ஒரு வார்த்தை சொன்னான் பாருங்க எனக்கு அப்படியே மனசு குளிர்த்துப் போச்சுங்க. அப்படி என்ன சொன்னானு கேட்கிரீங்களா, ‘டேய் என்ன நாய் மாதிரி அலைய விட்டுட்டியேடா’. இப்போ தெரியுதுங்களா அவனுடைய வித்தியாசம். ஆனா, நான் சொல்ல வந்த வித்தியாசம் இது இல்லை. SURYA MIND VOICE: (டேய் போதும்டா என்ன புகழ்ந்தது) அப்படியே மொக்க போட்டுக் கொண்டே வந்தபோது சென்னை நகரத்துக்கு உள்ளே நுழைந்தோம். நாங்கள் இறங்க வேண்டிய இடம் வடபழனி, இந்த பேருந்தும் அதே வழியில் சென்றதால் அங்கையே இறங்கி கொண்டோம்.

இப்போ, அந்த கன்சல்டன்சி முகவரியை தேடி நடக்க ஆரம்பித்தோம். எப்படியோ உருண்டு, பெரண்டு அந்த கன்சல்டன்சி வந்து சேர்ந்தோம். அங்கு ஒரு ஜெண்டில் மேன் எங்க ப்ராஜக்ட் பற்றி கிளாஸ் எடுக்க ஆரம்பித்தார். நாங்களும் எங்களுக்கு இருந்த டவுட் அனைத்தையும் கிளியர் செய்து கொண்டோம். இங்க கேட்ட டவுட் எல்லாம் ஒரு டவுட்டானு எனக்கு இப்போ டவுட்டா இருக்கு. ஏனா, இந்த ப்ராஜக்டை கடைசியா கல்லுரியில் சப்மிட் பன்னப்போ அங்க வந்திருந்த எக்ஸ்டர்னல் ‘நீங்க இந்த ப்ராஜக்டை மெய்யாலுமே செய்தீர்களானு எனக்கு டவுட்டா இருக்குனு சொன்னார். நாங்க இங்கு வந்தபோது இந்த கன்சல்டன்சியின் மேலாளர் இருக்கவில்லை. சேரி அவரையும் பார்த்துட்டு போவோமேனு காத்துக் கிடந்தோம். அவரும் வந்தாரு, அவருடன் டிஸ்கஸ் செய்யும்போது அவர் சொன்னார், ‘சார் ரே எல்லாத்தையும் சொல்லிக் கொடுப்பாருனு நீங்க சும்மா இருக்க்கூடாது; சார் ர நீங்க ரொம்ப தொந்தரவு பண்ணக்கூடாது; சார் ரொம்ப பிஸி’னு இப்படி வார்த்தைக்கு வார்த்தை எங்கள சார், சார் னு புகழ்ந்து தள்ளிட்டாரு. VADIVELU VOICE: ( (பளார்) சார் னு யாரடா சொன்ன; சார் னு அவர சொன்னாருங்க)

சார்ரோட டிஸ்கஷன் முடித்து விட்டு அடுத்து எங்கபோலாம்னு யோசித்துக் கொண்டிருந்தான் சூர்யா. ‘டேய் முதல் சாப்பிட போலாண்டானு சாப்பிட அழைத்து சென்றேன். அவன் நேரா வடபழனி சரவண பவனுக்கு சென்றான். நான் அவனை மறைத்து ப்ரேக் போட்டு நிருத்தி, ‘டேய் இங்க வேணாம்டா ரொம்ப காஸ்ட்லியா இருக்கும் போலஅதெல்லாம் ஒன்னும் இல்லடா என்ன ஒரு மீல்ஸ் 70 ரூபாய் இருக்கும் அவ்வளவுதான் என்றான். சரி அவன நம்பி உள்ளபோனேன். அங்கு போய் பார்த்தா ஒரு சாப்பாடு 140 ரூபாய் னு போட்டிருக்கு, என்னை பாத்து சூர்யா ஹிஹிஹி னு இழித்தான். உள்ள வந்தாச்சு எதாவது சாப்பிட்டுதான் ஆகனும், அப்படியே உணவு பட்டியலை பார்த்து வந்தோம் சாம்பார் சாதம் 50 ரூபாய் என்றிருந்தது. அதையே இருவரும் ஆர்டர் செய்தோம். நான் பெங்களூரில் பல முறை பிஸிபேளேபாத் சாப்பிட்டு இருக்கிறேன். அதைவிட மிக அருமையாக இருந்தது இந்த சரவண பவன் சாம்பார் சாதம். தெங்க்ஸ்! சூர்யா.

சூர்யா அடுத்த ப்ளான் போட ஆரம்பித்துவிட்டான். சூர்யா ப்ளான் போடுவதில் கில்லி, இந்திய அரசாங்கம் கூட இவனை நம்பி ஐந்து ஆண்டு ப்ளான் போடகொடுக்கலாம் அவ்வளவு தெளிவாக ப்ளான் போடுவான். என்ன சூர்யா மறுபடியும் களாய்த்துவிட்டேனா?. அவனுடைய அடுத்த ப்ளான் மெரினா பீச். நான் முதல் முறை வந்தபோது பார்த்த மெரினாவை விட இந்தமுறை பல மாற்றங்களுடனும் மிக அழகாகவும் தென்பட்டது. கொஞ்ச நேரம் மெரினாவை ரசித்தப்பிறகு சூர்யா அவனுடைய அடுத்த ப்ளானை சொன்னான், சிட்டி செண்டர் போவோமா, இங்கிருந்து கிட்ட்தான், ‘JUST A WALKABLE DISTANCE’ என்றான். இதையும் நம்பி அவனை பின் தொடர்ந்தேன். நடந்தோம், நடந்தோம் நடந்துக் கொண்டே இருந்தோம் இன்னும் சிட்டி செண்டர் வந்தபாடில்லை. ஒரு பெருசிடம் விசாரித்தோம்,  ‘சிட்டி செண்டர் எப்படி போகனும்க’,  ‘இப்படியே போனிங்கனா அந்த காந்தி சிலைகிட்ட ஒரு சிக்னல் வரும், அதற்க்கு நேரா இருக்க ரோட்டுல நடந்து போனிங்கனா சிட்டி செண்டர் வரும் என்றார். அவர் சொன்ன வழியில நடந்து சிட்டி செண்டர் வந்து சேர்ந்தோம்.

நான் இதுவரை பல மால்களுக்கு சென்றிருந்தாலும் இவ்வளவு வசிகரமான, அழகுனயம் கொண்ட மால்லை பார்த்ததில்லை. இதனுடைய இண்டிரியர்ஸ் எனக்கு பிடித்திருந்தது, ஜெர்மனி, ரஸ்யா போன்ற நாடுகளில் இருக்கும் கட்டிடங்கள் போல. அப்படியே அன்னார்ந்து பார்த்தபடி அந்த மால் முழுக்க சுற்றி திரிந்தோம். சுற்றி திரிந்த கலைப்பில் ஒரு இட்த்தில் பென்ச் போட்டிருந்தார்கள் அதன் மீது உட்கார்ந்தோம். இந்த பயணத்தின் ஆரம்பத்தில் நான் சொல்லியிருப்பேன் இல்லையா ‘மிகவும் சந்தோசமானதருணம் அது இங்கிருந்துதான் ஆரம்பமாகிறது. இந்த ஃபேஷன் ஷோக்களில் அழகிகள் ரேம்ப் வாக் செய்து வருவது போல், சென்னையில் உள்ள அத்தனை உயர்தர பெண்களும் இங்குதான் இருப்பார்கள் போல் இருக்கு. அவர்கள் எஸ்கலேட்டரில் ஏறுவதையும், இறங்குவதையும் ரசித்தவாரு சைட் அடித்துக் கொண்டிருந்தோம். என் வாழ்நாளில் இதுவரை வேரெங்கும் இதுபோல சைட் அடித்ததில்லை. ஒரு அரை மணி நேரம் சைட் அடித்திருப்போம் இல்ல சூர்யா?. பின்னர் இரவே வீடு திரும்ப வேண்டியிருந்ததால் அங்கிருந்து பிரிய மனதில்லாமல் வெளியே வந்தோம்.

நான் சொன்னேன், ‘டேய் நாம இவ்வளவு நேரமா வக்காந்து சைட் அடிச்சோமே யாராவது அதை கேமிராவில் பார்த்திருந்தால்’, இதைகேட்ட சூர்யா அப்படியே ஷாக் ஆயிட்டான். ஷாக் அடித்ததிலிருந்து வெளிய வந்தப்போ அவன் போன் அடித்தது. போனில் சூர்யாவின் சிறு வயது முதல் நீண்ட நாள் தோழியான ‘ஜோதி ப்ரியாபேசினால். அவனிடம் சற்று நேரம் பேசிவிட்டு என்னை பேச சொல்லி கொடுத்தான், இதற்க்கு முன்பே பல முறை பேசியுள்ளேன். நானும் என்னமா எப்படி இருக்க அப்படி இப்படினு நலம் விசாரித்துவிட்டு, நாங்கள் சைட் அடித்த அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டேன் அவளோ, ‘அனுபவி ராசா அனுபவிஎன்று சற்று பொறாமையுடன் கடித்தாள். ஏனா பொதுவா ஒரு பெண்னிடம்  இன்னோறு  பெண்ணை பற்றி உயர்த்தி பேசினாலே பிடிக்காது அதற்க்குதான் இந்த பொறாமை. அவளுக்கு டாட்டா சொல்லிவிட்டு, இரவு டிபன் சாப்பிட சிட்டி செண்டர் பின்புரம் இருந்த ஒரு சாதாரண ஓட்டலுக்கு சென்றோம். அது என்ன ஓட்டல் சூர்யா? எனக்கு மறந்துப்போச்சு? அங்கு சாப்பிட்டது மிகவும் திரிப்த்திகரமாக இருந்தது, மிக மளிவாகவும் இருந்தது. பின்னர் அங்கிருந்து கோயம்பேடு பஸ் பிடித்து பஸ் நிலையம் வந்து சேர்ந்தோம். அந்த ‘மிக சந்தோஷமானதருணத்தை நினைத்துக் கொண்டே இந்த பயணத்தை முடித்து கொண்டேன்.


நான்காம் முறை:
     இந்த நான்காம் முறை பயணத்திர்காக ஒரு பெரிய போரட்டமே நடந்தது என்று சொல்லலாம். நண்பர்கள் அனைவரும் கல்லுரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடும் வேட்டையில் இறங்கினோம். நண்பர்கள் ஒவ்வொருவராக வேலையில் சேர்ந்தனர். நானும் பெங்களூரில் ஒரு சாதரண கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். இதில் சூர்யா மட்டும் தன் தேடுதல் வேட்டைக்கான களமாக சென்னையை தேர்வு செய்தான். நண்பர்கள் அனைவரும் பணியில் அமர்ந்த பிறகு சென்னையில் ஒரு சந்திப்பு வைத்துக்கொள்வோம் என்று போன் செய்யும் போதெல்லாம் கரைத்துக் கொண்டிருப்போம். சூர்யாவும் ஒரு மென்பொருள் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தான். அதன் பிறகு சூர்யாவே பலமுறை ப்ளான் செய்தும் அதை அவனே நிருத்தமும் செய்து வந்தான். எனக்கோ இன்னொறு முறை எப்படா சென்னைக்கு போவோம் என்ற ஆர்வம். பல நாட்கள் இப்படியே கடந்து சென்றது.
ஒரு நாள் நானே முடிவு செய்து தீபாவளிக்கு ஒரு இரண்டு வாரத்திர்க்கு முன்பு சூர்யாவுக்கு போன் செய்து, ‘இந்த வார சனிக்கிழமை இரவு சென்னைக்கு வர்றேன் தீபாவளிக்கு பர்ச்சேஸ் செய்யனும்என்றேன், அவனும் வரச் சொன்னான். இந்த பயணத்தில் மூன்று நாயகர்கள்(ஒரு நாயகி!). அந்த மூன்று பேர், நான், சூர்யா, ஜோதி ப்ரியா. ஜோதி பற்றி ஒரு சிரிய அறிமுகம். சூர்யா வழியாகதான் ஜோதி எனக்கு அறிமுகமானாள். நாங்கள் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே ஜோதியிடம் பலமுறை போனில் பேசியிருக்கிறேன், இந்த பயணத்திர்க்கு முன்பு இரண்டு முறை நேரிலும் பார்த்து பேசியிருக்கிறேன். ஆனால், இது போன்ற நீண்ட நேர பயணம் மேற்கொண்டதில்லை. ஜோதியும் சூர்யா பணிப்புரியும் கம்பனியிலேயே சேர்ந்து சென்னை தி-நகரில் வசித்து வந்தாள். ஜோதிக்கு எனக்குமான முதல் முறை அறிமுகத்தை நீங்கள் அனைவரும் கண்டிப்பாக தெரிந்துக் கொள்ளவேண்டும். எப்பவும் சூர்யா அனைவரிடமும் மிக பாசமாக பழகுவதால் அவ்வப்போது சின்ன சின்ன சண்டைகள் வரும். அதுபோல ஒரு நாள் இவ்விருவரிடையில் நடந்த சண்டைக்கு, பஞ்சாயத்து செய்வதர்காக என்னை கோர்த்துவிட்டான் சூர்யா. இப்படித்தான் முதல் முறை அவளிடம் பேசினேன். இருவரையும் சமாதானப்படித்தி சமாதான பறவையையும் பறக்க விட்டேன். ஆனா, இதுக்கப்பரம் பாருங்க என்னை நிறைய தடவை பஞ்சாயத்து செய்யவே யூஸ் பண்ணிக்கிட்டாங்க இந்த இரண்டு பேரும். நான் அவளிடம் முதல் முறை பேசியபிறகு சூர்யாவிடம் ஜோதி சொன்னாலாம் ‘டேய் ப்ரவீன் பேசினது எனக்கு ரொம்ப பிடிச்சதுடாஎன்று. இது உண்மையா ஜோதி?
ஹோ! நான் இன்னும் இந்த பயணத்தை ஆரம்பிக்கவில்லையா சாரி, சாரி. சனிக்கிழமை இரவு சென்னைக்கு செல்ல தயாரானேன். சூர்யா, ஜோதி இருவருக்கும் போன் செய்து சென்னைக்கு கிளம்பிவிட்ட செய்தியை சொன்னேன். மேலும் ஜோதியிடம், இந்த பர்சேஸ்க்கு நீ கண்டிப்பா வரனும் ஏன்னா இந்த பர்சேஸ்ஸே என் வீட்டு குழப் பெண்களுக்கு சேலைகள் எடுக்கத்தான் என்று மிக பணிவுடன் கேட்டுக்கொண்டேன், அவளும் கண்டிப்பாக வருகிறேன் என்றாள். சரி வாங்க சென்னைக்கு பஸ் ஏறுவோம்.
ஞாயிற்று கிழமை அதிகாலை 4.30 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தேன். சூர்யா தங்கியிருக்கும்  இடம் வேளச்சேரி, அந்த மாநகர பேருந்தை பிடித்து அவன் வழிகாட்டிய இடத்தில் இறங்கி அவனுக்காக வழிமீது விழிவைத்து காத்திருந்தேன். சூர்யாவும் வந்து அவன் தங்கியிருந்த ஆனந்த் மர்க் ஆஸ்ரமத்தில் உள்ள தன் அறைக்கு அழைத்து சென்றான். ஆஸ்ரமத்தின் கேட் திரந்தவுடன் பைரவ் என்னை மிக பாசமாக வரவேற்றார். பைரவ் யாருன்னு கேட்குரீங்களா அவர் இந்த ஆஸ்ரமத்தின் செல்ல நாய் குட்டி. சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு, சுத்தபத்தமாக குளித்துவிட்டு ரெடி ஆனோம். இன்றைய ப்ளானை பற்றி டிஸ்கஸ் செய்ய சூர்யா ஜோதிக்கு போன் செய்தான். இவனும் ஏதேதோ ப்ளான் சொல்லியும் அவளுக்கு பிடிக்கவில்லை, ‘ஈவ்னிங் வேனா நா வரேன் நீங்க இப்போ போயிட்டுவாங்கஎன்று முடிவே செய்துவிட்டாள். இந்த பொன்னுகள கன்வீன்ஸ் பன்னி எங்கையாவது வெளிய கூட்டிகிட்டு போறதுக்குள்ள பசங்களோட பாடு திண்டாட்டம்தான். ‘டேய் அவ வரலனா என்னடா, வா நண்பா நாம போவோம்என்று அவனை சமாதானப்படுத்தி வெளியேரினோம்.
‘எக்ஸ்பிரஸ் அவன்யூசெல்வோம் என்று முடிவு செய்து மவுண்ட் ரோடுக்கு செல்லும் பேருந்தில் ஏறினோம். தீடீர்ரென்று ஒரு யோசனை வந்தது. மவுண்ட் ரோடில் ஆனந்த விகடன் ஆபிஸ் இருப்பதால் அங்கு சென்று ஏதேனும் சில புத்தகங்களை வாங்கி செல்வோம் என்றான். அதேபோல் மவுண்ட் ரோடு T.V.S ஸ்டாப்பில் இறங்கி ஆனந்த விகடன் அலுவலகத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். இன்னோறு விஷயம் சொல்ல மறந்துவிட்டேன், போன முறை பயணத்தின் போது வெறும் சினிமாவை பற்றி பேசினோம் என்று கூறியிருப்பேன் ஆனால், இந்த முறை அதில் நிறைய மாற்றம் இருந்தது சினிமா மட்டும் இல்லாமல் அரசியல், இலக்கியம், வாழ்வின் கஷ்டநஷ்டங்கள் பேசுற அளவுக்கு முதிர்ந்திருந்தோம். முக்கியமாக நிறைய புத்தகங்கள் படிக்க ஆரம்பித்திருந்தோம், நாங்கள் படித்த சில படைப்பாளிகளின் பெயர்கள்..... எஸ். ராமகிருஷ்ணன், சுஜாதா, சாரு நிவேதிதா, கல்கி, மதன், வைரமுத்து, தபு சங்கர் போன்ற தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை ஒருவொருக் கொருவர் பகிர்ந்துக் கொண்டு தொடர்ந்து படித்து வந்தோம். இதில் ஜோதி, தொடர்ந்து ரமணி சந்திரன் அவர்களின் புத்தகத்தை மட்டும் படித்து வந்தாள். என் வாசிப்பு பழக்கத்தை ஆரம்பித்துவைத்தது சூர்யா தான். அதற்கு என் சார்பில் கோடி நன்றிகள். ஆனந்த விகடன் அலுவலகத்திற்க்குள் நுழைந்தோம், அங்கிருந்த செக்யூரிட்டி யார் வேண்டும் என்று விசாரித்தார், ‘புத்தகம் வாங்க வந்தோம்இல்ல சார் இன்னைக்கு சண்டே லீவு என்றார். பெரும் ஏமாற்றத்துடன் அவ்விட்த்தை விட்டு நகர்ந்தோம்.
காலையில் ஏதும் சாப்பிடாததால் மதிய உணவை இங்கையே முடித்து கொள்வோம் என்றேன். அதே ரோட்டில் இருந்த ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தோம். அங்கு நான் பார்த்த புதுமையான விசயம் அந்த ஹோட்டலின் மேஜைகளில் வைத்திருந்த கண்ணாடி மக்கில் துளசி இலைகளை போட்டிருந்தார்கள். இதை நான் எங்கும் பார்த்ததில்லை, நல்ல முயற்சி. எனக்கு ‘நார்த் இண்டியன் தாலிஉனக்கு ‘சவுத் இண்டியன் தாலியே இருக்கட்டும். இரண்டு பேரும் ஆர்டர் செய்து சாப்பிட ஆரம்பித்தோம். என்னோடது கொஞ்சம் சுமாரா இருந்தது, சூர்யாவுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. கை கழுவி, பில்லை கட்டி வெளியே வந்தோம். ‘எக்ஸ்பிரஸ் அவென்யூநோக்கி மெதுவாக நடந்தோம்.  மிக பிரம்மாண்டமான சாப்பிங் மால், மிக நீளமாகவும் இருந்தது. இது போன்ற சப்பிங் மால்களுக்கு செல்லும் போது நம் அடுத்த தலைமுறையின் பொழுதுபோக்கு முளுக்க இதுபோன்ற மால்களில் தான் இருக்கும் என்பதை கணிக்க முடிகிறது. உள்ளே நுழைந்ததும் தரை தளத்தில் உள்ள ஒரு பொம்மை கடைக்கு அழைத்து சென்றான். உலகில் உள்ள அனைத்து பொம்மை வகைகளும் இங்கு இருப்பதாக தோன்றியது, அதுவும் வயது வாரியாக வேறு பிரித்திருந்தனர். அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு இதையல்லாம் நம்மால் கொடுக்க முடியவில்லை என்றால் நம்மை மதிக்கமாட்டார்கள் என்று தெளிவாக புரிந்தது. அப்படியே ஒவ்வொரு தளமாக எஸ்கலேட்டர் வழியாக சென்று சுற்றி திரிந்தோம். ஓர் இடத்தில் உட்கார்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டே சைட் அடித்து உடல் களைப்பை ரிப்ரெஷ் செய்து கொண்டோம். ‘ODESSEY’ புக் ஷாப் சென்று ‘சேத்தன் பகத்தின்R2020’ என்ற புத்தகத்தை வாங்கினோம். ஏற்கனவே அவருடைய  ‘ONE NIGHT @ CALL CENTER’ என்ற புத்தகத்தை படித்திருந்தேன். எங்களுடைய இந்த சின்ன ஷாப்பிங்கை முடித்தோம், எங்களுடைய அடுத்த ஸ்பாட் பெசண்ட் நகர் பீச்.
பீச்சிர்க்கு செல்ல பஸ் ஏறினோம் இந்த செய்தியை ஜோதியிடம் தெரிவித்து கொண்டான் சூர்யா, ‘நாங்க பீச்சிர்க்கு கிளம்பிட்டோம் மா நீயும் கரெக்டா வந்து சேர்ந்துடு. பஸ்ஸில் செல்லும்போது நண்பர்கள் பற்றியும், கல்லூரியில் நடந்த கலாட்டாக்கள் பற்றியும் பேசி கொண்டே வந்தோம். பெசண்ட் நகர் ஸ்டாப்பில் இறங்கிய உடன் ஒரு ஜீஸ் கடைக்கு சென்று, கிரேப் ஜீஸ் வித் ஜின்ஜர் வாங்கி மெதுவாக குடித்து வந்தோம் அந்த கசாயத்தை. ஒரு இரண்டரை மணி காத்திருப்புக்கு பிறகு வந்தாள் ஜோதி, என்ன ஒரு பங்சுவாலிட்டி பாருங்கள். அவளிடம் சிரிய சண்டையிட்டு, பீச் மணலில் நடக்க ஆரம்பித்தோம். சென்னையில் எந்த பீச்சக்கு சென்றாலும் ‘BALOON SHOOTING’ இருக்கும். நானும், சூர்யாவும் முயற்சி செய்தோம், ‘எவ்ளோ தம்பி’,  ‘ 20 ரூபாய்க்கு 15 குண்டு’, ‘அப்போ 10 ரூபாய்க்கு 7½ குண்டா?’, என்று அந்த பையனை களாய்த்தோம். 10 ரூபாய்க்கு 7 குண்டுகள் கொடுத்தான், அதில் நான் 4 குண்டு சுட்டு ஒரே ஒரு பலூனை மட்டும் வெடிக்க செய்தேன், அவன் மீதமிருந்த 3 குண்டுகளை காலி செய்தான். இவ்விருவருக்கும் கடல் நீரில் கால் நனைக்க விருப்பமில்லாத்தால் நான் மட்டும் சற்று நேரம் கடல் நீரில் கால் நனைத்து கடல் அழகில் லயித்து நின்றேன். கொஞ்ச நேரம் மூவரும் அவரவர் ‘லைப் எப்படி போயிட்டு இருக்குஎன்பதை பேசிக் கொண்டிருந்தோம். பின் மீன் சப்பிட எழுந்தோம், ‘அதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாராஎன்பது போல இங்கு வந்ததே இந்த மீன்களை ருசிக்கதான்.
சூர்யா, ஜோதி வழக்கமாக சாப்பிடும் கடைக்கு கூட்டி சென்றனர். மீன்களில் இவ்வளவு வெரைட்டி இருப்பது இங்குதான் பார்கிறேன். ஏதேதோ பெயர் வைத்த ஒரு நான்கு வெரைட்டி மீன்கள் சாப்பிட்டோம். அதில் எனக்கு பிடித்தது ‘கடமாஎன்னும் வகை அப்படியே உருளை கிழங்கு பொறியலை சாப்பிட்ட அனுபவம். மீன்களை ருசித்துவிட்டு அங்கிருந்து பிரிய மணமில்லாமல் பிரிந்தோம். ஒரு போன் கால் மூலம் ஒரு சனி வந்து சேர்ந்தது சூர்யாவுக்கு. அதை பற்றி இங்கு சொல்ல எனக்கு விருப்பமில்லை. அதனால் அவன் மிகுந்த மன உளைச்சலுக்கு உண்டானான். நானும், ஜோதியும் எவ்வளவோ தேட்ரியும் அவன் அதிலிருந்து வெளி வரவில்லை. இதே பெதட்ரலில் மூவரும் அடையாரில் ஒரு ஜீஸ் கார்னரில் மில்க் சேக் சாப்பிட்டோம், இது சூர்யாவுக்கு பிடித்தமான கடை, ஆனால் அன்று அவனுக்கு பிடிக்கவில்லை. ஜோதி பில் செட்டில் செய்ததும் அங்கிருந்து கிளம்பி நேராக தி-ந்கர் சென்றோம். ஜோதி தங்கியிருந்த இடம் தி-நகர் அவளை அங்கே இறக்கிவிட்டு டா டா சொல்லி மீண்டும் நாளை சந்திப்போம் என்று விடைபெற்றோம். வேளச்சேரிக்கு வந்து சேர்ந்து, அந்த முழு நாள் அலைந்த களைப்பில் அடித்து போட்டார்போல் உறங்கினேன்.
காலையில் கண் விழித்தவுடன் தான் நான் சென்னையில் இருக்கும் ஞயாபகமே வந்தது. சூர்யா உட்பட ஆஸ்ரமத்தில் வசிப்பவர்கள் பஜனை பாட ஆரம்பித்தார்கள். அவர்கள் பஜனை பாடுவதை கேட்டுக்கொண்டே உருண்டு, பெரண்டு இன்னும் கொஞ்ச நேரம் உறங்கினேன். அன்றைய தினம் தயாராகி திபாவளி பர்சேஸ்க்காக சென்னையின் சாப்பிங் ஸ்பாட் தி-நகருக்கு சென்றோம். அங்கே, ஜோதியும் எங்களுடன் வந்து சேர்ந்து கொண்டாள். ஜோதி தன் ரூம் மேட் ‘நந்தினியை அறிமுகம் செய்தாள், ஏதோ சுமாராக இருந்தாள். JOTHI MINDVOICE :(இது உனக்கே ஓவரா தெரியல) அவளுக்கு ஹாய்! பாய்! சொல்லிவிட்டு போத்தீஸ்கடையை நோக்கி சென்றோம். உள்ளே நுழையவே ஒரு போரட்டமாக இருந்தது, அவ்வளவு கூட்டம். உள்ளே நுழைந்ததும் தரை தளம் முழுக்க சேலைகளின் கடல்தான். நானும், ஜோதியும் அந்த சேலைகளின் கடலில் நீந்த ஆரம்பித்தோம், சூர்யா மட்டும் ஒரு வோரமாக நின்று கொண்டு வாழ்கையின் தத்துவத்தை ஆராய ஆரம்பித்தான். எப்பவும் எனக்குன்னு ஒரு டேஸ்ட் இருக்கும் அதை உடைத்தெரிந்தாள் ஜோதி, அவளுடைய டேஸ்ட் என்னுடையதை விட நன்றாக இருந்தது. அவள் ஒவ்வொரு சேலைகளாக எடுத்து என்னிடம் காண்பித்து என் விருப்பத்தை கேட்பாள். நானும் என் வீட்டு பெண்களின் தோழ் நிறத்திற்க்கு ஏற்ப அதை தீர்மானிப்பேன். அப்படி ஒவ்வொரு சேலையாய் பார்த்து பார்த்து தேடி எடுத்தோம். என் அம்மாவுக்கும், என் இன்னொறு உயிர் தோழன் ப்ரவீன் குமாரின் அம்மாவுக்கும் ஒரே டிசைனில் வேறு வேறு கலர்களில் இரண்டு சேலைகளும், அதை தவிர இன்னும் ஒரு ஆறு சேலைகள் மொத்தம் எட்டு சேலைகள் வாங்கினோம். இந்த கடையின் வர்க்கிங் ஸ்டரக்சர் என்னை மிகவும் ஆச்சர்ய படுத்தியது. அதாவது நீங்கள் இந்த தளத்தில் எந்த ஒரு பகுதியில் சேலைகளை எடுத்தாலும் அதற்கான பில்லை மட்டும் நம்மிடம் கொடுத்து விடுவார்கள். அந்த பில்களை கடைசியாக பில்லிங் கவுண்டரில் செலுத்தி, நீங்கள் வாங்கிய அனைத்து உடைகளையும் டெலிவரி கவுண்டரில் பெற்றுக் கொள்ளலாம்.  நான் வாங்கிய சேலைகள் அனைத்தும் என் பட்ஜெட்டிர்குள் வந்திருக்கிறதா என்று பார்த்து, பில்லை கட்ட சென்றேன். பில்லை கட்டி முடித்து டெலிவரி கவுண்டரில் நாங்கள் வாங்கிய எட்டு சேலைகளையும் சரி பார்த்து பெற்றுக் கொண்டோம். கட கட வென்று சற்று வேகமாகவே ஒரு 3 மணி நேரத்திர்க்குள் எங்கள் பர்சேஸை வெற்றிகரமாக முடித்து அந்த கூட்ட்த்தை விட்டு வெளியேறினோம்.
 மதிய சாப்பாட்டை முடித்துவிட்டு, ‘MURUGAN IDLI KADAI’ யில் ஜிகர்தண்டா நல்லா இருக்கும்னு சொன்னாங்க, ஜிகர்தண்டா குடிக்க அந்த கடைக்கு சென்றோம். மூன்று ஸ்பேஷல் ஜிகர்தண்டா ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்தபோது, அதில் சேமியா போன்று எதையோ போட்டிருந்தார்கள் அது என்னவென்று சூர்யாவிடம் விசாரித்தபோது ‘கடல் பாசிஎன்றான் நான் வியந்து போனேன். கடல் பாசிகூட சுவையா இருக்கே! நல்லா ரசித்து ருசித்து சாப்பிட்டு முடித்தோம். அடுத்த ப்ளான் கபாலீஸ்வரர் கோயிலை நோக்கி. கோயிலுக்கு சென்று கபாலீஸ்வரரை தரிசித்தோம். எப்பவும் ஜோதி நிறைய கேள்விகள் கேட்டு சூர்யாவை குடைந்துக் கொண்டே இருப்பாள், அப்படி அந்த கோயிலின் வறலாற்றை பற்றி சூர்யாவுக்கு தெரிந்த்தை பகிர்ந்துக்கொண்டான். இந்த கோயிலை விட்டு வெளியே வந்தபோது வெளிநாட்டு பள்ளி சிறார்கள் உள்ளே நுழைந்தனர். அனேகமாக சீன நாட்டை சேர்ந்தவர்களாக இருக்க கூடும். இந்த கோயிலுக்கு அருகாமையிலே ராமகிருஷ்ணர் மடம் இருந்தது. இங்கு செல்ல ஜோதி மிகவும் பிரியப்பட்டதால், சென்றோம். அங்கு மிக பெரிய மண்டபத்திர்குள் நுழைந்ததும் அமைதிநிலை தொற்றி கொண்ட்து. ஆண்கள், பெண்கள் தனி தனி வரிசையில் உட்கார்ந்து தியானித்து கொண்டிருந்தனர். அங்கு நிறைய புத்தகம் வைத்திருந்தார்கள் அதில் ராமகிருஷ்ண பரமஹம்ஸரை பற்றி விவேகாநன்தர் எழுதிய பாடல்களை படித்தவாரே அந்த சூழலை ரசித்து கிடந்தேன். அந்த அமைதி நிலையை விட்டு விடைபெற்றோம். இதுதான் இந்த பயணத்தின் கடைசி ஸ்பாட்டாக இருந்தது. அங்கிருந்து பக்கத்தில் இருந்த ஹோட்டலுக்கு சென்று நான் மசால் தோசையும், சூர்யா ஏதோ மஸ்ரூம் வகையில் வாங்கினான், ஜோதி ஜீஸ். அவள்தான் பில் பே பன்னா.   மீண்டும் தி-நகருக்கு பஸ் பிடித்தோம்.
இது பிரியபோகும் தருணம் என்பதால் ஜோதியிடம் கரைத்துக் கொண்டே வந்தேன். பேசிக்கொண்டிருந்தபோதே ஜோதி குறுக்கிட்டு, ‘ ப்ரவீன் நீ போன்லதான் நல்லா பேசுவ, நேர்ல் பார்த்தா பேச மாட்டேனு நினைச்சேன் ஆனா நேரிலும் நல்லாதான் பேசுற என்றாள். அப்போ எனக்கு ஒன்னு தோனுச்சு, யாராயிருந்தாலும் எதுல பேசினாலும் வாய்லதானே பேசுவாங்கனு. என்ன கொடுமை சார் இது! தி-நகர் வந்து சேர்ந்தோம், நாங்கள் பர்சேஸ் செய்த சேலைகள் அனைத்தும் ஜோதியின் அறையிலேயே வைத்து சென்றிருந்தோம், அதை கொண்டுவந்து கொடுத்தவளிடம் கை குலுக்கி, உன்னால தான் இந்த பர்சேஸ் வெற்றியடைந்த்து, நீ இல்லைனா இது சாத்தியமாயிருக்காது, அப்படி இப்படினு பொய் எல்லாம் சொல்லி அவள குஷிபடுத்தி இருவரும் விடைபெற்றோம். சூர்யாவின் அறைக்கு வந்து எல்லாத்தையும் பேக் செய்துக்கொண்டு வேளச்சேரியிலிருந்து கோயம்பேடுக்கு பஸ் ஏறினேன். ஜோதி, சூர்யாயிடமிருந்து விடைபெற்றாலும் இந்த முறை சென்னையிடம் இருந்து விடைபெற மனமில்லை. கோயம்பேடு போய் சேர்ந்ததும் ஒரு கனம் மீண்டும் சூர்யாவின் அறைக்கே சென்றுவிடலாமா என்றுகூட யோசித்தேன். இந்த செய்தியை என் மொபைலில் டைப் செய்து சூர்யா, ஜோதி இருவருக்கும் குறுங் செய்தி அனுப்பினேன்.
MESSAGE SENT SUCCESSFULLY ”

ஐந்தாம் முறை:
     ஏனோ நான்காம் முறை பயணம் எனக்கு நிறைவு தரவில்லை. இன்னும் இரண்டு நாட்கள் அங்கையே இருந்திருக்கலாமோ என்று தோன்றியது. அதே ஏக்கத்தோடும், எதிர்பார்ப்போடும் ஒரு மூன்று மாதங்கள் கழித்து சென்னைக்கு சென்றேன். நம் தினசரி அன்றாடத்தில் இருந்து வெளிவர இது போன்ற பயணம் அவசியம் என தோன்றுகிறது. இந்த முறையும் அதே தீரி ஹீரோஸ்(ஒன் ஹீரோயின்) தான் நான், சூர்யா, ஜோதி.
REALLY THREE YOUNG CHAPS YOU KNOW ”
            ஆனால் இந்த பயணத்தில் இன்னும் இரண்டு, மூன்று பேர் கலந்து கொள்வதாகதான் இருந்தது, சில காரணங்களால் அது நடக்கவில்லை. இம்முறை எனக்கு சென்னை மிக பழக்கமான இடமாக தெரிந்தது அதிலும் குறிப்பாக கோயம்பேடு பஸ் நிலையம், சூர்யாவின் வேளச்சேரி ஆசிரமம், ஜோதியின் தி-நகர் லேடீஸ் ஹாஸ்டல் இருந்த இடம் போன்றவை. நான் சென்னைக்கு சென்ற முந்தினம் இரவுதான் சென்னை வங்கி ஒன்றில் கொள்ளை அடித்த ஐந்து பேரை வேளச்சேரியில் வைத்து என்கவுண்டரில் சுட்டுதள்ளினார்கள் தமிழக காவல்துறை. இந்த செயல் என்னை மிகவும் பாதித்தது, காவல் துறையினரின் போக்கு ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை.

     இன்று அதிகாலை ஒரு 6 மணிக்கு வேளச்சேரி தண்டிஸ்வரம் என்ற நிறுத்தத்தில் காத்திருந்தேன் சூர்யாவுக்காக. அவனுடைய அறைக்கு செல்லும் வழி எனக்கு மறந்துவிட்டதால் சூர்யா வந்து அழைத்து சென்றான். மறுபடியும் என்னை மிக அன்போடு வரவேற்றார் ‘பைரவ்’. சற்று நேரம் ஓய்வு எடுத்து, குளித்து முடித்துப் ப்ளான் போட ஆரம்பித்தார் ‘ப்ளான் போடுவதில் கில்லிநமது அண்ணன் சூர்யா அவர்கள். இம்முறை ஏதாவது ஒரு படம் பார்க்க செல்வோம் என்று நான் முன்பே சொல்லியிருந்தேன். அந்நேரம்   The Artist ’ என்ற படம் ஹாலிவுட்டில் கலக்கி கொண்டிருந்தது ஆஸ்கர் விருது பெறவும் தேர்வு செய்யப்பட்டிருந்தது. இது ஒரு மெளன படம். நமக்கெல்லாம் ஆங்கிலப் படங்கள் சப் டைட்டல் இல்லாமல் பார்த்தால் புரியாதே. இது மெளன படம் என்பதால் அந்த பிரச்சனை இல்லை. இந்த படத்தை வைத்து இன்றைய ப்ளனை தயார் செய்யலாம் என்று இண்டர்நெட்டில் காட்சி நேரம், திரையரங்கம் இரண்டையும் தேடினோம். சென்னையில் இரண்டே திரையரங்கில்தான் இந்த படம் ஓடிக்கொண்டிருந்தது அதில் நாவலூர், A.G.S சினிமாவில் மாலை 4.30 மணி ஷோவிர்க்கே போவோம் என்று முடிவு செய்து தன் ப்ளானை தொடங்கினான். அப்பொழுது இந்தியாவின் மிக பெரிய தமிழ் எழுத்தாளர், ‘சாரு நிவேதிதாவின் தீவிர வாசகர்களாக இருந்தோம். அவரின் புத்தகங்களான ‘கடவுளும் நானும்’, ‘மனம் கொத்தி பறவைபோன்றவற்றில் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் பற்றியும், பட்டினத்தார் அடிகளின் கோயிலின் சிற்ப்புகளை பற்றி பதிவு செய்திருந்தார். இந்த கோயில்களுக்கு கண்டிப்பாக போக வேண்டும் என்பது சூர்யாவின் விருப்பம். திருவொற்றியூர், நாவலூர் இவை இரண்டும் நேர் எதிர் திசைகளில் இருந்ததால் இன்று கோயிலுக்கு செல்ல முடியாது என தோன்றியது. சரி காலை பொழுதை அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு சென்று செலவலித்து படம் பார்க்க செல்வோம் என்றான். இந்த திட்டத்தை வழக்கம்போல் ஜோதிக்கு போன் போட்டு சொன்னான். அவளும் வழக்கம்போல நான் வரவில்லை, படத்திர்க்கு நீங்களே போயிட்டு வாங்க என்றாள். இவள் இப்படி நிராகரிப்பதாள், இவளுக்கு என்னுடன் பொழுது கழிக்க விருப்பமில்லையோ என என் மனதில் ஓரமாக ஒரு சந்தேகம் இருந்தது. இதர்கிடையில் சூர்யா ஒரு பொய்ய சொன்னான், ‘ஏய் ஜோதி, நம்ம மூனு பேருக்கும் படத்திர்க்கு டிக்கெட் புக் பன்னியாச்சுஇதை நம்பி அவளும் ஒத்துக் கொண்டாள்.

இருவரும் தி-நகருக்கு சென்று அங்கிருந்த ஒரு ஹோட்டலில் காலை சிற்றுண்டியை சாப்பிட்டோம். அங்கே நான் சாப்பிட்டது ‘பொடி தோசை’, தோசையின் உள்பக்கத்தில் மிளகாய் பொடி தூவி கொடுப்பார்கள். மிக அருமையாக இருந்தது. சாப்பிட்டு முடித்து ஜோதியை பிக் அப் செய்ய அவளது லேடீஸ் ஹாஸ்டல் அருகில் காத்திருந்தோம். அதிக நேரம் எங்களை காக்க வைக்காமல் வந்துவிட்டாள். அடயார் செல்லும் பஸ்ஸில் ஏறி அண்ணா பல்கலைகழகத்தின் நிறுத்தத்தில் இறங்கி நூலகத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். இந்த முறை ஒரு படி மேல் சென்று நானும், சூர்யாவும் ப்ளாக் எழுத ஆரம்பித்திருந்தோம். சூர்யா தனது ப்ளாகில் எழுதிய நான்கு கட்டுரைகளில் கடைசியாக எழுதிய ‘ATOM ஆட்டம்என்ற கட்டுரைதான் என்னை மிகவும் கவர்ந்தது. அவ்வளவு நேர்த்தியான நடை, நான் அறியாத பல தகவல்கள், கட்டுரையின் அமைப்பு என்னை மிகவும் ஈர்த்தது. சூர்யாவின் ப்ளாகை படிக்க இந்த இனைப்புக்கு செல்லவும் http\\:suryakumardpi.blogspot.com. இவனுடைய அன்பு தொல்லையினால்தான் நானும் ப்ளாக் எழுத ஆரம்பித்தேன், நான் இதுவரை மூன்று ப்ளாக் எழுதியுள்ளேன் அதில்  இரண்டு, நான் எழுதிய ஹைக்கூ கவிதைகள் இதை படித்த அனேக பேர் என்னை வெகுவாக பாராட்டினார்கள். இந்த பாராட்டுக்கள் அனைத்தும் சூர்யாவையே சேறும். எங்கள் ப்ளாக்குகளை பற்றியும், இதுவரை நாங்கள் படித்த புத்தகங்கள் பற்றியும் நீண்ட தூரம் பேசிக் கொண்டே நூலகம் வந்து சேர்ந்தோம். சமிபமாக இந்த நூலகத்தை முதலமைச்சர் அவர்கள் சிறார்களுக்கான மருத்துவமணையாக மாற்றபோவதாக ஆனை பிறப்பித்திருந்தார்.

உள்ளே நுழைந்ததும் அந்த வசிகரமான கட்டிடம் தலை நிமிர வைத்தது. உள்ளே நுழையும் முன் ரிஜிஸ்டரில் கையொப்பம் இட்டோம். என் பெயரை சூர்யா எழுத, அவன் பெயரை நான் எழுத, ஜோதி பெயரை அவளே எழுத நுழைந்தோம் ஒரு பிரம்மாண்டமான உலக தரம் வாய்ந்த நூலகத்திர்க்குள். நான் இந்த நூலகத்திர்க்கு புதிது என்பதால் சூர்யா ஒவ்வொரு தளமாக அழைத்து சென்று காண்பித்தான். மொத்தம் எட்டு தளங்கள், ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு துறை சார்ந்த புத்தகங்கள். செளகரியமான இருக்கைகள், குளிருட்டப்பட்ட அறைகள், அமைதியான சூழல் இவை அனைத்தும் என்னை வியப்பில் ஆழ்தியது. இது போன்ற உலக தரம் வாய்ந்த நூலகம் நம் நாட்டில் வேரெங்கும் இருக்க வாய்பில்லை. இதை எப்படி முதலமைச்சர் அவர்கள் மருத்துவமணையாக மாற்ற முன்வந்தாரோ புரியவில்லை. சிரிது நேரம் தினசரிகளை வாசித்துவிட்டு, தமிழ் புத்தகங்கள் இருந்த இரண்டாம் தளத்திர்க்கு சென்றோம். தமிழின் அனைத்து வகை எழுத்தாளர்களின் படைப்புகளும் இங்கு கிடைக்க பெற்றன. சூர்யா எஸ். ராமகிருஷ்ணனின் பிரியன் என்பதால் அவரின் சிறுகதை தொகுப்பை படிக்க ஆரம்பித்தான். நான் அசோக மித்திரன் எழுதிய ஒரு சிறுகதை தொகுப்பை படிக்க, ஜோதி வழக்கம்போல ரமணிசந்திரனை வாசித்தாள். சிரிது நேர வாசிப்பிர்க்கு பிறகு ஜோதிக்கு மிகவும் பசி எடுத்ததால், நூலகத்தை பிரிய மனதில்லாமல் பிரிந்தோம். நான் மட்டும் சென்னையில் பணி புரிபவனாக இருந்திருந்தால் என் அனேக நேரத்தை இங்கையே கழித்திருப்பேன். பக்கத்தில் இருந்த ஒரு ஹோட்டலுக்கு சென்று மூவரும் மதிய உணவை முடித்துக் கொண்டோம். சாப்பிட்டது யாருக்கும் திரிப்திகரமாக இருக்கவில்லை. அடுத்து நாவலூர் செல்ல கோட்டுவப்புரம் புறநகர் ரயில் நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். எனக்கும், சூர்யாவுக்கும் ஜோதியை பார்க்க பாவமாக இருந்தது, அந்த கொளுத்துர வெயிலில் அப்படி அலைய விட்டோம். அப்போ நான் ஜோதியை பார்த்து கேட்டேன், ‘ நாங்கள் கம்பள் பன்னதுனாலதான் வந்தியா, இல்லை நீயே விருப்ப பட்டுதான் வந்தியாஇதற்கு சூர்யாவிடமிருந்து பதில் வந்தது, ‘டேய், ஜோதிய பத்தி ஒரு விஷயம் தெரிஞ்சுக்கோ அவ யார் கம்பள்சன்லையும் வர மாட்டா விருப்பமிருந்தால் மட்டும்தான் வருவாஎன்றான். இருந்தாலும் எனக்கு சந்தேகமாகவே இருந்தது, இவள் என்னை மதிச்சுதான் வந்தாளா, என்னை சக நண்பனாக ஏத்துக்கிட்டாளா என்று. கோட்டுவப்புரம் ரயில் நிலையம் வந்து சேர்ந்தோம். திருவான்மையூருக்கு மூன்று டிக்கெட் வாங்கி ரயில் வர காத்திருந்தோம். அடுத்த நொடியே ரயில் வர, அதில் ஏறி திருவான்மையூர் வந்து சேர்ந்தோம். இங்கிருந்து ஒரு பேருந்தை பிடித்தால்தான் நாவலூர் செல்ல முடியும். பேருந்து வந்ததும் நாவலூரை நோக்கி சென்றோம்.

மூவரும் சற்று களைப்பாக இருந்ததால் இருவரும் தூங்க ஆரம்பித்தனர். எனக்கு  பகலில் தூங்க பிடிக்கவே பிடிக்காது. அதனால்தான் எனக்கு சூர்யாவுடன் பகலில் பயணம் செய்யவே பிடிக்காது. ஒரு அரை மணி நேர பயணத்திர்க்கு பிறகு நாவலூர் வந்து சேர்ந்தோம். இறங்கியதும் தொண்டை தண்ணி வற்றி போனதால் ஜீஸ் சாப்பிட ஜீஸ் கடை தேடி அலைந்தோம். கடைசியாக ஒரு ஜீஸ் கடைக்கு வந்து சேர்ந்தோம். ஜோதி ஏன்தான் இவுங்க்கூட வந்தேனோ என்று கடுப்புல இருந்தாள். அவளை குளிர்ச்சி படுத்த ஜீஸ் ஆர்டர் செய்தோம், நான் கிரேப் ஜீஸ், ஜோதி ஆரெஞ்சு ஜீஸ், சூர்யா சாத்துக்குடி ஜீஸ்ஸில் உப்பு போட்டு குடித்தான். நான் எப்போதும் கிரேப் ஜீஸ்தான் குடிப்பேன் அதற்கு ஒரு காரணம் உண்டு, யாரோ சொன்னாங்க கிரேப் ஜீஸ் குடித்தால் தோழ் சிவப்பாக மிளிரும் என்று அதை நம்பி நானும் பல வருடங்களாக பருகிவருகிறேன் தோழ் செவத்தபாடில்லை. இருந்தாலும் நம்பிக்கை இழந்துடகூடாதுனு தொடர்ந்து பருகி வருகிறேன். ஜீஸ் சாப்பிடும்போது ஜோதி கேட்டாள், ‘இவ்வள்வு சீக்கிரமாக வந்துட்டோமே என்னடா பன்னப்போறோம்அதற்கு சூர்யா ‘ என்ன ஜோதி அந்த AGS சினிமா இருக்கும் காம்ப்ளக்ஸ்க்கு போயி படம் பார்க்க டிக்கெட் வாங்க வேண்டாமாஎன்ற உண்மைய போட்டு உடைத்தான். AGS சினிமா இருந்த காம்ப்ளக்ஸ்ஸின் பெயர் Corramandel Plaza, இது புதிதாக கட்டிய கட்டிடம் போல் தெரிகிறது. அங்கிருந்த கடைகள் இன்னும் காலியாகவே இருந்தது. மேல் தளத்தில் இருந்த சினிமா காம்ப்ளக்ஸ்க்கு சென்று டிக்கெட் வாங்கினோம்.

இன்னும் படம் ஆரம்பிக்க ஒரு மணி நேரம் இருந்ததால், தரை தளத்திர்க்கே வந்து ஓர் இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். இரண்டு நாட்களுக்கு முன் நடந்த என்கவுண்டரை பற்றி பேச்சு வந்தது. அப்போ நானும், ஜோதியும் என்கவுண்டருக்கு எதிராக குரல் கொடுக்க, சூர்யா அதை ஆதரித்து பேசினான். பேச்சின் நடுவில் சூர்யா என் பக்கம் திரும்பி ‘இந்த மூனு பேரு இப்படி ஒன்னா வெளியவந்து சுத்துரது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குடாஎன்றான். படத்திர்க்கு நேரமாக மீண்டும் மேல் தளத்திர்க்கு சென்று, ஸ்கிரீன ‘2ல் நுழைந்தோம். மிக அருமையான இண்டீரியர்ஸ், சொகுசான இருக்கைகள். சிரிது நேரம் கழித்து படம் ஆரம்பித்தது, இதுதான் என் வாழ்வில் பார்க்கும் முதல் மெளன திரைபடம்The Artist’, திரையரங்கில் பார்ப்பது.( கமல்ஹாசன் நடித்த ‘பேசும் படம்டிவி யில் பார்த்திருக்கேன் )  அது மட்டும் இல்லாமல் இது ஒரு கருப்பு, வெள்ளை படமும் கூட. படம் ஆரம்பித்தது நடிகர்கள் அனைவரும் அறிமுகமானார்கள். முதல் காட்சியிலையே இந்த பட்த்தின் கதாநாயகி என்னை மிகவும் ஈர்த்தாள், அப்படி ஒரு துள்ளல் நடிப்பு. சூர்யா, ஜோதி உங்கள் இருவருக்கும் இங்கு நடந்த ஒரு உண்மைய சொல்லியே ஆகனும். படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலே நான் தூங்க ஆரம்பித்துவிட்டேன், இதை நீங்கள் இருவரும் கவனிக்கவே இல்லை. ஃப்ர்ஸ்ட் ஆப் முடிந்து இண்டர்வல் விடும் வரை தூங்கிக் கொண்டுதான் இருந்தேன். அந்த சொகுசான இருக்கையும், ஏ.சி. குளிரும்தான் என்னை அப்படி தூங்க வைத்துவிட்டது. வாஷ் ரூமுக்கு சென்று முகம் கழுவிய பிறகுதான் தூக்கம் களைந்தது. ஆனால் இரண்டாம் பகுதி முழுவதும் பார்த்தேன், அட்டகாசமான நடிப்பு. அதில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி, கதாநாயகன் தன் படத்திர்க்காக நாயகியுடன் சேர்ந்து ஒரு பார்ட்டியில் நடனம் ஆடுவதுபோல் படம் பிடிப்பார்கள். அதை நிறைய டேக் எடுப்பார்கள், ஒவ்வொரு முறையும்  யாராவது ஒருவர் சொதப்புவார்கள் அதே காட்சியை மீண்டும் மீண்டும் எடுக்கும்போது நாயகன் தன் முக பாவனைகளை தயார் படித்துக்கொள்ளும் விதம்  அபாரம். படத்தின் இறுதி காட்சியாக ஒரு நடன காட்சி அமைப்பார்கள், ஆண்டிக் பட்த்திர்க்கு ஏற்றார்போல் அந்த நடனம் சிறப்பாக இருந்தது. இந்த படத்தின் இறுதி காட்சியில் நாயகன் ஒரே ஒரு வசனம் மட்டும் பேசுவார், ‘ WITH PLEASURE ‘ என்று அத்துடன் படம் நிரைவு பெருகிறது. இந்த இறுதி காட்சியை பார்த்த அனைவரையும் குதுகளப்படுத்திருக்கும்.

படம் பார்த்து வெளியே வந்தபோது சூர்யா ‘தமிழ் மகன்என்ற எழுத்தாளருக்கு போன் செய்து இந்த படம் பற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டான். சூர்யாவுக்கு, தமிழ் மகன் நல்ல பரிச்சையம்தான். இந்த படத்தை பற்றி தமிழ் மகன் அவர்கள் ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்த கட்டுரையும் இந்த படம் பார்க்க ஒரு காரணமாக இருந்தது. தி-நகருக்கு செல்லும் குளிர்சாதன பேருந்தில் ஏறினோம். நான் இருவரும் அமர்ந்திருந்த பின் இருக்கையில் அமர்ந்து என் வாக்மேனை எடுத்து காதில் மாட்டிக்கொண்டு இசையில் மூழ்கினேன். நான் இசையை மிகவும் நேசிப்பவன், ஒரு நாள் முழுக்க எந்த பாடல்களும் கேட்க்காமல் என்னால் இருக்க முடியாது. எனக்கு பிடித்த, நான் ரசித்து ரசித்து கேட்கும் இசை கலைஞர்கள் ஏறாளம். எனக்கு பிடித்த இசை கலைஞர்களின் பட்டியல் உங்களுக்காக குறிப்பாக ஆங்கில்ம் & ஹிந்தியில்................

ஆங்கிலம்:           Bob Marley, Bryan Adams, Enrique Isgelesis, Michael Jackson, Shaggy, Celine Dion,  Madonna, Shakira, Tinnie Tempah, Dr. Alban, Ricky Martin etc.

ஹிந்தி:      Adnan Sami, Kailash Kher, Shankar Mahadevan, Mohit Chauhan, Shaan, Rabbi Shergill, Abhijeet, Asha Bhonsle, Dhaler Mehendi, Himesh Reshammaiya etc.

இவர்களின் இசையில் லயித்துக் கொண்டிருந்த என்னை பைக்கில் தன் தந்தை, தாயுடன் சென்றுக் கொண்டிருந்த சிறுமி ஒருத்தி களைத்தால். அவள் சூர்யா, ஜோதி இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டே வந்தாள். அந்த சிறுமி அப்படி எதை நினைச்சு சிரிச்சாலோ யாருக்கு தெரியும்? இதை பார்த்த இவ்விருவரும் எந்த ரியாக்‌ஷனும் இல்லாமல் கிடந்தார்கள். நான் இருவரையும் பார்த்து ஏய், அந்த குழந்தைக்கு ஏதாவது பதில் சொல்லுங்கடா என்று கேட்டுக் கொண்ட பிறகு. இருவரும் கை அசைத்து டா டா சொன்னார்கள், நானும்தான்.

ஜோதிய பற்றி இன்னொறு விஷயம், அவள் எப்போதும் பிஸியாகவே இருப்பாள். பலர் இவளிடன் தங்கள் பிரச்சனையை சொல்லி தீர்வு கேட்பார்கள். இவளும் அந்த பிரச்சனைகளை’’’’ ‘single handed டா டீல் பன்னி தீர்த்து வைப்பாள். ஜோதி 21ம் நூற்றாண்டின் ‘IRON LADY’ என்று சொன்னால் அது மிகை ஆகாது. ஜோதி உன்னுடைய நேர்மையும்! தைரியமும்! எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு(சத்தியமா சீரியஸ் மூட்லதான் சொல்றேன்). இந்த பயணத்தில் இருந்து ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன் அதாவது, இதுபோன்ற சந்திப்பு நடக்கும்போது அது எனக்கு வெற்றிகரமாக அமைந்தால் ‘HIT’ என்றும், இல்லை என்றால் ‘FLOP’ என்றும் வைத்துக் கொண்டேன். இதுவரை நான் சென்னைக்கு பயணித்த நான்கு முறையும் ‘FLOP’ தான். இந்தமுறையாவது ‘HIT’ ஆகுமா? ஜோதியிடமிருந்து விடைபெற்றோம், ஜோதிக்கு என் மொபைலில் இருந்து ஒரு SMS அனுப்பினேன் ‘HIT’ என்று. இன்று காலை ஆரம்ப ப்ளான் சொதப்பினாலும், மாலை பினிஷிங் நல்லா இருந்தது. சூர்யாவின் அறைக்கு வந்து சேர்ந்து, உறங்கினோம். நல்ல தூக்கம் ரொம்ப நாள் கழித்து.

விடியர்காலை பஜனை பாட தயாரானார்கள் ஆஸிரம சகாக்கள். சூர்யா என்னை எழுப்பவேண்டாம் என கேட்க அதற்கு அவர்கள் கடுப்பாக, சூர்யாவும் கடுப்பாக அந்த இடத்தை விட்டு இருவரும் வெளியே வந்துட்டோம். இன்று காலை திருவொற்றியூர் கோயில் செல்வதர்க்காக கொஞ்சம் சீக்கிரமாகவே தயாரானோம். திருவொற்றியூருக்கு புறநகர் ரயில் வழியாகவே செல்ல வேண்டி இருந்ததால் கிண்டி ரயில் நிலையம் போக பஸ் ஏறினோம்.  இந்த முகநூல் பழக ஆரம்பித்ததும் அதற்கு அடிமைகளாகவே மறினோம் நாங்க இருவரும். முகநூலில் நிறைய விஷயங்களை பற்றி விவாதிப்போம் அதில் எனக்கும் சூர்யாவுக்கும் எப்போதும் கருத்து மோதல் வெடிக்கும். இதனால், நம் நட்பிற்க்கு பங்கம் ஏற்படும் அளவுக்குகூட சென்றுவிட்டதாக சூர்யா நம்பினான். இதை பற்றி பேசிக் கொண்டே கிண்டி ரயில் நிலையம் அருகே இருந்த ஒரு ஹோட்டலில் சிற்றுண்டியை முடித்தோம். கிண்டியிலிருந்து பார்க் ஸ்டேஷனிர்க்கு டிக்கெட் வாங்கினோம். பார்க் ஸ்டேஷனை நோக்கி செல்லும் போது வழியில் மாம்பலம் நிறுதத்தில் ஜோதி ஏறிக்கொண்டாள். பார்க் ஸ்டேஷனில் இறங்கி அருகே இருந்த மற்றோரு ரயில் நிலையம், சென்னை சபர்பர்ன் ஸ்டேஷனில் திருவொற்றியூருக்கு செல்லும் ரயிலில் ஏறினோம்.

திருவொற்றியூர் வந்த பிறகு வடிவுடை அம்மன் கோயிலுக்கு செல்லும் வழியை விசாரித்தவாறே எங்கள் நடை பயணத்தை தொடங்கினோம். எனக்கு வாகனத்தில் பயணம் செய்வதைவிட இதுபோன்ற நடை பயணம்தான் பிடிக்கும். நேற்றே நிறைய தூரம் ஜோதியை நடக்க வைத்து கஷ்டப்படுத்தினோம். இன்று ஆரம்பமே இப்படி இருக்கு, நானும் சூர்யாவும் ஒருவருக் கொருவர் பார்த்து சிரித்துக் கொண்டோம். ஒரு நீண்ட நடைக்கு பிறகு கோயில் வந்துசேர்ந்தோம் மூவரும் நெய் தீபம் வாங்கி கோயிலுக்குள் நுழைந்தோம். அந்த ஒரு கோயிலுக்குள்ளையே நிறைய கடவுளின் பிரகாரங்கள் இருந்தது. அனைத்து பிராகரங்களுக்கும் சென்று கடைசியாக வடிவுடை அம்மன் இருந்த இடத்திர்க்கு முன்பாக தீபத்தை ஏற்றினோம். இந்த தீபம் ஏற்றும்போதுதான் ஒரு விஷயத்தை கண்டுகொண்டேன். ப்ரவீன், சூர்யா, ஜோதி இந்த மூன்று பெயர்களிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அதாவது இம்மூன்று பெயர்களும் ஒளியை குறிப்பவையாக இருப்பதுதான். அதனால்தான் என்னவோ நாங்கள் மூவரும் இங்கு நண்பர்களாக இணைந்துள்ளோம்(எனக்கு இன்னும் ஜோதி மேல டவுட் இருக்கு). வடிவுடை அம்மனை தரிசிக்க சென்றோம் நம் தமிழ்நாடு கோயில்களில் மட்டும்தான் இதுபோன்ற அவலங்கள் நடைபெறும். காசு கொடுத்து சிறப்பு சீட்டு வாங்கினால்தான் அம்மனுக்கு அருகில் சென்று தரிசிக்க முடியுமாம். நாங்கள் வெளியவே நின்று தரிசித்தோம். மற்ற அம்மன் கோயிலில் உள்ள சிலையைவிட இந்த அம்மனின் முக அழகு என்னை மிகவும் ஈர்த்தது. தரிசித்து வெளியே வந்ததும் என் அம்மா போன் செய்தாள், ‘டேய் ஏண்டா நேத்திலிருந்து போன் செய்யவேயில்லைஎன்றாள் கடும் கோபமாக. உண்மை இதுதான் நண்பர்களே, நான் நண்பர்களுடன் இருந்தால் மற்றவர்களை சுத்தமாக மறந்துபோவேன். என் அம்மாவை சமாதானப்படுத்தி, இந்த அம்மனை பற்றிய சிறப்புகளை எடுத்து சொல்லி, பிரசாத கடையில் புலியோகரை, வடை வாங்கி சாப்பிட்டோம். கோயிலுக்கு வெளியே வந்து இளநீர் சாப்பிட்டோம்.

அடுத்து, பட்டினத்தார் அடிகளின் கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். இது கொஞ்ச தூர தொளைவில்தான் இருந்தது. அந்த இடத்தில் பட்டினத்தார் அடிகள் சிவ லிங்கமாக உருமாறி ஜீவ சமாதி ஆனதாக சொல்லப் படுகிறது. வடிவுடை அம்மன், பட்டினத்தார் அடிகள் இவ்விரு கோயில்களின் சிறப்புகளை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள ‘சாரு நிவேதிதாஅவர்கள் எழுதிய ‘கடவுளும் நானும்’, ‘மனம் கொத்திப் பறவைபோன்ற புத்தகங்களை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.  பட்டினத்தடிகளின் கோயிலுக்கு வந்து சேர்ந்தோம். அவரை தரிசித்து சற்று நேரம் ஓர் இடத்தில் அமர்ந்தோம், சூர்யா கண்ணை மூடி தியானிக்க ஆரம்பித்தான். அவன் கண் திறந்த பிறகு, ‘இங்க ஏதோ ஒரு சக்தி என்னை இப்போ ஈர்த்துச்சுடாஎன்றான். எனக்கும், ஜோதிக்கும் அப்படி ஏதும் நடக்கவில்லை. கோயிலை விட்டு வெளியே வந்தோம், சடாரென்று குரங்கு மாதிரி தாவி சூர்யா ஒரு காரில் ஏறிக்கிட்டான். என்னடா, யாருனு விசாரித்தால் காரில் வந்தவர் சூர்யாவின் கம்பெனியில் கூட வேலைசெய்யும் சகா ‘குமார்என்றான். நானும், ஜோதியும் பின் ஸீட்டில் அமர்ந்தோம். சென்னை ஹார்பர் செல்லும் வழியில் ஓர் இட்த்தில் இறக்கிவிட்டு, ‘கொஞ்ச தூரம் அப்படியே போயிட்டு வாங்கஎன்றார் குமார். கடல் அலைகளை தடுக்க பாறை கற்களை போட்டு வைத்திருப்பார்கள் அதில் நடக்க ஆரம்பித்தோம். அந்த கற்களின் மேல் நடப்பதே எனக்கு அட்வென்சரஸாக இருந்தது. நான் வேகமாக நடந்து போய் ஓர் இடத்தில் அமர்ந்து தனியாக(!) கடல் அழகை ரசித்துக் கொண்டிருந்தேன். ஜோதியும், சூர்யாவும் மெதுவாக வந்து சேர்ந்தனர். சுற்றி கடல் நீர் இருந்ததால் அத்தனை வெயிலிலும் குளிர்ச்சியாக இருந்தது, சில புகைபடங்களை எடுத்துக்கொண்டோம். அடுத்து எங்க போறீங்க என்று எங்களை நோக்கி கேட்டார் நண்பர் ‘குமார்’. இது ஒரு நல்ல கேள்வி ஆனால் பதில்தான் தெரியவில்லை. இதற்க்கு சூர்யாவே பதில் சொன்னான், எங்கு செல்வது என்று யோசித்து, ‘எங்களை மவுண்ட் ரோடு செல்லும் பேருந்தில் ஏத்திவிட்டுருங்கஎன்று குமாரிடம் கேட்டுக்கொண்டான். ‘சரி வாங்க எங்க வீட்டு கிட்டையே ஒரு பஸ் ஸ்டாப் இருக்கு அங்கையே உங்களை இறக்கி விடுறேன்என்றார்.

அங்கு சென்றவுடன் என்ன நினைத்தாறோ தெரியவில்லை,வீடு பக்கம்தான் வீட்டுக்கு போய் வருவோம் வாங்கஎன்றார். எங்களுக்கோ பசி கண்ணைகட்டுது. குமார் வேறு வீட்டுல சாப்பாடு இருக்காது தப்பா நினைச்சுக்காதிங்க என்று சொல்லிதான் அழைத்து சென்றார். அவர் வீடு வாசலில் நிறைய பறவைகளை கண்டோம், குமார் பறவைகள் பிரியர் என்று சூர்யா பின்னர் சொன்னான். வீட்டிர்குள் நுழைந்ததும் குமார் எவ்வளவு ரசனைவுடையவர் என்பதை அவரின் வீட்டை பார்க்கும்போதே தெரிந்தது. குமார் எங்களை அமர்த்தி வைத்து தன் தாய், தந்தை மனைவிக்கு அறிமுகம் செய்து வைத்து, அவர் எதற்கோ வெளியே சென்றார். திரும்பி வந்தபோது கையில் ஏதோ பார்சலோடு வந்தார், வந்தவரை உட்காரவைத்து. அவர் வீட்டு வரவேற்பறையில் ஒரு ‘புலிபடம் சுவரில் ஒட்டி வைத்திருந்தார். அதை பார்த்து அவரிடம் நான் கேட்டேன், ‘ஏங்க இது உங்க சின்ன வயசு போட்டோவாஎன்றேன். அதற்கு அவரும் சீரியஸாகவேஆமாங்க என் 18 வயசுல எடுத்த போட்டோஎன்றார். அவர் கையில் கொண்டுவந்த பார்சல் சிக்கன் பிரியாணி என்று அவருடைய மனைவி தட்டில் பரிமாறியபோதுதான் தெரிந்தது. ஜோதிக்கு பிரியாணியை பார்த்தவுடன் தான் சற்று நிம்மதியாக இருந்தது. வீட்டுல எதுவும் சாப்பாடு இருக்காது என்று சொல்லியவர் சிக்கன் பிரியாணி வாங்கி வந்து அசத்திவிட்டார். சாப்பிட்டு முடித்து, பிரியாணிக்காக தனியாக ஒரு நன்றி சொல்லி அந்த வீட்டைவிட்டு வெளியேறினோம். குமாரின் மனைவி ஜோதியிடம் மட்டும், ‘ஃப்ரியா இருக்கும்போது அடிக்கடி வீட்டுக்கு வாங்கஎன்றார்.

மவுண்ட் ரோடுக்கு செல்லும் பஸ்ஸில் ஏறினோம். இங்கையும் ஒரு பஞ்சாயத்துக்கு தீர்வு சொல்லிக்கொண்டிருந்தாள் 21 ம் நூற்றாண்டின் ‘இரும்பு மங்கைஜோதி ப்ரியா. மவுண்ட் ரோடில் இறங்கி ‘ஸ்பென்சர் பிளாசாசென்றோம். அங்கு LANDMAARK புக் ஷாப்பில் நுழைந்து அங்கிருந்த புத்தகங்களை நோட்டமிட்டோம். எனக்கு நீண்ட நாளாக திருக்குறளுக்கு சிறந்த பொருளுரை எழுதிய புத்தகத்தை வாங்க தேடிக்கொண்டிருந்தேன். அங்கு சுஜாதா அவர்கள் எழுதிய பொருளுரை கிடைத்தது. அதை எனக்காக ஸ்பான்சர் செய்தான் சூர்யா. தெங்க்ஸ் சூர்யா!. அந்த ப்ளாசாவின் பேஸ்மெண்டிர்க்கு சென்று ஓர் இட்த்தில் அமர்ந்து சற்று நேரம் ஓய்வு எடுத்தோம். விதவிதமாக போஸ் கொடுத்து நானும், ஜோதியும் சில புகைபடங்கள் எடுத்துக் கொண்டோம். பெசண்ட் நகர் பஸ்ஸை பிடித்து பீச் வந்துசேர்ந்தோம். கண் முன்னே குல்பி ஐஸ் வண்டி தென்பட்டது. எனக்கு குல்பி ஐஸ்னா ரொம்ப பிடிக்கும். நானும், ஜோதியும் வாங்கி ருசித்தோம். என்ன நடந்தது என்று தெரியவில்லை சூர்யா வழக்கமாக சாப்பிடும் மீன் கடைக்கு செல்லாமல் பக்கத்தில் இருந்த இன்னொறு கடைக்கு கூட்டிச் சென்றான். ‘கடமாஎன் ஃப்வரெட் என்பதால் அதையும் சேர்த்து ஒரு நான்கு வகை மீன்கள் சாப்பிட்டோம், அதில் வெளவால் மீன் என்று ஒரு வகை, இதை சூர்யா உண்மையாக வெளவாலை கொடுப்பார்கள் ரெக்கைய பிச்சு சாப்பிடனும் என்றெல்லாம் கலவரப்படித்தினான். போன முறை சூர்யா செய்ததுபோல், இந்தமுறை ஜோதி செய்தாள் ‘இது நல்லாவேயில்லை, எனக்கு வேனா, புடிக்கலைஎன்று எதையுமே அவ்வளவாக சாப்பிடவில்லை. கடைசியாக ஒரு மசாலா டீ சாப்பிட்டு பீச்சை விட்டு வெளியேரினோம். பீச் ஸ்டாபிலிருந்து தி-நகருக்கு பஸ் ஏறினோம்.

பஸ்ஸில் செல்லும்போது என் சந்தேகத்தை தைரியமாக கேட்டுவிட்டேன்.

ஏன் ஜோதி என்னை நீ உண்மையாகவே உன் நண்பனா ஏத்துக்கிட்டுயா
‘ஏய்! ப்ரவீன் என்ன இப்படி கேக்குற, நான் உன்னை சூர்யாவோட ப்ரெண்டா பாக்கலை என் ப்ரெண்டாதான் பார்க்கிறேன்’.

என்க்கு அப்படியே சவுக்கால் அடித்தது போல் இருந்தது. அவள் இப்படி ஒரு பதிலை சொல்லுவாள் என நான் நினைக்கவில்லை, என்னை ரொம்ப டச் பன்னிட்ட ஜோதி. ஜோதி நான் உன்னை சந்தேகித்ததர்க்கு நீ என்னிடம் நடந்துகொண்ட விதம்தான் காரணம். ஆனால் நீ இப்படி சொன்ன பிறகு நான்தான் உன்னை தவராக புரிந்துக் கொண்டுவிட்டேனோ என்று நினைக்கிறேன். என்னை மன்னித்துவிடவும். ஜோதியை தி-நகரில் விட்டு அவளுடன் இருவரும் கைக்குலுக்கி விடைபெற்றோம். அவள் சற்றுதூரம் நகர்ந்தவுடன், என் மொபைலில் இருந்து SMS அனுப்பினேன் ‘SUPER HIT’  என்று. முன்தின நாள் காலை பொடி தோசை சாப்பிட்ட ஹோட்டலுக்கே சென்று மீண்டும் ‘பொடி தோசைசாப்பிட்டோம். ஆனால் இம்முறை எனக்கு பிடிக்கவில்லை. வேளச்சேரிக்கு சென்று, சூர்யாவின் அறையை நோக்கி நடக்கும்போது நிறைய விஷயம் பேசிக் கொண்டே நடந்தோம். அதில் ஜோதியை பத்திதான் நிறைய பேசினோம். ‘இன்னும் அவ சொன்ன விஷயம் என்னால் நம்ப முடியலடாஎன்றேன். ‘டேய் நீ எல்லார் மனசுலையும் டாப் ல இருக்க, உன்மேல அவளுக்கு ஒரு தனி மரியாதை இருக்குடாஎன்றான். தொடர்ந்து நான் அவனிடம் சொன்னேன், ‘ இந்த வயசான காலத்தில் எனக்கு இப்படி ஒரு தோழி அமைவாள் என்று கனவுலகூட நினைக்கலைஎன்றேன். தெங்க்ஸ்! ஜோ!. சூர்யாவுக்கும், எனக்கும் நடந்துவரும் பிரச்சனை பற்றி பேசினோம். எங்களக்குள் நடக்கும் பிரச்சனைக்கு இந்த முகநூல் தான் காரணம். ஜோதி நீ என்னுடன் முகநூலில் ப்ரெண்டாக இல்லாதது ரொம்ப நல்லதாபோச்சு. நாம் இருவரும் எப்பவும் அப்படியே இருப்போம். சூர்யாவிடம் நான் தொடர்ந்தேன்,நான் கடந்து வந்த நண்பர்களிலே நீ ரொம்ப வித்தியாசமானவன், அந்த வித்தியாசம் தான் எனக்கு பிடிச்சிருக்குஎன்றேன். சும்மா இந்த முகநூலில் சண்டை போடுவதால் நம் நட்பு முரிந்துபோகும் என்பது எக்காலத்திலும் நடக்காத காரியம். சூர்யா, ஜோதிய பற்றி இன்னோறு விஷயம் சொன்னான், ‘நான் ஜோதி கிட்ட போட்ட சண்ட மாதிரி உங்கிட்ட போட்டிருந்தா சத்தியமா நீ என்னை விட்டு ஓடியேபோயிருப்பஎன்றான். அதற்கு நான் சொன்னேன், ‘நீ என்னை மிஸ் பன்னாலும் பரவாயில்லை, ஜோதியை மட்டும் மிஸ் பன்னிடாதஎன்றேன். எப்படி ஒரு உன்னதமான நட்பு நம் மூவருடையதும் பாருங்கள், சூர்யா, ஜோதி நம்மிடையே இருக்கும் இந்த உன்னதமான நட்பு நீண்ட காலம் நீடிக்கவேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இந்த கடைசி வரி எழுதும்போது என் கண்களில் நீர் கசிந்தது. இதே சந்தோஷத்தில் சூர்யாவையும் விட்டுப் பிரிந்தேன். அதே, SMS ‘SUPER HIT’ யை சூர்யாவுக்கும் அனுப்பினேன். இந்த முறை என் சென்னை பயணம் மிக நிரைவாக இருந்தது.

வேளச்சேரியிலிருந்து கோயம்பேடு செல்லும் வழியில் ஒரு நிறுதத்தில் ஒரு பெண் ஏறினால். அவள் அனிந்திருந்த டீ-சர்ட்டை கவனித்தேன், அந்த டீ-சர்ட்டின் முன் பக்கத்தில் “I LOVE CHENNAI”  என்று எழுதியிருந்தது. கடைசியாக கோயம்பேடில் இறங்கும் போது மீண்டும் அந்த பெண் அனிந்திருந்த டீ-சர்ட்டை இன்னொறு முறை பார்த்தேன்(டீ-சர்ட்டை மட்டும்தான்).

I LOVE CHENNAI