Wednesday 6 June 2012

இசைஞானியுடன் ஓட்டம்


யப்பா! ஒரு வழியாக பேருந்து நிலையம் வந்து சேர்ந்தாச்சு. இப்போ டைம் அதிகாலை 12.30 மணி..... இந்த பேருந்து நிலையத்திலிருந்து என் வீட்டிர்க்கான தூரம் 2.5 கி.மீ..... இந்த நேரத்தில் ஆட்டோ பிடித்தால் எப்படியும் 100 ரூபாய் கேட்ப்பான், சரி ஆட்டோ வேண்டாம் நடந்தே வீடு சேர்வோமென்று முடிவு செய்தேன், நடந்து சென்றால் எப்படியும் ஒரு 25 நிமிடமாவது ஆகும் என் வீடு சேர. என்னதான் வெளியே பயம் இல்லாதவன் போல காட்டிக்கொண்டாலும், மனதிர்க்குள் ஒரு சிறிய பயம் இருக்கும் அதுவும், இந்த நேரத்தில் யாருமற்ற சாலையில் தனியாக செல்ல. யாரையாவது துனைக்கு அலைத்துக் கொண்டாள் நலம் என்று யோசிக்க, அட! நம்ம இசைஞானி இருக்காரில்ல. என்னிடம் இருந்த எம்பி3 ப்ளேயரை எடுத்து காதில் மாட்டிக்கொண்டு, இசைஞானியின் பாடல்களை கேட்டவாரே நடக்க ஆரம்பித்தேன்...................

‘சிந்திய வெண்மனி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா செந்நிற   மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொன்னம்மா.

புதிதாக கட்டிய கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்து திறப்பு விழா நடந்திருக்குது போல தெரு முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது, அதை கடந்தபடி சென்றேன்.

செலாடும் கண்ணில் பாலூரும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்
பெண்னென்னும் வீட்டில் நீ செய்த யாகம்
............................................................................
...............................................................................

இந்த பாடல் முடிந்தவுடன் அடுத்த பாடலை தேட ஆரம்பித்தேன், என் எம்பி3 ப்ளேயரில் அனைத்து பாடல்களும் கலந்து இருப்பதாள் இசைஞானியின் பாடல்களை தேட வேண்டி இருந்தது. ஆ! அடுத்த பாடல் வந்தாச்சு............

‘சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் ச்சேர்ந்திருந்தால் திருவோனம்
கையில் கையும் வச்சு கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சின் மந்த்ரம் கொண்டு ச்சேருன்ன நேரம்
.................................................................
...............................................................

இந்த பாடலில் எனக்கு பிடித்த அம்சங்கள்........ முதலில் இதன் பாடகர்கள், கமல்ஹாசனும், எஸ். ஜானகி அம்மாவும். எப்போதும் இந்த ஜோடி பாடும் பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும், அப்படி ஒரு இனைப்பு இருக்கும் இருவரின் குரலிலும்.
நீ... யி...யியி....யியியி.................
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் ச்சேர்ந்திருந்தால் திருவோனம்
கையில் கையும் வச்சு கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சின் மந்த்ரம் கொண்டு ச்சேருன்ன நேரம்
.....................................................................
.......................................................................
அடுத்ததாக இந்த பாடலின் இசையை கவனித்தீர்கள் என்றால், இசைஞானி அவர்கள் மூன்றே முன்று இசை கருவியைதான் உபயோகித்திருப்பார், 1. ட்ரம்ஸ், 2. கிடார், 3. கேரள கோயில்களில் வாசிக்கும் பரை. இந்த மூன்று கருவியின் ஒலி மட்டுமே இந்த பாடல் முழுவதும் பயணிக்கும்.



சப்பர மந்ஜத்தில் ஆட சொப்பன லோகத்தில் கூட
ப்ரேமத்தின் கீதங்கள் பாட சொர்கத்தில் ஆனந்தம் தேட
சயன நேரம் மன்மத யாகம்
புலரி வரையில் நம்முடே யோகம்
அ..அஅ...அஅஅ......அஅஅஅ
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் ச்சேர்ந்திருந்தால் திருவோனம்
கையில் கையும் வச்சு கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சின் மந்த்ரம் கொண்டு ச்சேருன்ன நேரம்

இந்த பாடல் முடிவினில் பாதி தூரம் கடந்திருந்தேன். அடுத்த பாடல் தேடுகையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் கிடைத்துவிட்ட்து.......
ஹேராம் படத்தில் “நீ பார்த்த பார்வை....என்ற பாடல், எப்படியும் இதில் பாடல் வரிகள் வர 2.18 நிமிடங்கள் ஆகும். அதற்குள், இந்த பாடலில் எனக்கு பிடித்ததை சொல்லி விடுகிறேன். இந்த பாடலை ஹரிஹரனும், ஹிந்தி பாடகி ஆஷா போன்ஸ்லேவும் மிக அற்புதமாக பாடியிருப்பார்கள். என்னை பொருத்தமட்டில் இசைஞானியின் பாடல்களிலே இதுதான் ‘மாஸ்டர் பீஸ்என்பேன், அவ்வளவு இனிமையாக இருக்கும். இந்த பாடல் முழுக்க பியானோஇசை மட்டுமே ஒலித்துக் கொண்டிருக்கும்.

‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி

இந்த பாடலில் லயித்து கொண்டே நடந்தபோது, என்னை உரசியவாரே சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று ஒரு ஸ்கார்பியோ கார் பறந்து சென்றது, சற்றே நிலைகுலைந்து போனேன். என் பார்வையை சுற்றும் வைத்து யாருமில்லாத ரோடில் தொடர்ந்தேன்.

நாடகம் முடிந்த பின்னும்
நடிப்பின்னும் தொடர்வது ஏனோ
ஓரங்க வைத்தியம் இனி போதும் பெண்ணே
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே
உயிரே வா..............
...............................................................
................................................................ ‘

என் வீட்டிர்க்கு இன்னும் கொஞ்ச தூரம்தான், எப்படியாவது பத்திரமாக வீடு சேர்ந்தால் போதும் என்று நினைக்கயில்  அடுத்த பாடலும் இதே படத்திலிருந்தே ஒலித்தது........

‘ரகுபதி ராகவ் ராஜா ராம்
பதீ.....த பாவனு சீதா ராம்
ராம் ராம் ஜெய் ஜெய் ராம் ராம்
ராம் ராம் சலாமே ராம் ராம்
ராம் ராம் ஜெய் ஜெய் ராம் ராம்
ராம் ராம் சலாமே ராம் ராம்
...................................................
....................................................

நான் சாலையில் இடதுபுரமாக நடந்து செல்கையில் எனக்கு நேர் எதிரே வலதுபுரமாக ஒரு ஆட்டோ வந்து நின்றது. நான் அந்த ஆட்டோவை பார்த்தபடியே என் நடையின் வேகத்தை குரைத்துக் கொண்டேன். என்னை பார்த்து அவர்கள் கடந்து சென்றார்கள்.


அன்பெனும் ஓர் சொல் இது
நாத்திகம் சொல் இன்பமாய்
......................................................

எனக்கு அந்த ஆட்டோவில் வந்தவர்களை பார்த்ததில் இருந்து ஒரு விதமான பயம் சூழ்ந்துக் கொண்டது. எதர்ச்சையாக திரும்பி பின் நோக்கி பார்க்கையில், அந்த ஆட்டோ என்னிடம் நெருங்குவதை பார்த்தேன். பின்னால் இருந்த ஒருவன் என்னை நோக்கி தன் கையை வீசினான், அவன் கை நான் முதுகில் அணிந்திருந்த ப்யாக்(Bag)கில் பட்டதும் நான் சற்று விலகி சென்று, என் நடையில் வேகம் சேர்த்தேன். ஏனோ ஆட்டோ முன் வர மறுத்தது. நான் இன்னும் வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.

ராம் ராம் ஜெய் ஜெய் ராம் ராம்
ராம் ராம் சலாமே ராம் ராம்
ராம் ராம் ஜெய் ஜெய் ராம் ராம்
ராம் ராம் சலாமே ராம் ராம்
.......................................................
.......................................................
நான் மீண்டும் பின் நோக்கி பார்த்தேன், ஆட்டோவின் பின்னால் இருந்த மூன்று பேர் கீழே இறங்கி என்னை பார்த்த படியே நடக்க ஆரம்பித்தனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை ஏன் என்னை பின் தொடர்கிறார்கள் இவர்கள் நான் பயந்தது போலவே ஏதோ அசம்பாவிதம் நடக்க போகிறது.



மறுமுறை
மறுமுறை
வருவதாய் சொல்லி
வருவதாய் சொல்லி
.......................................

அவர்கள் என்னை நோக்கி வேகமாக நடக்க, நான் ஓட ஆரம்பித்தேன். நான் ஓட ஓட என் முதுகில் இருந்த ப்யாக் இடது வலதாக ஆடிக்கொண்டிருந்தது, இது என் வேகத்திற்க்கு தடையாக இருந்தது. இரு பக்கமாக இருந்த அந்த ப்யாக்கின் ஸ்ட்ராப்பை கீழ் நோக்கி இழுத்தேன். இப்போ ப்யாக் என் முதுகோடு அனைத்துக் கொண்டதும், என் ஓட்டத்துக்கு லகுவாக இருந்தது.

ஓ... ஹோ...
தொடர்வது
தொடர்வது
நாமே நாளை
நாமே நாளே
வருவது
வருவது
..........................
...........................

என் வேகத்துக்கு ஏற்றவாறே அவர்களும் என்னை நெருங்கிய வாரே வந்தார்கள். இப்போ குறுக்கே வேரெந்த பாதையிலும் செல்லாமல் நேரே என் வீட்டை நோக்கி செல்வதுதான் உசிதம் என தோன்றியது.


நாளே அன்பெனும்
தீபத்தை
ஏற்றி நீ வைத்தாள்
நாளையும்
எரியும் உன்
பேர் சொல்லும் ஜோதி
ஜோதி
ராம் ராம் ஜெய் ஜெய் ராம் ராம்
...................................................

என் நேரம், இந்நேரம் பார்த்து ரோட்டில் யாரும் இருக்கவில்லை. இப்போ என் வீட்டிர்க்கு செல்ல தார் ரோட்டில் இருந்து மணல் ரோட்டிர்க்கு வந்தேன். பின் நோக்கி பார்க்கையில் என்னை பார்த்து ஒருவன் கையசைத்து ஏதோ சொன்னான், என் காதில் பாட்டு ஒலித்துக் கொண்டிருந்ததால் எனக்கு அவன் கூறியது ஒன்னும் புரியவில்லை.

மனிதனை
மனிதனை
மனிதனாய் பாரு
மனிதனாய் பாரு
மதங்களும்
மதங்களும்
கண் காணா ஓடும்
......................................

பின் நோக்கி பார்த்து பார்த்து ஓடிக் கொண்டிருக்கையில் என் கால் ஒரு கல்லில் மோதி கீழே விழுந்தேன்.

நாளையும்
நமதென
சாட்சியம்
சொல்லும்
சொல்லும்
.....................
.......................

நான் கீழே விழுந்ததும், என்னை பின் தொடர்ந்து வந்த மூன்று பேரும் என்னை சுற்றி நின்றனர்.

 ராம் ராம் சலாமே ராம் ராம்
ராம் ராம் ஜெய் ஜெய் ராம் ராம்
ராம் ராம் சலாமே ராம் ராம்
நடந்ததை நினைத்திடு
நல்லதை தொடங்கிடு
இழந்ததை உணர்ந்திடு
இருப்பதை காத்திடு
.....................................
....................................

மூவரில் ஒருவன் எனக்கு பின்னால் வந்து என் காதில் இருந்த எம்பி3 ப்ளேயரை பிடிங்கி எறிந்து, என் இரண்டு கைகளையும் பின்னால் இழுத்து இறுக்கமாக பிடித்துக் கொண்டான். ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள், எதர்க்கு இப்படி என்னை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பல கேள்விகள் என் மனதில் எழுந்தாலும், அதை விசாரிக்க அவர்கள் வாய்ப்பு தருவதாகவே இல்லை. என் முன் நின்றிருந்த இருவர்களில் ஒருவன் தன் வலதுபக்கமாக நின்றிருந்தவனிடம் இருந்து ஒரு இரண்டு மொலம் நீளம் உள்ள அரிவாளை வாங்கிக் கொண்டு என்னை நெருங்கி வந்தான். என் இதைய துடிப்போ சரமாரியாக அடித்துக் கொண்டது. என் அருகில் வந்தவன் என் தலை முடியை பிடித்து மேலே தூக்கி, அரிவாளை எடுத்து என் சங்கு பகுதில் வைத்து என் முகத்தை உற்று பார்த்தான்.

‘டேய், இவ்வ இல்லடா
‘என்னடா சொல்ற
‘ஆமாண்டா இவ்வ இல்ல, இவன மாதிரியேதான் இருப்பான், ச்ச..
என் கைகளை பற்றிக் கொண்டிருந்தவன் விடுவித்தான்.
‘சாரி பாஸ், வேர ஒரு ஆழ போட வந்தோம் நீங்கதான் அவருனு நினைச்சு, சாரி பாஸ்

அவர்கள் வந்த ஆட்டோ வந்தது, மூவரும் அதில் ஏறி பறந்து விட்டனர். நான் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள சற்று நேரம் தேவைப்பட்டது. அப்படியே மண் தரையில் அமர்ந்தபடி என் ப்யாக்கில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீர் பருகி, முகத்திலும் தெளித்துக் கொண்டேன். என் காதை தடவியபோதுதான் எம்பி3 ப்ளேயரை தேட ஆரம்பித்தேன். அந்த இருளில் தேட கஷ்டமாக இருந்தது. கொஞ்சம் தொலைவில் சிவப்பு லைட் ஒளித்துக் கொண்டிருந்தது, அதை தேடிபிடித்து எடுத்துக் கொண்டேன். என் எம்பி3 ப்ளேயரை மீண்டும் காதில் மாட்டிக் கொண்டு என் வீட்டை நோக்கி நடந்தேன்.



‘சின்ன தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்ன தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ, நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏந்தான் நீரோ.......
சின்ன தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
.............................................................

தாய் அழுதாலே நீ வர
நீ அழுதாயே தாய் வர

டப்டப்டப் டப்  டப் ’’
‘அம்மா அம்மா நான் ப்ரவீன் வந்திருக்கேன் மா

என் அம்மா கதவை திறந்தாள், ஒரு பெரும் மூச்சை விட்டேன். நான் மேல் கூறியதை போல் எந்த ஒரு அசம்பாவிதமும்  நடக்காமல் மிக பத்திரமாக வீட்டிர்க்கு வந்து சேர்ந்தேன், இசைஞானியின் துணையோடு.