Sunday 24 February 2013

நான் WITH STRANGERS – புதன்


“ஹலோ கிளம்பிட்டியா, சாப்டீயா...... ம் நா ராகி ரொட்டி, நீ  தோசையா, சரி 8.30 க்கு பஸ் ஸ்டாண்டுல இருப்பேன், பாய் “

“ அம்மா ராகி ரொட்டி சூப்பரா இருந்ததுமா, ம்... மா அம்மா நா அம்மா தான், டேய் போதும்டா பொய்யா கொஞ்சாத, சரி மா நா கிளம்புறேன் “

மூனு வகையான காய்கறியை துறுவி, ராகி மாவோட கலந்து ரொட்டி செய்திருந்தார்கள் அம்மா, அற்புதமா இருந்தது.

ஓசூர் பேருந்து நிலையம்.......

“ஹலோ எங்க டா இருக்க, நா இங்க பெங்களூரூ பஸ்லாம் நிக்குமில்ல அங்க இருக்கேன் வா

“ ஹாய் கிட்னா மண்டையா (@Praveen Win), டேய் ஆலி வாயா (@Praveen Venkatesh)

நானும் பிரவீனும் இன்று வேலைக்கு டிமிக்கி கொடுத்து, பெங்களூரை சுற்றி பார்க்க போகலாம் என்று இருக்கிறோம்.

“ சரி என்னடா பிளான், எங்க போறோம், முதல்ல S.P. Road ல கொஞ்சம் பர்சேஸ் முடிச்சிட்டு அதுக்கப்புறம் எங்க வேனும்னாலும் போலாம், சரி இங்கலிருந்து அத்திபள்ளி போயி அங்கிருந்து பஸ் பாஸ் வாங்கி போவோம் “

பெங்களூரின் S.P. Road ல் உங்களுக்கு அனைத்து வகையான எலக்ட்ரானிக் கூட்ஸும் கிடைக்கும்.

அத்திபள்ளி பேருந்து நிலையம்...........

அத்திபள்ளி, ஓசூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. கர்நாடகா – தமிழ்நாடு பார்டர் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.

“ டேய் ஆலி நம்ம ஏன் இன்னைக்கு ஏ.சி பஸ் ல போககூடாது (சுக்கு காபி குடிக்கிற நாயிக்கு நெஸ்கபே கேக்குதோ), நீ ஸ்பான்ஸர் பன்றதா இருந்தா கண்டிப்பா போலாண்டா, சரி வா வா இதுல டே பாஸ் எவ்ளோ, ஒருத்தருக்கு 100 ரூபா, சரி ஏறு “

பெங்களூரை பற்றி ஒரு சிறிய அறிமுகம், இந்த நகரின் வரலாறை பற்றி எதுவும் பேச போவதில்லை. பெங்களூரை செல்லமாக பூங்கா நகரமென்று அழைத்தார்கள், பின்னர் சிலிகான் நகரம் அல்லது மென்பொருள் நகரம் என்று அழைத்தார்கள். சிலிகான் நகரமாக ஆன பிறகு பூங்கா நகரம் சீர்குலைந்து இன்று ட்ராபிக் நகரம் என்று பெயர் பெற்றுள்ளது. ஆனால், இன்றும் பெங்ளூருக்கே உரித்தான அழகியலும், வசீகரமும் இருக்கத்தான் செய்கிறது.

“ டேய் ஆலி, விஜய்பாஸ்கரோட கதை போல ஒன்று படிச்சியா, இன்னும் இல்ல நீ படிச்சியா, ம்.... நல்லா இருந்தது, அப்படியா எனக்கு அவர் கதை போல ஒன்றுக்காக அமைச்சுகிட்ட அந்த ஸ்டரக்சர் பிடிச்சிருக்கு ஆனா ஒரு சில கதைகளில் மட்டும்தான் என்ன இம்ப்ரஸ் பன்றாரு, ஆமாவா எனக்கு அவரு எது எழுதுனாலும் ரொம்ப பிடிக்கிது டா, ஓஹோ அப்படியா சரி சரி, டேய் ஏண்டா சிரிக்கிற, ஒன்னுமில்ல சும்மா தான் “

இங்கு அத்திபள்ளியிலிருந்து S.P. Road செல்ல எப்படியும் இந்த ட்ராபிக்கில் ஒரு மணி நேரம் ஆகும் அதுவரை நாங்க ரெண்டு பேரும் போடுற மொக்கைய கேட்டு வாங்க.

“ பெங்களூருக்கு நாம நிறைய முறை வந்திருந்தாலும் கேப்டனுக்கூட வந்த அனுபவங்கள் மறக்கவே முடியாது டா எல்லாமே டெரர் அனுபவங்கள்தான், ஆமாவா, முதல் முறை நானும் அவனும் இங்க வந்தப்போ அவன்யூ ரோடு போக மெஜஸ்டிக் பஸ் ஸ்டாண்டு வெளிய வந்து ஒரு ஆட்டோகாரன் கிட்ட அவன்யூ ரோடு போக எவ்ளோனு கேட்டோம். அவன் அதிகமா கேட்டதால வேணாம் என்று சொல்லி கிளம்ப அந்த ஆட்டோகாரன் சரமாரியா கன்னடத்துல திட்ட ஆரம்பிச்சிட்டான் கேப்டன் டென்சன் ஆகி டேய் அவன் என்ன சொல்றான் சொல்லுடா அவன பொழந்துட்றேனு சொல்றான் நா ரெண்டு பேரையும் சமாதான படுத்திக்கிட்டு இருந்தா இவன் மறுபடியும் அவன் என்ன சொன்னா சொல்லுடானு டேட்டுகிட்டே இருக்கான், ஹுஹு ஹுஹு ஹு,  அப்பறம் நா இது வேலைக்கு ஆகாதுனு கேப்டன இழுத்துக்கிட்டு நடந்தே போனோம் “

சிரித்து முடித்து சில நொடிகளுக்கு பிறகு.........

“ இன்னைக்கு மதியம் கண்டிப்பா நாந்-வெஜ் தான் சாப்பிடுறோம், கிட்னா பாய் உங்க அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இதையும் நீங்களே ஸ்பான்சர் செய்தீர்கள் என்றால் நான் விழாவை சிறப்பிக்கிறேன், டேய் சும்மா வாடா இன்னைக்கு எல்லாமே என் ஸ்பான்சர்தான், (ஆக்கா அவனவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமாதாயா இருக்கு) “

“ சரி இப்போ சாப்பாட்டை பற்றி பேச்சு ஆரம்பிச்சதால அத பத்தியே கொஞ்ச நேரம் பேசுவோம், அப்படியா சரி பேசலாம், இங்க கர்நாடகால இருக்கிற உணவு பழக்கங்கள் ஒவ்வொரு ஊருக்கும் மாறும் நா இன்னைக்கு காலைல சாப்பிட்ட ராகி ரொட்டிகூட மைசூர் ஸ்பெஷல் டிஷ்தான், அப்படியா, ம் பொதுவா நீ இங்க ஒரு ஹோட்டலுக்கு போனா இதெல்லாம் கிடைக்கும்........ பிஸி பேளேபாத், வாங்கி பாத், செளசெள பாத், புலாவ், இட்லி-வடை, மசால் தோசை, செளசெள பாத் னா என்ன, அது ஒன்னுமில்ல உப்மாவையும், கேஸரி பாத்தையும் சேர்த்து கொடுப்பாங்க, ஆமாவா, ஆனா இங்க செய்யிற சாம்பார் ரொம்ப இனிப்பா இருக்கும் அதான் கடுப்பு, அப்படியா, இங்க உடுப்பி ஹோட்டலுகள் நிறைய இருக்கும் அதுல நான் சொன்ன எல்லா அய்டமும் சிறப்பா கிடைக்கும், அப்படியா சரி நம்ம மதியம் எங்க சாப்பிடுறோம்(எங்க சுத்தி போனாலும் கரக்டா இங்கையே வந்து நிக்குறானே), மதியமா நிறைய இடம் இருக்கு ‘கபாப் மேஜிக்னு ஒரு கடை இருக்கு ஆனா அங்க வெறும் சிக்கன் அய்டம் மட்டும்தான் கிடைக்கும், இல்லடா நாம ஒரு முறை உங்க அண்ணனோட பர்த்டேக்கு ஒரு இடத்துல சாப்பிட்டோமே, அதுவா ‘அம்மீஸ் பிரியாணி அங்க சாப்பிட்டப்ப நியாபகம் இருக்கா அவுங்க மெனு கார்டுல G      H     O     S     T   biryani  என்றிருந்தது நான் அதை பார்த்து பதறிபோயிட்டேன் அப்பறமாதான் சொன்னாங்க அது கோஸ்ட் இல்ல கோஷ் பிரியாணி என்று, ஆமா உருதுல கோஷ்னா செம்மரி ஆடுனு சொன்னாங்க, ம் ம் அங்க அற்புதமா இருந்ததுல, ஆமா அவுங்க முஸ்லீகளோட ஃப்ளேவர் அப்படியே இருந்தது

இன்னும் 20 நிமிடம் ஆகும் நாங்கள் எஸ்.பி ரோடு போக, நிதானமாகதான் நகர்கிறது வாகனங்கள், ட்ராபிக்கில்.

“இங்க இன்னொரு ஹோட்டல் இருக்கு ‘ஹோட்டல் காமத்என்று அங்க வட கர்நாடக உணவான ‘ஜோலத ரொட்டிஅதாவது நம்ம ஊர்ல கம்பு சோலம் என்று சொல்வோமே அதுல செய்ற ரொட்டி, ஆமாவா, இந்த ஹோட்டல்ல அந்த ரொட்டிய எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் அன்லிமிடட், அப்படினா அங்கையே போலாம்டா, பாக்கலாம் வா

“ இப்போ லால்பாக்க கடக்கும் போதுதான் எனக்கு நியாபகம் வந்தது, ம் என்ன, இப்போ லால்பாக்கு எதிர்தாப்ல ஒரு ரோடு போச்சா, என்னது ரோடு போச்சா வண்டிங்கதான போச்சு, ஐயோ சரி ஒரு ரோடு இருந்ததா, ஆ ஆ,  அங்க கொஞ்ச தூரத்துல இடது பக்கமா MTR ( Mavalli Tiffin Room) னு ஒரு ஹோட்டல் இருக்கு வெஜிடெரியன் ஹோட்டல்தான் ரொம்ப பழைய ஹோட்டல் ரொம்ப வருசமா இருக்கு, ரொம்ப பழசுனா ரொம்ப வருசம்தாண்டா, சரி சரி கேளூ அங்க கல்யாண சாப்பாடுனு கொடுப்பாங்க கிட்டதட்ட ஒரு 32 அய்டம் இருக்கும் சூப்பரா இருக்கும் எல்லாரும் வந்து எவ்வளவு நேரமானாலும் காத்திருந்து சாப்பிட்டு போவாங்க, அப்படியா நீ சாப்பிடிருக்கியா, ம் ஒரு முறை       

“ என்னதான் இருந்தாலும் ட்டும்கூர் ‘தட்டு இட்லி’, ஷிமொகா ‘போண்டா சூப்’, தார்வாட் ‘பேடா’  போல வருமா, டேய் ஆலி போதும்டா எஸ்.பி ரோடு வந்தாச்சுனு நினைக்கிறேன், சரி வா இறங்குவோம் “

எஸ்.பி ரோடு ஸாப்பிங் முடிச்சுட்டு மெஜஸ்டிக் வந்தோம். அடுத்து எங்கு செல்வது என்று எந்த ஐடியாவும் இல்லை. பெங்களூரில் பிரசித்தமான இடங்களுக்கு நிறைய முறை சென்று விட்டதால், எங்கே செல்வது என்று குழப்பமாக் இருக்கிறது. மெஜஸ்டிக் வந்தவுடனே பிரவீன் ‘ நந்தினில பாதாம் பால் குடிப்போமா, அதுகூட நீயே ஸ்பா...., டேய் மூடிட்டு வாடா ‘
இங்கு நந்தினியை பற்றி சொல்லியே ஆக வேண்டும், நந்தினி டைரி என்பது கர்நாடக அரசால் நடத்தபடும் பால் டைரி நிறுவனம், நம் ஆவின் போல. இதில் கிட்டதட்ட நூறு வகையான பால் பொருட்கள் கிடைக்கிறது, ஐஸ் க்ரீமிலிருந்து, எல்லா வகையான ஸ்வீட் வகைகள், மற்றும் இன்னும் பல வகையான பால் பொருட்கள். இங்கு பெங்களூரில் எல்லா பேருந்து நிலையங்களிலும், நகரின் பிரதான இடங்களிலும் நந்தினியின் விற்பனை நிலையம் இருக்கும். இது ஒரு அரசு நிறுவனம், இதை நம் தமிழக அரசு கவனித்திருக்காதா என்ன??

பாதாம் பால் பருகிய தெம்பில் பிரவீன், ‘ஏய் ஆமா மெட்ரோ ட்ரெய்ன்ல போலாமா என்று கேட்டான், சரி அதுகூட நீயே.... , டேய்... வாடா போவோம்

“ மெட்ரோ ட்ரெய்ன்ல போக எங்க போனும், பையப்பனஹள்ளி – எம்.ஜி ரோடுதான் ரூட்டு, சரி எப்படி போறது, முதல பஸ்ல பையப்பனஹள்ளி போயி அங்கிருந்து எம்.ஜி ரோடு மெட்ரோல போலாம், சரி வா போலாம் “

எனக்கு பிரவீனிடம் பிடித்த விஷயமே இதுதான் எங்க கூப்பிட்டாலும் எந்த மறுப்புமில்லாமல் போக தயாராக இருப்பான்(இதுல எதுவும் உள் குத்து இல்லை).

பேருந்தில் பையப்பனஹள்ளியை நோக்கி.....................

“ டேய் பிரவீன் நா இப்போ கொஞ்ச கொஞ்சமா கன்னடம் படிக்க ஆரம்பிச்சிருக்கேன் டா, அப்படியா நிஜமாவா இரு நான் டெஸ்ட் பண்றேன் அந்த பில்டிங்க் மேல இருக்க போர்டுல இருக்கே அது என்ன, ‘சம்பர்கிஸிஅப்படினா தொடர்பு கொள்ளவும்னு அர்த்தம், சரி போஸ்டர்ல இருக்கே அந்த படம் பேரு, அது ‘யாரே கூகாடலிஅது என்ன படம் தெரியுமா, என்ன படம், போராளி படத்தோட ரீமேக், அப்படியா சரி இங்க முன்னாடி ஸீட் ஜன்னல் மேல என்ன எழுதியிருக்கு, ‘ஹிரிய நாகரிக்கரிகேஅப்படினா முதியோர்களுக்கான இருக்கைனு குறிப்பிடுது, அப்பறம் பொதுவா கன்னடத்துக்கும், தெலுங்கிற்க்கும் ஒரே மாதிரியான ஸ்கிரிப்ட்தான் ஆனா தெலுங்குல கொஞ்சம் எழுத்துகள்ள மாற்றம் இருக்கு, அப்போ உனக்கு தெலுங்கும் படிக்க தெரியும்னு சொல்லு, ம் ஆனா சில தெலுங்கு வார்த்தைகள்  கன்னடத்துல வேறு ஒரு அர்தத்தை கொடுக்கும், அப்படியா, உதாரணமா ‘ஊசுஎன்றால் தெலுங்கில் ‘சுவாசம் என்று பொருள் அதுவே கன்னடத்தில் ‘குசூஎன்று பொருள், ஹுஹு ஹுஹு ஹு, எனக்கு இப்படி சொன்னா சிரிப்பு வராது ஒரு தெலுங்கு பாட்டுல ‘ நா ஊசே பம்பியானம்மாஅப்படினு ஒரு வரி வரும் அப்படினா ‘ என் சுவாசத்தையே அனுப்புகிறேன்என்று அர்த்தம் இந்த வரிய நான் சொன்ன கன்னட அர்த்தத்தில் நினைச்சு பாறேன், ஹுஹு ஹு ஹு, அதே மாதிரி இன்னொறு வார்த்தை இருக்கு, டேய் போதும்டா சாமி முடியல, இல்ல அது ஒன்னும் கொச்சையா இருக்காது தெலுங்குல ‘ஆவுனா பசு அதையே கன்னடத்துல சொன்னா ‘பாம்பு’, சரி வா ஸ்டாப் வந்திருச்சு

முதல்முறையாக ஒரு மெட்ரோ ரயில் நிலையம் செல்வதால் ஒரு குதூகலம் இருந்தது. இங்கிருந்து எம்.ஜி ரோடு செல்ல ஒருவருக்கு ரூ 15, ஒரு ரூபாய் காயின் சைஸில் டோகன் கொடுத்தார்கள்,  அதை ஓர் இடத்தில் தேய்த்து தயாராக புறப்பட நின்றிருந்த இரயிலில் ஏறினோம். அனேகபேர் எங்களை போலவே மெட்ரோவை சுற்றி பார்க்கவே வந்திருந்தனர். இரயில் புறப்பட்டது இங்கிருந்து எம்.ஜி ரோடு செல்ல 11 நிமிடங்கள் ஆகும் என்று சொன்னார்கள். ஆனால், சரியாக 20 நிமிடங்கள் எடுத்துக்கொண்டனர்.

வெளியே வந்து நேரே ஒரு ஹோட்டலுக்கு சென்றோம். நாந்-வெஜ் தான் சாப்பிடுவேன் என்று முடிவு செய்ததால், அதுபடியே ஆர்டர் செய்தோம். நாங்கள் சாப்பிட்டு கொண்டிருக்கையில் பக்கத்து டேபளுக்கு ஒரு குடும்பம் வந்தார்கள். அதில் இந்த ஆளை எங்கையோ பார்த்திருக்கிறோமே என தோன்றியது.

“டேய் பிரவீன் இவரு கன்னட நடிகர்டா, ஆமாவா, ஆமா நிறைய படத்துல வில்லனா நடிச்சிருக்காரு இப்போ டி.வி தொடருல கூட நடிக்குறாரு, ஆ ஆ, அவரோட  மனைவி கூட டி.வி தொடருல நடிக்கிறாங்க, அந்த அம்மா அவரோட மனைவினு உனக்கு எப்படி தெரியும், இல்லடா இரண்டு குழந்தைகள் கூட வந்திருக்காங்க, அந்த பொன்னும் பையனும் இந்த ஆளோட குழந்தைங்கதானு உனக்கு எப்படி தெரியும், சரி விடுடா சாமி சாப்பிடு, ஆனா அந்த பொன்னு அழகா இருக்கா இல்ல, .,-*&%$#@ J

சாப்பிட்டு முடித்து பக்கத்திலிருந்த ‘கரூடா மால்சென்றோம். அங்கே கொஞ்ச நேரம் சுற்றிவிட்டு, CROSSWORDS என்ற புத்தக கடையில், ரொம்ப நேரம் தேடி பிடித்து எஸ். ராமகிருஷ்ணன் பரிந்துரை செய்த TOKYO CANCELLED என்ற  ஆங்கில நாவலை வாங்கினார் பிரவீன். வெளியே வந்ததும் ஒரு கல்லூரி மாணவி எங்கள் இருவரையும் வழி மரித்தாள் .

“ சார் ஒன் மினிட், ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா

Sorry we didin’t get you, can you come again” (இது பிரவீன்)

“Ya sure sir, ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா ப்லா

“ Sorry can you speak little bit slower, we really can’t get you” (இது நான்) 
(நாங்க இங்கிலிஷ் படத்தையே சப்டைட்டலோடுதான் பார்ப்போம் மா, இவ்ளோ இங்கிலிஷ் கூடாது கண்னு )

பின்னர் மெதுவாக விவரித்தால், அதாவது இவங்க ஏதோ ஒரு காலேஜ்ல எம்.பி.ஏ படிக்கிறாலாம், இப்போ ஒரு தொண்டு நிறுவனத்திற்க்காக பணம் சேகரிக்க வந்திருக்கிறார். ஏதோ ஒரு ஹாஸ்பத்ரியில் இருக்கும் குழந்தையின் புகைபடத்தை காண்பித்து, அந்த குழந்தையின் சிகிச்சைக்கு உதவுங்கள் என்று சொல்லி.

How much ur donating, sir” 

என்று கேட்டபடியே அவள் வைத்திருந்த கேஷ் பில்லில் எழுத முற்பட்டாள்.

Your nice name, sir”

“No no actually we don’t have sufficient money with us now” (இது நான்)

“No problem sir, u have two ATM’s here, u both together can donate Rs. 510 which pays for one injection to the child”

(அடி பாவி எல்லாம் ஒரு ப்ளானிங்கோடுதான் இங்க வந்து நிக்கிறியா). நான் பிரவீனை பார்த்து ஹி ஹீ இதையும் நீயே..... என்று இழுத்தேன், அவனும் புரிந்துக்கொண்டு பணம் பெற்று வர ஏ.டி.எம் சென்றான். நாங்கள் இருவரும் தமிழில் பேசி கொண்டதை கேட்ட அந்த மாணவி.

“ ஏங்க நீங்க தமிழா, எந்த ஊரு” (அட ங்கொக்கமக்கா.....)

அப்படியே மூவரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்ததில் அவள் வேலுர் பக்கம் என்று தெரிந்தது. விடைபெறும்போது அவளுடைய போன் நம்பர் குடுத்தா.

“உங்க பேரென்ன(இது நான்)

“நிஷா

“நிஷா ரொம்ப நல்ல காரியம் பன்றீங்க, ஆல் தி பெஸ்ட்(இது பிரவீன்)

இப்ப அடுத்து எங்க போறோம் ஆலி, இங்கலிருந்து ஜெய் நகர் போயி நம்ம வழக்கமா சாப்பிடுற ‘ ஹாட் சாக்லேட் ஐஸ்க்ரீம் ‘ சப்பிட்டு வீட்டுக்கு போறோம், இப்போ யாரு ஸ்பான்சர், ஏய் என்னடா இப்படி கேக்குற இப்பவும் நீங்கதான் கர்ண பிரபுவே

ஜெய்நகர் ‘கூல் ஜாயிண்ட்’...........

“ டேய் கிட்னா இங்க பக்கத்துல ‘தோசா ப்ளாசானு ஒரு ரெச்டாரெண்ட் அதுல 104 வகை தோசைகள் கிடைக்கும், அப்படியா அடுத்த முறை ட்ரை பன்னுவோம், அடுத்த முறையும் நீயே..., டேய் போதுண்டா, சரி ரெண்டு பேரையும் சேர்த்துவச்சு ஒரு போட்டோ பிடி ஃபேஸ்புக்ல போடுவோம்

அடுத்து வீடு திரும்ப இங்கிருந்து அத்திபள்ளி பஸ்ஸில் ஏறினோம். மாலை நேரம் என்பதால் ஏ.சி பஸ்ஸில் கூட கூட்டம் அதிகமாக இருந்தது, நின்றபடியே கொஞ்ச நேரம் சென்றோம். ஒரு நான்கு நிறுத்தங்களுக்கு பிறகு ஒரு ஆசாமி ஏறினான்.

(இங்கிருந்து இந்த ஆசாமியை கவனித்துக் கொண்டு வாருங்கள் சுவாரஸ்யமாக இருக்கும்)

முதல்ல இந்த ஆசாமியின் தோற்றம் எப்படி இருந்தது என்று சொல்றேன். இவர் பார்ப்பதற்க்கு அசாமி இல்ல நேபாளி போல தெரிந்தார். தலையில் ஒரு தொப்பி, மைக்கல் ஜாக்சன் பல பாடல்களில் அனிந்துகொள்வாரே அது போல ஒரு தொப்பி. பூனை மீசை, ஆட்டு தாடி, ஒரு ரெட் கலர் டி-சர்ட், ஜட்டி ஸ்ட்ராப் தெரிவது போல  பேண்ட் அனிந்திருந்தார், பச்சை கலரில் ஷீ. எனக்கு பக்கத்தில் வந்து நின்றுக் கொண்டார்.

 இது போன்ற ஏ.சி பஸ்களில் ஓட்டுனரின் இருக்கைக்கு பின்னால் ஒரு மூன்று இருக்கைகள் பஸ்ஸின் இடது பக்கத்தை பார்த்தவாரு அமருவது போல அமைத்திருப்பார்கள். என் இடது பக்கம் பிரவீன் நிற்கிறான், வலது பக்கமாக இந்த நேபாளி. பிரவீனுக்கு அந்த மூன்று ஸீட்டில் முதல் ஸீட் கிடைத்தது, அது ஒரு ஸ்ப்ரிங் ஸீட்டும் கூட. மேலே பிடித்துக்கொள்ள கை பிடி இருந்தும் அதை பிடித்து கொள்ளாமல் தூங்கியவாறே நின்றிருந்தார் நேபாளி. ஒரு ப்ரேக் போட்டதும் நேபாளி தன் வலது பக்கம் மூன்றாவது ஸீட்டில்  அமர்ந்திருந்த ஒரு குண்டு பெண் மீது சாஸ்டாங்கமாக போய் விழுந்தார். நல்லா மெத்தை மேல விழுந்தது போல இருந்திருக்கும் இவருக்கு(அப்படியே கப்பல்ல மிதக்குற மாதிரியே ஒரு ஃபீலிங்கு) , அந்த பெண்ணுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அடுத்த நிறுதத்திலேயே அந்த பெண் இறங்கிவிட்டாள்

. அந்த ஸீட்டிலேயே இந்த நேபாளி அமர்ந்து தூங்க ஆரம்பித்தான். எனக்கு நேரே நடுவுல இருந்த ஸீட்டில் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். நேபாளி தன் ஸீட்டில் அமர்ந்தவாறே தன் தலையை ஜன்னலோடு ஒரசியபடியே தன் தலையை கொண்டுவந்து முதியவரின் மடியில் பார்க் செய்தார். அந்த முதியவர் அவனை தட்டி எழுப்பியதும் நேராக அமர்ந்து கொண்டான். அப்படி என்ன அவ்னுக்கு தூக்கம் என்று தெரியவில்லை, ஒரு வேலை கூர்காவா இருப்பானோ. மீண்டும் அதேபோல பார்க் செய்தான், இம்முறை பொருமை இழந்த முதியவர் கன்னடத்தில் திட்ட ஆரம்பித்துவிட்டார். மூன்றாவது முறை முறையாக அவன் பார்க் செய்வதர்க்குள் முதியவர் ‘ஏய்என்று கத்தி நேபாளிக்கு திகிலூட்டி தன் இடத்தை காலி செய்தார் முதியவர். வேறுயாரும் அங்கு அமர விருப்ப படாததால், நானே அமர்ந்தேன் (ஆக்கா அடுத்த ஷிப்ட்டுக்கு ஆளு வந்தாச்சு).

 மீண்டும் தன் பார்க்கிங்கை ஆரம்பித்தார், நான் கொஞ்சம் கரிசணப்பட்டு அவன் தலையை என் பட்டெக்ஸ்கு பின்னாடி ஸீட்டின் மீது வைத்துக்கொள்ள வழி செய்து கொடுத்தேன். பின்னர் எனக்குள் ஏதோ ஒரு கூரூரமான எண்ணம் தோன்றவே, என் பட்டெக்ஸால் அவன் தலையை பின் நோக்கி அழுத்தினேன், எவ்வளவு  அழுத்தியும் சொரணையே இல்லை.     பின்னர் கொஞ்ச நேரம் கழித்து அவனே எழுந்துவிட்டான்.

“ டேய் இவனை என்ன செய்யலாம்என்று பிரவீனிடம் கேட்டேன். அவன் பதில் எதுவும் கூரவில்லை.

“சரி இது ஸ்ப்ரிங் ஸீட்டுதானே, அவன் அப்படியே கிட்ட நகர்ந்து வரும்போது நான் எந்திருக்கிறேன் அப்படியே அவன் மண்டையில சடாருனு அடிக்குமில்லஅப்படியே செய் என்று பிரவீனும் சம்மதித்தான்.

அதுபோலவே அவன் கிட்ட நெருங்கி வந்து கொண்டிருந்தான், அந்நேரம் பார்த்து ஒரு ஸ்டாப் வந்ததால் பஸ் ப்ரேக் போட்டதில் முழித்துக் கொண்டான். எங்கள் திட்டத்தை செயல் படுத்தமுடியவில்லை. சரி நானும் பிரவீனும் பின்புற இருக்கைகள் காலி ஆனதால் அங்கே சென்று அமர்ந்தோம். இப்போ பஸ்ஸில் குறைவானவர்களே இருந்தனர், அனைவரும் அவனது சேஸ்டையை பார்த்தபடியே வந்தனர். நான் ஜன்னல் பக்கம் திரும்பி கொஞ்ச நேரம் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். ஏதோ சப்தம் கேட்டது, என் வலது கையை இழுத்த பிரவீன்........

“ டேய் அங்க பாருடா அவன் கீழ விழுந்திட்டான் டா “

எழுந்து நின்று பார்த்தபோது, இந்த முறை சாஸ்டாங்கமாக பஸ்ஸின் தரை பகுதியில் விழுந்திருந்தான். முன்னால் இருந்தவர்கள் அவன் கையை பிடித்து நிருத்தினார்கள். நடத்துனர் நேராக இவனிடம் வந்து கன்னடத்தில்......

“டேய் நீங்க எல்லாம் எங்கலிருந்து டா வறீங்க, எங்கடா நீ இறங்கனும்

“சந்தாபுரா

“இந்த ஸ்டாப்தான் இறங்கி சாவு

“ஆக்கா கரக்டா அவன் ஸ்டாப்லயே வந்து விழுந்திருக்கான் பாத்தியா

“ஹுஹு ஹு ஹு, அப்படி என்னடா அவனுக்கு தூக்கம் அவ குடிச்ச மாதிரியும் இல்ல

“இல்ல இல்ல அவன் கண்டிப்பா குடிக்கல

இத்துடன் எங்கள் இருவரின் ஒரு நாள் பெங்களூர் பயணம் இந்த ஸ்வாரஸ்யமான நகைச்சுவை சம்பவத்துடன் முடிவு பெறுகிறது.