Saturday 22 December 2012

நான் WITH STRANGERS – செவ்வாய்


இது நான் முன்பே தொடராக எழுத நினைத்து ஆரம்பித்ததுதான். பல காரணங்களால் எழுத இயலாமல் போனது. முதல் பகுதி “நான் With strangers – திங்கள் ஐ தொடர்ந்து, இது இரண்டாம் பாகம்.

            நேற்று கிடைத்த மிகுந்த அழைச்சளால் ஏற்பட்ட களைப்பினால் ஆறு மணிக்கு அலாரம் அடித்தும், இன்னும் படுக்கையை விட்டு எழவில்லை.     

“ டேய் மணி 6.30 ஆச்சுடா எந்திரி, டேய் எந்திரி டா ஆபிஸுக்கு லேட் ஆகபோது “

அம்மாவின் குரல் காதை கடிக்க, வலது பக்கமாக திரும்பி சாமி படத்தை பார்த்து கண் விழுத்தேன். குளியல் அறையில் நுழையும் போது கவனித்தேன் என் ஜட்டியின் முன் பகுதி ஈரமாக இருந்ததை. நான் குளிக்க ஆரம்பித்ததும் என் தம்பி, கணினியில் தன் விருப்பமான பாடல்களை பாட விட்டான். ஏன் இவன் எப்பவும் இந்த மாதிரியான பாடல்களை கேட்கிறானோ புரியவில்லை. என்ன பாட்டு தெரியுமா.....................

I wanna fuck u – Akon ”

Konvict Konvict
I see you winding and grinding up on that pole
I know you see me lookin at you
When you already know I wanna fuck you
You already know I wanna fuck you
You already know girl
……………………………………….
……………………………………….

எப்படியோ என்னை தவிர என் வீட்டில் யாருக்கும் இந்த பாடலின் வரிகள் புரியபோவதில்லை. அடுத்த பாடல்...............

Ass like that – Eminem ”

குளித்து முடித்து, சாப்பிட அமர்ந்தேன். அடுத்த பாடல்................

My humps – Black eyed peas ”

இவனுக்கு எப்படி இது போன்ற பாடல்களில் ஆர்வம் வந்துச்சோ தெரியலையே. செக்ஸ் மேல அவ்வளவு ஈர்ப்பா, காலையில் எழுந்தவுடனே இதுமாதிரியான பாடல்களை கேட்குறானே. ம்ம்ம்மு இது சரியில்லையே.

“ அம்மா ஆபிஸ் போயிட்டு வறேன் மா ”. கடைசி பாடல்..........

boom boom pow - Black eyed peas ”

பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். என் Mp3 பிளேயரை எடுத்து காதில் மாட்டி பாடல்களை இயக்க ஆரம்பித்தேன்.

Play

“ Hey sexy lady – Shaggy ”

Sexy, hot, I love your style girl, put it on me
………………………………………..

இந்த பாடலை கேட்டிருக்கிறீர்களா? அற்புதமா இருக்கும், பாடகர்  Shaggy யின் குரல் ரொம்ப செக்சியா இருக்கும்.

........................................................
Hey sexy lady, I like your flow
Your body’s bangin , out of controooooool
You put it on me, that’s right, Ceiling to floor
Only you can make me, scream and beg for mooooore
………………………………………….
………………………………………….

நேரம் அதிகமாகியும் நான் வழக்கமாக செல்லும் தனியார் பேருந்து இன்னும் வரவில்லை. சரி, பஸ் வரும்வரை இந்த இருக்கையில் கொஞ்ச நேரம் அமருவோம். சொந்த காசில் செய்திதாளை வாங்கி படிப்பதைவிட, நம் பக்கத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பவரிடம் எட்டி பார்த்து படிப்பதில்தான் சுவாரசியம் அதிகம். அப்படி எட்டி பார்த்து ஒரு செய்தி  படித்தேன், அது ஒரு கற்பழிப்பு செய்தி. நான் படித்துக் கொண்டிருந்ததை பார்த்த பெரியவர், பேப்பரை மடக்கி என் அருகில் நகர்ந்து பேச ஆரம்பித்தார்.

“ தம்பி படிச்சீங்களா, என்ன கொடுமை பார்த்தீங்களா. எப்படி அழையுறானுங்க பாருங்க, சின்ன பொன்னுங்க பாவம், தேவடியா பசங்க
இதை கேட்டுக் கொண்டிருந்த என் இடது பக்கத்தில் அமர்ந்திருந்த இன்னொரு பெரியவர் இதற்கு பதில் சொன்னார்....................
அடடா பஸ் வந்திருச்சு ஒடு, ஒடு............... கடைசியா அந்த பெரியவர் சொன்ன விசயத்தை கேட்டபடியே பச்ஸில் ஏறினேன், ஆஹா எவ்வளவு பெரிய விசயத்தை சும்மா அசால்டா just like that சொல்லிட்டாரேனு தோனுச்சு.

     பஸ் புறப்பட ஆரம்பித்தது. என் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் என்னை பார்த்து அசட்டுதனமாக சிரித்தார். நானும் சிரிப்பையே பதிலாக கொடுத்தேன். மீண்டும் இன்னொரு முறை சிரித்து தன் கையை கோணலாக நீட்டினார், ஹலோ சார். கை குலுக்கிய பின் ஆரம்பித்தார்...........

“ சார் நீங்க தமிழா, கன்னடமா, தெலுங்கா சார்

“ மூனுமே தெரியும் சார், நீங்க “

“ எனக்கு தமிழ்தான் நல்லா தெரியும், அதுலையே பேசுவோம் “

“ சார் நீங்க எங்க வர்க் பன்றீங்க “

“ ஜிகினி இண்டஸ்ட்ரியல் ஏரியால அஅஅஅஅஅ என்ற கம்பனியில் வர்க் பன்றேங்க “

“ ஓ அப்படியா நானும் அங்கதான் ஒரு க்ளப்ல வேலை பாக்குறேன் சார் “

“ ம்ம்மூ மு “

“ இங்க இருக்குற எல்லா பெரிய கம்பனில இருக்கும் வீ.ஐ.பி எல்லாரும் எங்க க்ளபுக்கு வருவாங்க “

“ உங்களுக்கு ஏதாவது ஒரு நல்ல கம்பெனில வேலை வேனும்னா சொல்லுங்க நான் ரெகமண்ட் பன்றேன் சார், அதுமட்டுமில்ல சார் தமிழ்நாட்டுல ஆளும் கட்சில இருக்க  மந்திரி ஒருத்தர் கூட நல்லா தெரியும். ஏதாவது உதவி வேனும்னா கேளுங்க சார் “

“ இல்ல சார் பரவாயில்லை “

“ அப்பறம் என் க்ளப்ல நான்தான் சார் Cocktail செய்றேன், காக்டெய்ல்னா என்னானு தெரியுமா சார் “

“ ஆ தெரியும் சார் “

“ உங்களுக்கு சரக்கு அடிக்குற பழக்கம் இருக்கா

“ இல்லைங்க “

“எல்லாருக்குமே அது வராது சார், எந்த சரக்க எவ்வளவு மிக்ஸ் பன்னா நல்லா இருக்கும்னு கணக்கு போட்டு சரியா மிக்ஸ் பன்னனும் “

“ ஓ ஹோ “

தன் பையிலிருந்து ஏதோ ஒரு ஃபைலை எடுத்துக் கொண்டார்.

“  சார் இந்த ஆம்வே ப்ராடக்ட்ஸ் பற்றி கேள்வி பட்டிருக்கீங்களா “

( அட கார்பெட்டு மண்டையா, இதுக்குதான் இவ்வளவு நேரம் பிட்ட போட்டியா )

“ ஆ, தெரியும் சார் என் ப்ரெண்ட்ஸ் நிறைய பேர் இதுல இருக்காங்க, இத MLM னு சொல்லுவாங்க இல்ல, தெரியும் சார் “

“ ஓ பரவாயில்லை சார், உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு “

“ சரி சார் என்கிட்ட இன்னொரு ப்ராடக்ட்டும் இருக்கு “

“ என்ன சார் “

என் பக்கமாக நெருங்கி காதருகே கிசு கிசுதார்.......

“ உங்களுக்கு செக்ஸ் ப்ராப்ளம்ஸ் இருந்தா சொல்லுங்க அதுக்கும் என்கிட்ட மருந்து இருக்கு சார், இப்போ இதுதான் நல்லா போகுது “

“ இல்ல சார், எனக்கு தேவையில்லை சார், கொஞ்ச வழிவிடுங்க நான் இறங்கனும் “

அந்த ஆசாமி எப்பையாவது சந்திப்போம் என தன் க்ளப் முகவரியை கொடுத்தார்.

     இப்போ இங்க பொம்மசந்திராவிலிருந்து வேறு பேருந்தில் செல்ல வேண்டும். பஸ்ஸில் செம கூட்டம். நான் பின்னுக்கு சென்று ஓர் இடத்தில், ஜன்னலை பார்த்தபடி நின்றுக்கொண்டேன்.   ‘பெங்களூர் மிரர்படிப்பவரும் என் பின்னால் நின்றுக்கொண்டார், அவருக்கும் சீட் கிடைக்கவில்லை போல. பஸ் புறப்பட கம்பெனி கொளீக் ஒருவர் கால் செய்தார். அவரிடம் பேசி முடித்து கால் கட் செய்யும்போது கவனித்தேன். என் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு கல்லூரி மாணவன் கையில் ஒரு அழகான ஸ்மார்ட் போன் கையில் வைத்து சுழட்டிக் கொண்டிருந்தார், அப்போ ஒரு மெஸேஜ் வந்தது Sweet heart யிடமிருந்து. அடுத்தவரின் மெஸேஜை படிப்பது அநாகரிகமான செயல் என்றாலும்   Sweet heart என்றிருந்ததால் ஆர்வம் அதிகமானது, அது மட்டுமில்லாமல் அந்த போனின் திரை பெரிதாக இருந்ததால் என் கண்கள் எந்த கஷ்டமும் இல்லாமல் படித்தது.

Sweet heart

Open

Message : Wr r u
Reply       : On d way
Message : k
Reply       : Wch clr dress u wear
Message : blue
Reply       : me yellow
Message : dirty fellow
Reply       : ur inner too same clr
Message : uuuuu naughty fellow
Reply       : hey sollu di…..
Message : white
Reply       : I hate white….. remove it
Message : uuuuuu chi bad guy
Reply       : k… sterday u came in my dream…. Do u know, what u did…….
Message : what?
Reply       : guess what?
Message : u say… how I know?
Reply       : U came to my room, sat next to me in bed nd hold my……….
Message : hold my…………. What?
Reply       : u don’t know what u hold……
Message : hey poda thu……..
Reply       : hey ennadi scene podra

இதற்கு அவன், I wanna fuck u, can we have sex tonight என்று நேரடியாகவே கேட்டிருக்கலாம். எனக்கு ஓசூர் பேருந்து நிலையத்தில் அந்த பெரியவர் சொன்ன வார்த்தைகள் என் கண் முன்னே ப்ளாஷ் ஆனது. எவ்வளவு பெரிய விசயத்தை சும்மா அசால்டா just like that சொல்லிட்டாரு.

            அலுவலகம் வந்தாச்சு, ரிஷப்சன் வழியாக உள்ளே போகும்போது என் எதிரே எங்கள் HR மேடம் வந்தார்கள். வழக்கமாக இல்லாமல் இன்று ரொம்ப டைய்ய்ய்ய்டா சட்டையும் இன்னும் டைய்ய்ய்ய்ய்ய்ய்ய்டா ஜீன்ஸும் அனிந்திருந்தார். அவரை பார்த்ததும் ஏனோ மிக உற்சாகமாக Good morning ma’m என்றேன்.

     மதிய உணவை முடித்துவிட்டு கார்டனில் நின்றுகொண்டிருந்தேன். என்னை நோக்கி அரூண், லோயித் இருவரும் வந்தனர். லோயித் என்னை நோக்கி....................

“ என்ன சார் இன்னைக்கு ரொம்ப ப்ரீயா இருக்கீங்க போல, என்ன சொல்றாரு உங்க பாஸ் “

“ அவன் கிடக்குறான் விடுயா, என்ன அரூண் இன்னைக்கு ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கார், என்ன சார் சமாச்சாரம் “

“ அட ஒன்னுமில்ல சார் நீங்க வேற “

“ அது ஒன்னுமில்ல சார், எல்லாம் நம்ம HR மேடம இம்பிரஸ் பண்ணதான் “ என்று கலாய்தார் லோயித்

“ யோவ் சும்மா இருயா அது அங்கதான் நிக்குது “ என்று எச்சரிக்கை விடுத்தார் அரூண்.

எங்கள் பின்னால் ஒர் மரத்தின் அடியில் அமர்ந்து ஒரு நான்கு பேர் மொபைல் போனில் பிட்டு படம் பார்ப்பார்கள். இது எல்லா நாளும் நடக்கும். அவர்களை காட்டி நான்............

“ இவனுங்களுக்கு வேற வேலையே இல்லையா, எப்ப பார்த்தாலும் இதே பொழப்பா இருக்காங்க “

“ எதுக்கு சார் கோப படுறீங்க, ஏ நீங்க எல்லாம் பாக்க மாட்டீங்களாஎன வினவினார் லோயித்

“ இல்ல லோயித் நானும் பார்ப்பேன் அதுக்கு இப்படி நேரம் கெட்ட நேரத்தில எல்லாமா “

“ அட போங்க சார், இந்த வயசுல இதெல்லாம் பண்ணாம வேற எப்போ சார். இப்பவே எல்லாம் அனுபவிச்சிரனும் “ என்று அறிவுரை கூறி தொடர்ந்தார் லோயித்..............

“ இந்த வயசுலதான் தம்மு, சரக்கு, பெண் எல்லாம். நான் ஓர் அளவுக்கு எல்லாம் அனுபவிச்சாசு சார். அத விடுங்க என் ப்ரெண்ட் ஒருத்தன் இருக்கான் அவன் கதைய சொல்றேன் கேளுங்க “

நானும், அரூணும் கதை கேட்க ஆர்வமானோம்.

“ இங்கதான் கோர்மங்கலால இருக்க ஒரு கால் செண்டருக்கு கேப் ட்ரைவரா இருக்கான். அந்த கம்பெனி மேனேஜர் நார்த் இண்டியன் லேடியா, செம கட்டையாம். அவுங்க மெயின் பிரான்சு மும்பைல இருந்து எப்பையாவதுதான் இங்க வருவாங்கலாம். இங்க லேட் நைட்ல வேலை முடிச்சு பக்கத்துல இருக்க ப்ளாட்டுக்கு போக என் ப்ரெண்ட்தான் ட்ராப் செய்வானாம். இவனும் பாக்க நல்ல ஹீரோ மாதிரி இருப்பான், நல்ல கலர், நல்ல உயரம். ஒவ்வொரு முறையும் ட்ராப் செய்யும்போதும் அந்த ப்ளாட்லேயே மேட்டர்தான். வேலை முடிஞ்சதும் அதற்கான பணமும் கொடுப்பாளாம். “

நாங்கள் இருவரும் திகைத்து போய் நிற்க.

“ இப்போ சொல்லுங்க சார் இதுதான சார் வாழ்கை. அவ ரொம்ப கொடுத்து வெச்சவன் சார், இந்த மாதிரி வேலை எனக்கு கிடைத்தால் ரொம்ப சந்தோஷமா செய்வேன் சார் “

“ யோவ் உண்மையிலே ரொம்ப கொடுத்து வெச்சவருயா உன் ப்ரெண்டு “ என உற்சாகமானார் அரூண்.

“ இதே மாதிரிதான் நான் இப்போ ஹெப்பகோடில தங்கி இருக்கிற ரூம், வீட்டு ஹோனர் அம்மாவோட கதையும் “ என புது கதையை ஆரம்பித்தார் அரூண்.

“ நானே போன வாரம் காம்ப் ஆஃப்ல லீவு போட்டப்பதான் பார்த்தேன். எங்க வீட்டு ஹோனர் அம்மா என்கிட்ட நல்லா பேசும், எல்லாமே விசாரிக்கும். உனக்கு கர்ள் ப்ரெண்ட்ஸ்லாம் இல்லையா என்றெல்லாம் விசாரிப்பா “

நானும் லோயித்தும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டோம்.
“ யோவ் இப்போ சொல்லவா வேணாமா

“ சொல்லுயா சொல்லுயா “ என அரூணை தட்டி கொடுத்தார் லோயித்.

“  அந்த அம்மாவோட புருசன் பக்கத்துல எங்கயோ மளிகை கடை வெச்சிருக்காறாம். போன வாரம் நான் மாடியில இருந்தபடியே பார்த்தேன் அவ புருசன் கடைக்கு போனதும் ஒரு பத்து நிமிசம் கழித்து யாருக்கோ போன் போட்டாள், இன்னொரு அஞ்சு நிமிசம் கழிச்சு மூன்று பேர் வந்தனர் “

“ என்னது மூனு பேரா “ என புருவத்தை உயர்த்தி “ அப்பறம் என்ன ஆச்சு “ என்றார் லோயித்.

“ அப்பறம் நான் குளிக்க போயிட்டேன் “ என்றார் அரூண் மிக சாதாரணமாக.

“ அட போட நானா இருந்திருந்தா அந்த ஃபுல் எபிசோடும் பார்த்துட்டுதான் வேற வேலை பார்த்திருப்பேன் “ என கோபித்துக் கொண்டார் லோயித்.

“ சார் பார்த்தீங்களா மூனு பேராம், அவளோடது புண்டையா இல்ல இரயில் போர குகையா “ என்று என்னை பார்த்து சிரித்தார் லோயித்.
“ சரி போதும்பா வாங்க போயி வேலைய பார்ப்போம் “ என்று அந்த காம மாநாட்டை களைத்தேன்.

ஆனால் ஏனோ இந்த இடத்தில் அந்த பெரியவர் சொன்ன வார்த்தைகள் ப்ளாஷ் ஆகவில்லை. ச்ச எவ்வளவு பெரிய விசயத்தை சும்மா அசால்டா just like that சொல்லிட்டாரே.

     மாலை வீட்டுக்கு கிளம்பும் நேரத்தில் ப்ளேட்டிங் செக்சனில் மெசின் ப்ரேக்டவுன் ஆகிவிட்ட்து. இப்போ நான் அதை சரி செய்த பின்னர்தான் வீட்டுக்கு செல்லமுடியும். வேலை முடிப்பதர்குள் மணி 10 ஆகிவிட்டது. என்னோடு லோயித்தும் இருந்தார், அவர் பைக் வைத்திருந்ததால் இருவரும் அரூண் ரூமிர்க்கு செல்ல முடிவு செய்து, அவனுக்கும் தகவலை தந்தார் லோயித்.

“ ஹலோ, அரூண் இங்க கம்பெனில லேட் ஆயிருச்சுடா நான், இன்ஜினியர் சார் ரெண்டு பேரும் உன் ரூமுக்குதான் வந்துட்டுயிருக்கோம், அங்க ஆண்டீ இருப்பாளா “ என்று சிரித்தபடியே போனை வைத்தார்.

அரூணின் ரூமுக்கு சென்றதும், லோயித் ஆரம்பித்தார்.......

“ என்னடா கீழ் வீட்டுல இன்னும் லைட் ஆன்ல இருக்கு ஆண்டீ இன்னும் தூங்கலையா, வேணா இங்க கூட்டிவரியா நம்மலும் மூனு பேர் இருக்கோம் “

“ டேய் உன்கிட்ட சொன்னது தப்பா போச்சுடா, மூடிட்டு தூங்கு “ என படுக்கை விரித்தார் அரூண்.

படுக்கையில் படுத்தபடியே என் மொபைலை எடுத்து முகநூலில் மேய ஆரம்பித்தேன். அரூண் டாய்லட்டில் இருந்த சமயத்தில் அவன் போன் அலரியது..............

“ டேய் அரூண் வீட்டுல இருந்து போன் டா “

“ பேசு டா என்னானு கேளு “

“ ஹலோ,(யாரோ பெண் குரல்) ஹலோ, ஆண்டீ நான் ப்ரவீன் பேசுறேன், அரூண் டாய்லட்ல இருக்கான் “
“ ஹலோ நான் ஆண்டீ இல்ல அரூண் தங்கச்சி பேசுறேன் “

“ ஓ சாரி       “

“ சரி அரூண் வந்தா கால் பண்ண சொல்லுங்க “

“ ஒகே மா “

அரூண் வந்ததும் வீட்டிர்க்கு போன் செய்தான். ரூமின் கதவு திறந்து வெளியே நின்றபடி கனத்த குரலில் பேசி கொண்டிருந்தான். ஏதோ பிரச்சனை போல் இருக்கிறது. லோயித்தோ தூங்கிவிட்டார். பேசி முடித்து உள்ளே வந்தவனின் கண்கள் கலங்கியிருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை, என் பக்கத்தில் வந்து படுத்துக் கொண்டான். மீண்டும் அழ ஆரம்பித்தான், அவன் கையை உலுக்கி..................

“ ஏய் என்ன ஆச்சு “

அவன் ஏதும் பதில் சொல்லவில்லை

“ டேய் ஏண்டா அழுற என்ன ஆச்சு டா “

“ ஒன்னுமில்ல சார் விடுங்க “

“ டேய் இப்ப சொல்ல போறீயா இல்லையா, என்ன பிரச்சனை சொல்லு “

“ சார் அது வந்து எங்க அப்பன் இருக்கா இல்ல அவன் இன்னொரு பொம்பள கூட உறவு வெச்சுருக்கான். அதனால எங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எப்பவுமே சண்டைதான். இன்னைக்கு சண்டை பெருசாகி அம்மா தீ குளிக்க போயிட்டாங்கலாம், தங்கச்சி, பாட்டி இருந்ததால ஒன்னும் பிரச்சனை இல்லை. அதான் ரொம்ப கஷ்டமா இருக்கு “

“ அதெல்லாம் ஒன்னும் பயப்படாத ஒன்னும் ஆகாது “

“ எங்க அப்பங்கிட்ட எத்தனையோ முறை சொல்லியிருக்கேன் விட்டுருயானு ஆனா அவன் கேட்க மாட்டேங்குறான். அந்த பொம்பளையோடயும் சண்டை போட்டாச்சு ஒன்னும் பிரயோஜனம் இல்லை “

“ உங்க அப்பா என்ன சொல்றாரு “

“ அவரு என்ன சொல்றாருனா உங்க அம்மா என்ன சந்தோஷமா வெச்சுகிட்டா நான் ஏ இன்னொருத்திகிட்ட போறேன் னு சொல்றாரு“

இதற்கு நான் என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை

“ சரி விடு அழுகாத அம்மாவுக்கு ஒன்னும் ஆகாது, நீ பேசாம தூங்கு “

“ ஓகே சார் நீங்களும் தூங்குங்க ரொம்ப் டையர்டா இருப்பீங்க “

இப்போ மீண்டும் அந்த பெரியவர் சொன்ன வார்த்தகள் நினைவுக்கு வந்தது. அவர் சொன்னது என்னவென்றால்..................

“ இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் நிக்க வெச்சு சுடனும், அப்படி என்ன இருக்கு பெண் உடம்புல, மேல திரட்சை பழம்போல கொஞ்சம் கரி. அப்பறம் கீழ கொஞ்சம் மயிறு, கொஞ்சூண்டு கரி இருக்கு இதுக்கு போயி ஏன் இப்படி சாவுறானுங்லோ தெரியவில்லை “

பார்த்தீங்களா, எவ்வளவு பெரிய விசயத்தை சும்மா அசால்டா just like that சொல்லிட்டாரு. இரவு தூங்கும் முன்னர் மொபைல் இண்டர்நெட்டில் ஸ்காண்டல் வீடியோஸ் பார்க்கும் பழக்கம் கொண்ட நான் இன்று ஏனோ அதை செய்ய மனம் மறுத்துவிட்டது.

Wednesday 5 December 2012

நேநோ



Nano.
Recueil de nouvelles.
Charu nivedita.

    ‘நேநோ’ சிறுகதை தொகிதியை படித்து முடித்து பல நாட்கள் ஆயினும் இன்றுதான் அதைபற்றி பதிவுபோட நேரம் கிடைத்தது. இங்கே இந்த வட்டத்தில் சாருவின் தீவிர வாசிப்பாளர்கள் (நானும் தீவிரம்தான்) மற்றும் வாசிப்பு உலகில் அதிக அனுபவம் பெற்றவர்கள் நிறைய பேர் இருப்பதால் கூட இந்த தாமதம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நான் அவர்களை போல, சாருவின் எழுத்தை புரிந்து கொள்ளுமளவுக்கு உள் வளர்ச்சி(Mental Maturity) பெறவில்லை போலும். இருந்தும் என்னால் இந்த சிறுகதை தொகுதியை படித்த பிறகு எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும், என்னுள் ஏற்பட்ட மாற்றத்தையும் இங்கு பகிராமல் இருக்க முடியவில்லை. என் பகிர்தளில் ஏதேனும் சிறு பிள்ளைதனம் இருந்தால் நிறாகரித்துவிடுங்கள். சில நேரங்களில் சாருவின் வாசகனாக இருப்பதற்க்கு எனக்கு தகுதி இருக்கிறதா என்றுகூட யோசிப்பேன். இருந்தாலும் சாருவின் ஒரு சாதாரண வாசகனாக என்னை பாருங்கள்.

  இந்த தொகுதியில் இருக்கும் சிறுகதைகள் அனைத்தும் கிட்டதட்ட 20, 25 வருடங்களுக்கு முன்பு எழுதியவை. அப்போதே அதீத நுன்னறிவுடன் இப்பேர்பட்ட உலக தரம் வாய்ந்த சிறுகதைகளை கொடுக்க முடிந்திருக்கிறது சாரு அவர்களால். சாரு அவ்வப்போது தன்னை ஒரு Wisdom என்று சொல்லி கொள்வார். அது அப்பட்டமான உண்மைதான். சாருவிடம் யாராவது ‘நீங்கள் உங்களை விஸ்டம் என்று சொல்லி கொள்கிறீர்கள், அதற்கு ஏதேனும் ஆதாரம் காட்டுங்கள்’ என்று கேட்டால் இந்த ‘நேநோ’ சிறுகதை தொகுதியை தாராளமாக சமர்பிக்கலாம். எத்தனை வகையான அனுபவங்களின் வெளிபாடுகள் அடங்கியுள்ளது தெரியுமா இந்த தொகுதியில். அத்தனையும் அபாரம் ஒவ்வொரு சிறுகதையும் ஒரு ஜெம் (Gem) என்று சொல்லலாம்.
சிறுகதைக்கேவுரிய எந்த வழிமுறைகளையும் வைத்துக் கொள்ளாமல் ஒவ்வொரு சிறுகதையையும் தனக்கான நடையில் ஒரு தனித்தன்மையுடன் கலக்கியிருப்பார். அதில் குறிப்பாக கணையாழி மற்றும் தினமலர் பத்திரிக்கைக்கு எழுதிய சிறுகதைகள் அனைத்தும், அனைவரும் ரசிக்கும்படி அவ்வளவு ஜனரன்ஜகமாக இருக்கும். சாருவின் பின் – நவீனத்துவ எழுத்துக்களை விமர்சிப்பவர்கள் கட்டாயமாக இந்த தொகுதியை படித்து பார்க்க வேண்டும்.

 ‘முள்’ என்ற சிறுகதையுடன் இந்த தொகுதி ஆரம்பிக்கிறது. அதை தொடர்ந்து வரும் ஒவ்வொரு சிறுகதைகளும் unique. ‘டீ, மொகலாய தோட்டம்’ போன்ற சிறுகதைகளில் வறுமையை எவ்வளவு கொண்டாட்டமாக காட்டி நம்மளையும் ரசிக்க வைக்கிறார். நான் என் சிறு வயது முதல் இன்றுவரை வறுமையிலையே வெந்து சாகின்றேன். சில நேரங்களில் வாழ்கையே வெறுத்து போயி இறப்பை நோக்கி பயணிக்க மனம், புத்தி இரண்டும் யோசிக்கும். ஆனால் இந்த இரண்டு சிறுகதைகளை படித்த பிறகு எத்தனை கடுமையான வறுமை வந்தாலும் அதை தாங்கிக் கொள்ளும் மன தைரியமும், பக்குவமும் எனக்கு கிடைத்திருக்கிறது. I am back with resurrection, through your WISDOM Charu. Thanks, thanks a lot.

பின்னர் ‘பிளாக் நம்பர் : 27, திர்லோக்புரி’ என்ற சிறுகதையில் கூறியிருக்கும் கொடுமையான சம்பவத்தை படிக்கும்போது அதில் இருக்கும் பதற்றமும், பயமும் நம்மிடேயும் தொற்றிக்கொள்கிறது. ஒரு சாமான்யனின் வெகுளிதனமும், புத்திசாலித்தனமும் வெளிகாட்டிருப்பார். வழக்கம் போல Non – linear கதைகளான Nano, The joker was here, The book of fuzoos…. போன்ற சிறுகதைகள் இன்னும்  என் அறிவுக்கு எட்டா கனியாகவே உள்ளது. இந்த கதைகளில் இருக்கும் சாரம்சம் (Essence) புரியாமல் இதற்கான தேற்றம் (Theorem) என்ன என்பதை இன்னும் தேடிகொண்டே இருக்கிறேன். இது போன்ற Non – linear கதைகளில்தான் சாருவின் பெரும் திறமை வெளிபடுகிறது என நம்புகிறேன், இதுதான் இவரை மற்ற எழுத்தாளர்களிடம் இருந்து வேறுபடுத்தியும் காட்டுகிறது.

இதை எல்லாவற்றைவிடவும் எனக்கு இந்த தொகுதியில் மிக மிக மிக மிகவும் பிடித்த சிறுகதை ‘என் முதல் ஆங்கில கடிதம்’. எப்பா அட்டகாசம், எக்ஸைலில் உதயா – அஞ்சலி காதலை விட இதில் வீரீயம் அதிகம்தான். காதல் பாணத்தை பருகவைத்து, காதல் சுவைமணத்தையும் ருசிக்க வைக்கிறார். உண்மையான Divine of Love  என்றால் என்ன என்பதை இந்த கதையில்தான் உணர்ந்தேன். என் போன்ற இளைஞர்களுக்கு இந்த கதை காதல் செய், காதல் செய் என  ஊக்கம் அளிக்கிறது.

மொத்தத்தில் இந்த சிறுகதை தொகுதி ஒரு பொக்கிஷம். எப்படி சூரிய ஒளி மனித உடம்பின் மீது விழும்போது அவன் வைட்டமின் சத்தை பெறுகிறானோ. அதேபோல் இந்த சிறுகதை தொகுதி படிக்கும் ஒவ்வொருவருக்கும் மன பக்குவம், மன எழுச்சி போன்ற மன வள மேம்பாட்டிற்கு தேவையான வைட்டமின்கள் கிடைக்கிறது. எப்படி ஒரு மனிதனை, விசையத்தை பகுப்பாய்வு செய்வது, அதனால் ஏற்படும் விளைவுகளிலிருந்து  வெளிவருவது எப்படி, போன்ற நிகழ்வு வார்ப்புருகளை கற்றுக் கொடுக்கிறது. தவறாமல் அனைவரும் இந்த சிறுகதை தொகுதியை படித்துவிடுங்கள்.

நன்றி
அன்புடன்,
பிரவீன் வெங்கடேஷ்.

Monday 29 October 2012

குடைக்குள் பிணம்





‘ஏங்க எத்தனை மணிக்கு எடுப்பீங்க’, ‘இன்னொரு பத்து நிமிஷம் சார் உள்ள உட்காருங்க சார்’.  என் நண்பனின் தந்தை இறந்துவிட்டார், அவரின் ஈம சடங்கில் கலந்துக்கொண்டு நண்பனுக்கு ஆறுதல் சொல்லி, பஸ்ஸில் வீடு திரும்பிக்கொண்டிருக்கிறேன். (அலைபேசியில் யாரோ கூப்பிடுகிறார்கள்) ‘ஹலோ சொல்லுமா’, ‘ஆ.... பஸ் ஏறிட்டேன்மா இன்னும் ஒரு டூ ஹவர்ஸ்ல அங்க இருப்பேன்’, ‘நீங்க எல்லாரும் சாப்பிட்டிங்களா’, ‘புஜ்ஜு குட்டி என்ன பண்றா’. ‘தூங்கிடாளா’, ‘ஒன்னுமில்லைமா நேத்து எல்லாம் நல்லாதான் இருந்தாங்களாம் இன்னைக்கு காலைல நெஞ்சு வலிக்குதுனு சொன்னாராம் ஸ்பத்திருக்கு கூட்டி போகும்போதே போயிட்டாராம்’, ‘ஆமா ஹார்ட் அட்டாக்தான்’, ‘ரொம்ப நல்ல மனுஷன்மா எத்தனை பேரு வந்திருந்தாங்க தெரியுமா’, ‘அம்மா’, ‘தூங்கிட்டாங்களா’, ‘சரி நா வெக்குறேன் அங்க வந்து கால் பண்றேன்’, ‘ம்ம்ம் ஓகே’.

பஸ் புறப்பட ஆரம்பித்ததும் சற்று களைப்பாக இருந்ததால், காலை நீட்டி கொஞ்சம் உடம்பை சரிந்து தலையை ஜன்னல் பக்கமாக சாய்த்து கண்களை மூடினேன்.

    தூக்கத்தில் இருந்து முழித்துக்கொண்டவுடன், வலதுபும் திரும்பி சாமி படம் பார்த்து விட்டுத்தான் மறுவேலை பார்க்க வேண்டும் என்று என் அம்மா சொல்லி இருக்கிறார். இன்றும் அவ்வாறே செய்துவிட்டு, அம்மாவிடம் ஓடிபோய் ‘ அம்மா நேத்து ராத்திரி அப்பா, திங்க என்ன வாங்கி வந்திருக்காரு ஜாங்கிரியா, ஹனி கேக்காஎன்று கேட்பேன். ஆம் எனக்கு ஜாங்கிரி, ஹனி கேக் என்றால் ரொம்ப பிடிக்கும். அப்பா தினமும் வேலையை முடித்து வருவதற்குள் இரவு ஒன்பது, பத்து மணியாயிடும், அதற்குள் நானும் என் தம்பியும் தூங்கிவிடுவோம். அப்பா வேலையை முடித்து வரும்பொழுது எனக்கு பிடித்த ஜாங்கிரி அல்லது ஹனி கேக் வாங்கி வந்து என் தலையணைக்கு கீழே வைத்துவிடுவார். நான் காலையில் எழுந்ததும் பல் கூட தேய்க்காமலேயே தின்று தீர்ப்பேன், அதற்குள் அப்பா வேலைக்கு சென்றிருப்பார்.
    
     இந்த ஜாங்கிரி தின்னும் மோகம் நான் பள்ளிக்கு சேர்ந்தும் தொடர்ந்தது. எங்கள் வீட்டிற்கு அருகேயுள்ள ஒரு பள்ளியில் என்னை ப்ரீ.கே.ஜி யில் சேர்த்தனர். பள்ளிக்கு சேர்ந்தப்பிறகு என் அம்மா, அப்பா இரவு வாங்கிவரும் தீனியை ஒரு பிளாஸ்டிக் பாக்ஸில் வைத்துக்கொடுப்பார்கள். ப்ரீ.கே.ஜி என்பதால் அரை நாள்த்தான் பள்ளி வேலை நேரம் அதில் மத்தியில் ஒரு பதினைந்து நிமிடம் இடைவேளை, அந்த பதினைந்து நிமிட இடைவேளையில் தான் அம்மா கொடுத்தனுப்பியதை திங்கமுடியும். நான் பள்ளிக்கு சென்றவுடன் எப்போடா இடைவேளை வருமென்று காத்திருப்பேன். சில நேரங்களில் இடைவேளை வரை காத்திருக்க முடியாமல், ஆசிரியயை வகுப்பில் மிக பாந்தமாக ஏ பார் அப்பிள், பி பார் பால் என்று சொல்லி கொடுக்கும்பொழுது நான் ஜே பார் ஜாங்கிரி என்று ஆசிரியயைக்கும், பக்கத்தில் இருக்கும் சக மாணவர்களுக்கும் தெரியாமல் ருசித்துக் கொண்டிருப்பேன். அந்த சிறு வயதிலையே எத்தனை போராட்டம் ஒரு ஜாங்கிரி திங்க! பலமுறை மாட்டிக்கொண்டு அடி வாங்கிய கதையல்லாம் உண்டு.

     எனக்கும் என் தம்பிக்கும் ஒரு வித்தியாசமான பழக்கம் உண்டு. அதுவும் திங்கதில் தான், ஜாங்கிரி, ஹனி கேக் போயி இப்போ பார்லே-ஜி பிஸ்க்கெட் வந்து சேர்ந்தது. காலையில் எழுந்தவுடன் இருவரும் இரண்டு பிஸ்கெட் பாக்கெட்களை வாங்கி கொள்வோம். அந்த பாக்கெட்டில் உள்ள முழு பிஸ்கெட்களையும் யார் கடைசியாக தின்று தீர்ப்பது என்பதுதான் எங்களுக்கான போட்டி. பிஸ்கெட்களை பாலில் தொட்டுக்கொண்டும், பாலில் கலந்து அரைத்துக்கொண்டும், மெதுவாக அனைத்து பிஸ்கெட்களையும் காலி செய்வோம். என் தம்பி அனைத்தையும் தின்றுவிட்டான் என்று நினைத்து, நான் என் சட்டை பையிலிருக்கும் என் கடைசி பிஸ்கெட்டை மெதுவாக வெளியே எடுத்து என் தம்பியிடம் காண்பித்து அவனை வெறுப்பேத்தி என் கடைசி பிஸ்கெட்டை சாப்பிட்டு முடிப்பேன். அதுவரை அமைதியாக இருந்த என் தம்பி தன் ட்ரவ்சர் பையில் கைவிட்டு தன் கடைசி பிஸ்கெட் இன்னும் இருக்கிறது என்று காண்பிப்பான். எனக்கோ கடும் கோபம் வந்து அவனிடம் இருக்கும் அந்த கடைசி பிஸ்கெட்டை பிடிங்கி தின்ன அவனை துறத்திக் கொண்டு ஓடுவேன். பெரும்பாலான நேரம் என் தம்பிதான் இந்த போட்டியில் ஜெயிப்பான்.

     இப்படியே பல நாட்கள் கடந்தது எங்கள் இருவரின் காலை வேலை. அதன் பிறகு ஒரு புது விளையாட்டை கண்டுபிடித்தோம். காலையில் எழுந்தவுடன் தெருவுக்கு சென்று ஒருவரை ஒருவர் துத்திக்கொண்டு கற்களால் அடித்துக்கொள்ள வேண்டும்,  யார் அதிக முறை அடி வாங்குகிறார்களோ அவருக்கு இரண்டு பிஸ்கெட்களை பரிசாக கொடுக்க வேண்டும். எவ்வளவு சுவாரஸ்யமான விளையாட்டு பாருங்கள், இதிலும் என் தம்பிதான் அதிக முறை வெற்றி பெற்றுள்ளான். 

     ஒரு காலை வேலையில் நானும், தம்பியும் வீர விளையாட்டுகளை ஆடி களைத்து வீடு திரும்பினோம். அப்போ வீட்டின் சமயலறையிலிருந்து ஏதோ சப்தம் வந்து கொண்டிருக்க, நானும் என் தம்பியும் அடி மேல அடி வைத்து சத்தம் கசியாமல் சமயலறை அருகே சென்று எட்டி பார்த்தோம். அங்கே அப்பா அம்மாவை தன் பின் புறமாக கட்டி பிடித்து கொண்டு கொஞ்சிக் கொண்டிருந்தார். இதை பார்த்த என் தம்பி என்னை பார்த்து கேட்டான், ‘டேய் ரெண்டு பேரும் என்னடா பண்றாங்க’, நானும் வெகுளியாக டேய் ரெண்டு பேரும் சண்டை போடுறாங்க டாஎன்று சொன்னேன். நாங்கள் இருவரும் ஒழிந்துக்கொண்டு பார்த்துக் கொண்டிருப்பதை அம்மா பார்த்துவிட, ‘ஏங்க குழந்தைங்க பாக்கறாங்க விடுங்க நேரங் கெட்ட நேரத்துலஎன அப்பாவை தள்ளி விட்டார். அப்பா எங்களை நோக்கி, ‘டேய் இங்க என்னடா பண்றீங்கஎன துத்திக் கொண்டு வந்தார். எங்களை பிடித்தவுடன் தம்பி அப்பாவின் மீசையை பிடித்து இழுத்து, ‘ஏம்பா இன்னைக்கு வேலைக்கு போலஎன வினவினான். அப்பா மீசையை உரசியபடி, ‘இல்லடா டிபன் சாப்பிட வந்தேன், டேய் உங்க அம்மா எனக்கு ஒழுங்காவே சாப்பாடு போட மாட்டேங்குறா அம்மாவ கொஞ்சம் என்னானு கேட்க மாட்டீங்களாஎன சிரித்தார். என் தம்பியும், ‘ஏ மா அப்பாவுக்கு ஒழுங்கா சாப்பாடு போடமாட்டியாஎன முறைத்தான். ‘ஏங்க டிபன் ரெடி ஆயிருச்சு சாப்பிட்டு சும்மா கிளம்புங்கஎன கடித்தாள். என் பக்கம் கை நீட்டி ‘மதியம் இவன் கிட்ட சாப்பாட்ட குடுத்து அனுப்புறேன் நீங்க ஒன்னும் வர வேண்டாம் என்றாள் அம்மா. அப்பா கேட்டதில் இரட்டை அர்த்தம் இருப்பது இப்போ தான் புரிகிறது எனக்கு.

      அன்று மாலை கன மழை பெய்ய தொடங்கியது. வீட்டினுள் மழை நீர் வராமல் இருக்க வாசகாலின் குறுக்கே தடுப்பு சேலை கட்டினாள் அம்மா. அம்மா திட்டி கொண்டே இருக்க நானும், தம்பியும் வாசல் கால் அருகே தடுப்பு சேலைக்கு பின் நின்றுக் கொண்டு கையை வெளியே நீட்டி மழை நீரை ஒருவர் மீது ஒருவர் அடித்து ஆடிக்கொண்டிருந்தோம். மழையில் நனைந்த படியே பதற்றத்துடன் ஓடி வந்த என் ஆண்ட்டி அம்மாவிடம், ‘யோ அம்மா, உங்க வீட்டுகாரும்  நாநா வும் (ஆண்ட்டியின் கொழுந்தனார்) ஆட்டோல போயிட்டிருந்த போது ஆக்ஸிடண்ட் ஆயிருச்சு மா’, ‘யோ, எங்க, எந்த இடத்துல, இப்போ எங்க இருக்காங்க’, ‘வெங்கடேஸ்வரா தியேட்டர் கிட்ட வந்துகிட்டிரும் போது லாரி வந்து, இப்போ இங்க கவர்மெண்ட் ஆஸ்பிடல்ல தான் இருக்காங்க நீ சீக்கிரம் வா மா’. அம்மா அழுதபடியே எங்களை பக்கத்து வீட்டில் இருக்கும் அக்காவிடம் விட்டு இங்கேயே இருக்கும் படி சொல்லி மழையில் நனைந்து கொண்டே ஓடினாள்.

     எனக்கும் என் தம்பிக்கும் சற்று நேரம் இங்கே என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ஏன் அம்மா அப்படி ஓடினாள், அப்பாவுக்கு என்ன ஆச்சு, ஆக்ஸிடண்ட்னா என்ன, இப்படி பல கேள்விகள் என் மனதில் ஓடி கொண்டிருந்தது. இரவு ஆக பசியால் நான் அழ ஆரம்பித்தேன், என் பக்கத்தில் இருந்த அக்கா, ‘அழாதடா அப்பாவுக்கு இப்படி ஆயிருச்சேனு அழுகறீயா ஒன்னுமில்ல ஒன்னுமில்லஎன்று என் தலையை நீவியபடி ஆறுதல் சொன்னாள். அப்பாவுக்கு என்ன ஆயிருச்சு, நான் அதுக்கு அழவில்லையே, அப்படி ஏதாவது ஆனால் அழணுமா, இப்படி என்னை நானே கேள்வி கேட்டுக் கொண்டேன். இரவு யாரும் வராமல் போக அக்காவுடனே தூங்கிவிட்டோம். 

     காலையில் முழித்ததும் நேற்று நடந்த வியங்கள் நினைவுக்கு திரும்பின. அக்காவிடம் அம்மாவை பற்றி விசாரித்தபோது அக்கா அழ ஆரம்பித்தாள். என்னையும் தம்பியையும் அருகில் இருந்த என் ஆண்ட்டி வீட்டிற்கு அழைத்து சென்றாள் அக்கா. அங்கு சென்று பார்த்தபோது நிறைய பேர் கூடி இருந்தார்கள், அம்மாவும் இருந்தாள், கன்னம் செவக்க செவக்க அழுது கொண்டிருந்தாள். சுத்தி இருந்தவர்களும் அதையே செய்து கொண்டிருந்தனர். எங்களை பார்த்தவுடன் அம்மா இன்னும் கேவி கேவி அழ ஆரம்பித்தாள். அம்மாவிடம் சென்ற போது அப்பா இறந்துவிட்டதாக சொன்னாள். அதை கேட்டதும் உடனடியாக என்னில் உதைத்த கேள்வி, இறப்பா அப்படி என்றால்? இறந்துவிட்டால் இப்படி கோரமாக அழ வேண்டுமா? அங்கே இருந்த அனைவரும் என்னையும் தம்பியையும் கட்டிபிடித்து அழ ஆரம்பித்தனர். அட மூடர்களே எதுக்குடா இப்படி கதற கதற அழுகுறீங்க என இவர்களை பார்த்து கேட்க தோன்றியது. அம்மா அழுவதை பார்த்து தம்பியும் அழ ஆரம்பித்தான். எனக்கு அழ விருப்பமில்லை, அந்த இடத்தை விட்டு வெளியேறினேன்.

     சற்று நேரம் கழித்து தம்பி வந்து அம்மா கூப்பிடுவதாக சொல்லி அழைத்து சென்றான். இவர்கள் இன்னும் அழுவதை நிறுத்தியப் பாடில்லை. அனைவரும் கவர்மெண்ட் ஆஸ்பிட்டலை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். ஆஸ்பிட்டல் வெளியில் ஒரு பெரிய லாரி நின்றுகொண்டிருந்தது, அதை பார்த்ததும் அதில் அமர வேண்டுமென பிரியபட்டேன். ஏதோ வெள்ளை துணியால் கட்டிய இரண்டு மூட்டையை தூக்கி வந்தார்கள். ஆஸ்பிட்டலின் வாசலில் கொஞ்ச நேரம் கீழே வைத்திருந்தார்கள், அப்போது தான் கவனித்தேன் அது என் அப்பாவும், நாநாவும் என்று. முகம் தவி மற்ற அங்கங்களை வெள்ளை துணியால் சுற்றியிருந்தனர். ஏன் இப்படி சுற்றியிருக்கிறார்கள், ஓ இறந்துபோனால் இப்படிதான் செய்வார்கள் போல. இருவரையும் அருகில் நின்றுகொண்டிருந்த லாரியில் ஏற்றினார்கள். எனக்கு ஆர்வம் அதிகமானது எப்படியாவது இன்னைக்கு அந்த லாரியில் ஏறிவிட வேண்டுமென்று.

     அவர்களை ஏற்றியவுடன் லாரி நகர ஆரம்பித்தது. என் அருகில் வந்த என் பெரியப்பா என் கையை பிடித்து லாரிக்கு முன்புறமாக அழைத்து சென்றார். லாரி மெதுவாக உருள, அதை திரும்பி திரும்பி பார்த்தபடியே பெரியப்பாவின் கையை பிடித்து மெதுவாக நடந்து வந்தேன். என் தம்பியை லாரியின் முன் சீட்டில் ஏற்றுவதை பார்த்து, நானும் பெரியப்பாவிடம் என் விருப்பத்தை தெரிவிக்க என்னையும் ஏற்றினார்கள். உள்ளே ஏறியதும் எனக்கு அளவில்லாத சந்தோஷம் தொற்றிக்கொண்டது. லாரியின் முன் இருக்கையில் அமர்ந்து இந்த ஊரை சுற்றி வர போகிறோம் என நினைத்து நானும் தம்பியும் படு குஷியானோம். 

     அப்படியே சுற்றி பார்த்தபோது, கட்டிடங்களின் மேல் நின்றபடி அனைவரும் எங்கள் லாரியையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவ்வபோது பின் நோக்கியும் திரும்பி பார்த்தேன். கடல் போல மக்கள் எங்கள் லாரியையே பின் தொடர்ந்து வந்தனர். எவ்வளவு பேர் என்று தெரியவில்லை, கண்டிப்பாக நிறைய பேர்தான். அப்படி என்ன விஷேசம் இருக்கு இந்த லாரில. அப்படிபட்ட ஏதோ ஒரு விஷேசமான வாகனத்தில் தான் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என நினைக்கும்போது இன்னும் உற்சாகம் ஆனேன். ஏதோ ஒரு இடத்தில் லாரி நிற்க, இறங்க சொன்னார்கள். இருவரையும் இறக்கி வைத்து புல், முற்கள் அடர்ந்த பாதையில் நடக்க சொன்னார்கள், எங்கள் பின்னே அப்பாவையும் நாநாவையும் கொண்டுவந்தனர். யாரோ முன்னரே இரண்டு குழிகள் அமைத்திருந்தனர். ஏதேதோ பூஜைகள் செய்து இருவரின் நெற்றி பொட்டில் வைத்திருந்த காசை எடுத்து அந்த குழிகளில் இறக்கினர். எனக்கு ஒன்றும் புரியவில்லை ஏன் இப்படி செய்கிறார்கள். அனைவரையும் அழைத்து, மூன்று முறை மண்னை கையில் கொண்டு குழியினுள் போட சொன்னார்கள். நானும் இது என்ன விநோத விளையாட்டு என நினைத்து படு உற்சாகமாக, மணலை வாரி போட்டேன். எல்லாரும் அப்படி செய்தபிறகு மணல் முழுவதையும் சரித்து என் அப்பா இருந்த குளியை மூடினார்கள். முழுவதும் மூடிய பிறகு ஒருவர், யாரும் திரும்பி பார்க்காமல் வீடு சேருமாரு கட்டளை இட்டார்.

     அன்று இரவும் கன மழை பெய்ய தொடங்கியது. உறவினர்கள் அங்கங்கே அமர்ந்தபடி ஏதேதோ பேசி கொண்டிருந்தனர். அம்மாவை கவனித்தேன், இன்னும் இயல்பு நிலைக்கு வரவில்லை. வழக்கம் போல நானும் தம்பியும் வாசல் கால் அருகே நின்றிருந்தோம், ஆனால் மழை நீரில் விளையாடவில்லை. திடீரென்று என் தம்பி ஏதோ அறிந்தவனாக அம்மாவிடம் ஓடி போய், ‘அம்மா, அங்க அப்பா படுத்துக்கிட்டு இருக்காருல்ல மழைல நனையமாட்டாரா, நாம போயி அவர் நனையாதபடி குடைய வெச்சுட்டு வருவோமாஎன்று கேட்டவுடன் அம்மா மீண்டும் அழ ஆரம்பித்தாள். அவன் அப்படி கேட்டதும்தான் எனக்கும் எல்லாம் புரிய ஆரம்பித்தது, நானும் ஓடி போய் அம்மாவை அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தேன்.

     தலையை ஜன்னலோரமாக சாய்திருந்ததால் மழை சாரல் முகத்தில் பட முழித்துக் கொண்டேன். ஏனோ இன்று என் ஏதும் அறியா வயதில் என் அப்பா இறந்த போது நடந்த சம்பவங்கள் நினைக்க தோன்றியது. என் மனைவி அலைபேசியில் அழைக்கிறாள். ‘ம் சொல்லு மா’, ‘ஆ கிட்ட வந்துட்டேன்’, ‘அப்படியா முழிச்சுகிட்டாளா என் தங்கம் டி அவ என்ன பிரிஞ்சு ஒரு நாள்கூட துங்கமாட்டா’, ‘ ஆ உனக்கு பொறாமை டி, அவ கிட்ட குடு’, ‘புஜ்ஜீ குட்டி அப்பா கிட்ட வந்துட்டேன் டா வரும்போது உனக்கு திங்க என்ன வாங்கி வரட்டும் சொல்லு’, ‘ஹனி கேக்கா வாங்கி வரேன் இன்னும் கொஞ்ச நேரம் வந்துடுவேன் அம்மா கிட்ட குடு’, ‘ம்ம்ம்மா’, ‘ஆ சரிமா கிட்ட வந்துட்டேன் சீக்கிரமா வந்துட்றேன்’, ‘சரி மா வெக்குறேன்’. நான் இறங்க வேண்டிய இடம் வந்தது. 

     மழை நின்றபாடில்லை, ஹனிகேக்கையும், ஜாங்கிரியையும் (இது எனக்கு) வாங்கி கொண்டு மழையில் நனைந்தவாறே வீட்டை நோக்கி நடந்தேன். வீட்டின் அருகே நெருங்கும் போது கவனித்தேன், என் வீட்டிற்கு வெளியே நின்றபடி என் புஜ்ஜீ குட்டி இந்த மழையில் குடையை பிடித்து என்னை வரவேற்க காத்திருந்தாள். அதை பார்த்ததும் இந்த மழை நீரில் என் கண்ணீரும் கலந்தது.