Thursday 19 July 2012

பரமாத்மா!


     யார் இந்த பரமாத்மா! இந்த கேள்வியையே நான் என்னுள் பல முறை கேட்டுக்கொண்டே இருந்தேன். இதைபற்றி தேடிக் கொண்டே போகையில் ‘பரமாத்மாஎன்பதர்க்கு பல அர்த்தங்கள் கிடைத்தது. ‘உன்னதமான ஆத்மா’, ‘உயர்வான ஆத்மா’, ‘உண்மையான ஆத்மாஎன்று பல. இதில் ‘உண்மையான ஆத்மாஎன்பதுதான் இதற்க்கு சரியான அர்த்தமாக இருக்ககூடும் என்பது என் அனுமானம். அப்படி என்றால் ‘உண்மையான ஆத்மாஎன்பது என்ன, எங்கே இருக்கிறது, யாரிடம் கிடைக்கும் என்பது போல பல கேள்விகள் எழுந்தன. அதில் நான் சில முக்கியமான முடிவுகளுக்கு வந்துவிட்டேன், ‘பரமாத்மாஎன்பது கடவுள் கிடையாது, அதற்க்கு எந்த உருவமும் கிடையாது என்று. இதைபற்றி நான் தொடர்ந்து ஆராய்ந்தபோது இந்த ஆத்மாவை எல்லோராலும் வெளிகாட்ட முடியும் என உணர்ந்தேன். எல்லோராலும் வெளிகாட்ட முடியுமா? அப்படி என்றால் அது என்ன? நம் ஒவ்வொருவரின் மனம்தான் அந்த ஆத்மா, ‘பரமாத்மா’. சரி ஒருவரின் மனம் எல்லா தருணத்திலும், நிலையிலும் பரமாத்மனாக இருக்க முடியுமா என்று கேட்டால், அது கண்டிப்பாக முடியாது, அது மிக மிக கஷ்டமான காரியமும் கூட. அட! பின்னர் எப்போதுதான் நம் மனம் பரமாத்மாவாக(உண்மையான ஆத்மா) இருக்க முடியும். அதற்க்கான பதில், ஒருவர் இன்னொருவர் மீது செலுத்தும் அளவில்லாத, எந்த ஒளிவுமறைவும் இல்லாத அன்பு/காதலை வெளிபடுத்தும் போதுதான் அது முடியும் என்று நான் நம்புகிறேன். இதிலும் ஒரு உள்குத்து இருக்கிறது. ஒருவர் தன் தந்தை, தாய், சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்களை விட தத்தம் காதலர்களிடம் அன்பு வெளிபடுத்தும் போதுதான் அவனுள் இருக்கும் ‘பரமாத்மாவெளியாகிறார் என்பது என் அவதானிப்பு. அப்படி ஒரு காதலன் தன் காதலியிடம் உண்மையான ஆத்மாவோடு தன் அன்பை இப்படி வெளிபடுத்துகிறான்.....................




     பரவசம் ஆகிறேன் அறிமுகத்திர்க்கு முன்னமே!
     பரிச்சயம் ஆவது எப்படி ப்ரளயத்திர்க்கு முன்னமே!

     இதற்க்கு இன்னும் விரைவாக நீயே.
     கிடைத்து இருக்க கூடாதா நீயே.
     இனியாவது சேமித்துக்கொள் நீ என்னையே
    தொலைப்பதர்க்கு முன்னமே!

உன்னுடைய கண்களுக்கு மட்டும் நான் நிறையா யோகி
இப்பவும்.
இன்னும் வேரென்னென்ன தேவை நான் காதல் யோகி
ஆகவும்.
பூ மலர்கிற சத்தத்தை உன் புன்னகையில் கேட்க முடியும்
என்னுடைய ஏகாந்தத்தை திரித்திக்கொடு நீ என்னுடன்
இருக்கையிலையே.
நான் என்ன சொன்னாலும் கூட என்னை விட சுட்டி நீயே.
உதட்டிலையே மூடி வைத்துக்கொள் முத்தம் ஒன்றையே
திருடுவதர்க்கு முன்னமே!

கனவில் ரொம்ப கெட்டு கிடக்கிறேன் உன்னை கேட்காமலே.
இறகை நீயே கட்டி இருக்க இருதயம் பறக்கிறதே.
என்னுடைய ஏக்கங்கள் ஒவ்வொன்றாய் சொல்ல வேண்டும்.
அரவணைக்கும் போது அதை பார்த்துக்கொள் அதுபோதும்.
சகவாச தோசத்திலிருந்து சரியாகலாம் நானே.
எனக்காகவே தயாரித்துக்கொள் பிடிவாதம் ஒன்றையே
கொடைவதர்க்கு முன்னமே!


பரவசம் ஆகிறேன் அறிமுகத்திர்க்கு முன்னமே!
           பரிச்சயம் ஆவது எப்படி ப்ரளயத்திர்க்கு முன்னமே!

‘உண்மையான ஆதமாவோடு காதலிப்பவர்களுக்கு மேலே இருக்கும் கவிதை தொகுப்பை சமர்ப்பிக்கிறேன். எனக்கு எந்த காதல் அனுபவமும் இல்லை, இருந்தும் எனக்கு தெரிந்த காதலை பற்றிய பதிவு இது. பிடித்திருந்தால் காதலியுங்கள், இல்லை என்றால் திருத்தி எழுதுங்கள்.




No comments:

Post a Comment