Thursday 12 July 2012

நான் WITH STRANGERS – திங்கள்


இந்த கட்டுரையை ஆரம்பிப்பதர்க்கு முன்பு, என் எழுத்தை தொடர்ந்து படித்துக்கொண்டும், சகித்துக்கொண்டும், விமர்சித்துக் கொண்டும், ஆதரித்துக்கொண்டு வரும் என் நண்பர்களுக்கு ஒரு கடிதம் எழுதலாம் என்று நினைக்கிறேன், யாரும் இதை தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம் (ந.வி: தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம்னு சொன்னாலே ஏதோ தப்பா தான் சொல்லபோறனு தெரியுது சொல்லு).
அன்பு வாசகர்களுக்கு........

     முதலில் நான் எந்த நோக்கத்தில் தொடர்ந்து ப்ளாக் எழுதி வருகிறேன் என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன். என் ப்ளாகை படிக்கும் யாவருக்கும் நான் எந்த நியதியையும், பாடத்தையும் கற்பிக்க விருப்பமில்லை. ஏனென்றால் நான் எந்த காந்தியோ, பெரியாரோ இல்லை ஒரு வேலை, விவேகனந்தருக்கு பரமஹம்சரிடம் கிடைத்த தீக்‌ஷை போல எனக்கும் யாரிடமாவது கிடைத்தால் அப்போ நீங்கள் எதிர்பார்ப்பது போல நானும் எழுதுவேன், அதுவரை இப்படிதான் (ந.வி: இனிமே எல்லாமே அப்படிதான்). என் ப்ளாகை தொடர்ந்து படித்துக் கொண்டு வரும் நண்பர்கள் வைக்கும் முதல் குற்றசாட்டு’ ‘ஏண்டா இவ்வளவு நீளமா எழுதுற என்பதுதான். ஏங்க நான் நீளமா எழுதுறத பாத்து ஆச்சர்ய படாமா ஏன் வருத்த படுறீங்க?. இரண்டாவதாக நான் ஒவ்வொரு ப்ளாகின் ஆரம்பத்திலும் இது எந்த வகையான(genre)  கட்டுரை அல்லது கதை என்பதை சொல்லிவிட்டுதான் ஆரம்பிக்கிறேன் அதை கண்டுக் கொள்ளாமல் படித்து முடித்துவிட்டு ‘ஏங்க ஒரு சிறுகதையா எழுத வேண்டியத ஏன் இப்படி தேவையில்லாமல் ஃபிக்‌ஷன் ஸ்டோரியா எழுதுறீங்க’, ‘ஏ இத பயண கட்டுரையா எழுத போனீங்க, இத வெச்சு ஒரு அஞ்சு சிறுகதை எழுதி இருக்கலாமேஇது போன்ற பின்னூட்டன்கள் படிக்கும் போது கடுப்பாகுதுங்க. எதுக்காக உங்க விருப்பத்த என் மேல தினிக்கறீங்கனு புரியல, எனக்கு இப்போ சிறுகதை எழுத விருப்பமில்லை. எனக்கு இந்த மாதிரியான விமர்சனத்தை படிக்கும் போது ஒரு பெரிய சந்தேகம் வருது, விமர்சனம்னா இப்படிதான் இருக்கனுமா என்று. எல்லாருமே முதல்ல சொல்றது சுவாரஸ்யமா இல்லை என்று, எதுக்கு சுவாரஸ்யமா இருக்கனும்னு கேக்குறேன். ஒரு பயண கட்டுரையோ, ஃபிக்‌ஷன் ஸ்டோரியோ எப்படி ஆரம்பம் முதல் கடைசிவரை சுவாரஸ்யமா எழுதமுடியும்?( ந.வி: ஐ! இது நல்ல சுவாரஸ்யமா இருக்கே, கண்டீனீயூவ்). நா வேனா ஒரு த்ரில்லர் ஸ்டோரி எழுதும்போது பல்லை கடித்துக் கொண்டு படிக்கும் அனுபவத்தை கொடுக்கிறேன். நான் உங்களை போல தீவிர வாசிப்பாளனாகவோ, எழுத்து வெறியனாகவோ இல்லாமல் இருக்கலாம் ஆனால், எதை எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்ற அறிவு இருக்கிறது, என் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்காதீர்கள். அப்பறம் கெட்ட வார்த்தை யூஸ் பன்னாத, ஆபாசமா எழுதாத, ஒரு சின்ன சம்பவத்த ஏன் பெருசா இழுக்குற போன்ற பின்னூடங்கள் என்னை, என் எழுத்தை மேம்படுத்துவதாக எனக்கு தெரியவில்லை, என்னை மேலும் எழுதாமல் தடுக்கதான் செய்கிறது. கடைசியாக சொல்கிறேன் உங்கள் விருப்பத்திர்க்கு எழுத என்னால் முடியாது, நான் விரும்புவதையும், என் எண்ணங்களின் ப்ரதிபளிப்பாகதான் என் எழுத்தும் இருக்கும், நன்றி.

     சரி விடுங்க மேல சொன்னதையெல்லாம் மறந்திருங்க, இப்போ இந்த கட்டுரை பற்றி பேசுவோம் (ந.வி: அட பாவி எல்லாம் மறக்குற மாதிரியாட பேசுயிருக்குற, இனி அவுங்க உன் கட்டுரைய படிச்ச மாதிரிதான்). நண்பர்களே இதுவும் ஒரு பயண கட்டுரைதான், நான் அனுதினம் சந்திக்கும் எனக்கு சற்றும் அறிமுகம் இல்லாத முகங்களை(Strangers) பற்றிய பதிவு. இந்த பயண கட்டுரையை ஏழு பகுதிகளாக எழுதலாம் என்று இருக்கிறேன், பயபடாதீங்க ஏழு பகுதியையும் தனி தனியாகதான் எழுதப் போகிறேன் (ந.வி: அப்பாட! அப்போ இது லெந்தா இருக்காதுடா சாமி). அப்புறம் இன்னொறு விஷயம், நான் வைக்கும் தலைப்பை யாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை, எப்போதும் நான் கொடுக்கும் தலைப்புக்கும் என் ப்ளாகில் உள்ள சமாசாரங்களுக்கும் சம்பந்தம் இருக்கும். என் முந்தைய ப்ளாகான DREAM PROJECT ஐ படித்தவர்களுக்கு அது ட்ரீம் ப்ரோஜக்ட் என்பது நிறைய பேருக்கு தெரியவில்லை. ‘ட்ரீம் ப்ரோஜக்ட்என்பதை அந்த ப்ளாகின் கடைசியில்  தமிழில் கொடுத்திருந்தேன், அதை படித்த ஒரு நண்பர்அது நீங்க ஸ்பெல்லிங் மிஸ்டேக் பன்னீட்டீங்கனு நினைச்சேன் (இது என் ப்ரூஃப் ரீடரின் கவனதிர்க்கு) என்று சொன்னார். இந்த கட்டுரைக்கான தலைப்பை அனைவரும் புரிந்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நான் மறுபடியும் சொல்கிறேன் (ந.வி: திரும்ப திரும்ப பேசுற நீ) இது ஒரு பயணக் கட்டுரை, இதை வாசிக்கும்போது என் எழுத்துடன் நீங்களும் பயணம் செய்ய முடிகிறதா, நான் ரசித்த, வெறுத்த, ருசித்த, அழுத இடங்களில் நீங்களும் அதையே செய்ய முடுகிறதா, என் எழுத்து நடை எப்படி, இன்னும் என் எழுத்தை எப்படி மெருகேத்துவது, போன்றவற்றை மட்டும் உங்கள் விமர்சனத்தில் குறிப்பிடுங்கள் (ந.வி: டேய்! நாய முடியாது டா, நீ மட்டும் எங்க விருப்பத்த ஏத்துக்க மாட்ட ஆனா நாங்க மட்டும் உன் விருப்பத்துக்கு விமர்சனம் குடுக்கனுமா, அதெல்லாம் நாங்க பாத்துக்குரோம் உன் சொற்பொழிவ நிப்பாட்டீட்டு உன்னோட பய்ய்ய்ய்யண கட்டுரைய ஆரம்பி பா).

     இந்த கட்டுரையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் உண்மையாக நடந்தவை, இதில் எள் அளவும் கற்பனை கிடையாது. இன்னைக்கு திங்கட்கிழமை என்பதால் வழக்கம் போலவே தாமதமாகதான் அலுவலகம் செல்ல போகிறேன். ஓசூர் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தாச்சு, 15 நிமிடம் லேட்டாக. நான் தினமும் பயணிக்கும் தனியார் பேருந்து இந்நேரம் போயிருக்கும். இந்த பேருந்து நிலையம் என் அடுத்த எல்லா பகுதிகளிலும் இடம்பெறும், இன்னும் சொல்லபோனால் இந்த பேருந்து நிலையம் ஒரு மிக பெரிய நாடக மேடை, இதில் பல கதாப்பாத்திரங்கள் வலம் வருவதை நீங்கள் அடுத்தடுத்த பகுதிகளில் காணலாம். முதல்ல கிளம்ப நிக்குற பேருந்துல இடதுபக்கமாக ஒரு சீட் பிடிச்சு அமர்ந்தாச்சு. பெங்களூர்க்கு 5 நிமிடத்திர்க்கு ஒரு பேருந்து இருந்தாலும் எப்போதும் கூட்டமாகதான் இருக்கும், அதுவும் இது போன்ற காலை வேலைகளில். இது தினமும் நடப்பதுதான், என் பக்கத்து இருக்கையில் அமர பேருந்தில் ஏறும் பயணிகள் எவரும் சற்று யோசிப்பார்கள் ஏன் என்று எனக்கும் புரிவதில்லை. அதுவும் என்னைக்காவது ஒரு நாள் அதிசையமாக ஒரு அழகான பொன்னு பஸ்ல ஏறும்போது, அஹா அவள் என் பக்கத்தில் வந்து அமரமாட்டாளா என்று என் மனம் ஏங்கும். முதுகில் லேப்டாப் பேக், மேலே அடிடாஸ் டீ-சர்ட், கிழே லீ ஜீன்ஸ், அதுக்கும் கிழே ரீபாக் ஷீ வுடன் இருந்தால் அவன் கண்டிப்பாக மென்பொருள் விஞ்ஞானியாகதான் இருப்பான். அவர்களை பார்க்கும்போது சற்று பொறாமையாகவும், நிறைய வருத்தமாகவும் இருக்கும். அப்படிதான் ஒரு நாள் இதே பேருந்து நிலையத்தில் என் பள்ளி நண்பன் ஒருவனை சந்தித்தேன், பள்ளியில் படிக்கும்போது அவன் காரா சேவுக்கு சட்டை பேண்ட் போட்ட மாதிரி இருப்பான். ஆனால், இன்றோ ரசகுல்லாவில் இருக்கும் சீனி தண்ணி மாதிரி பளபளப்பாக இருந்தான். எது இருக்கோ இல்லையோ கண்டிப்பாக கண்கள் குளு குளுக்க கூலர்ஸ் இருக்கும். வழக்கம் போல இன்றும் என் பக்கத்தில் யாரும் வந்து அமரவில்லை. பஸ் புறப்படும் நேரத்தில் ஒரு அக்கா என் பக்கத்தில் வந்து நின்றார், அதன் பிறகு நடந்த உரையாடல் எக்ஸ்க்லூசிவாக உங்களுக்கு பாருங்கள்.........

‘இங்க வக்காரலாமா
‘ம்.. வொக்காருங்க
‘இல்ல நான் பொம்பள்ள.....
‘ம்.. ஆமாங்க நீங்க பொம்பள, நான் ஆம்பள அதுக்கு என்னா இப்போ
‘இல்ல உங்க பக்கத்துல உக்காரலாமா
‘அட உக்காருங்க நான் உங்கள ஒன்னும் செஞ்சுரமாட்டேன்

அதர்க்கு மேல் எதுவும் பேசாமல் என் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டாள் இந்த 21ம் நூற்றாண்டின், என்னை எரித்த “கண்ணகி”.  பஸ் உருள ஆரம்பித்தது, வழியில் இன்னும் சிலபேர் ஏறிக் கொண்டனர். அடுத்த 20 நிமிடத்தில் நான் இறங்க வேண்டிய ‘பொம்மசந்த்ராஎன்ற இடம் வந்தது. அதாவது நாராயண ஹுருதயாலையா கேள்வி பட்டிருக்கீங்களா அதுக்கு அடுத்த ஸ்டாப்தான் இந்த இடம். இந்த இடத்தில் இறங்கி இன்னொறு பஸ் பிடித்துதான் என் அலுவலகம் செல்ல வேண்டும்.

     இங்க பஸ்ஸுக்காக காத்திருந்தேன், பக்கத்தில் ஒரு கல்லூரி இருப்பதால் நிறைய இளம் பெண்களை சைட் அடிப்பதர்க்கான வாய்ப்பு அதிகம். இப்போ இருக்கும் இளைஞர்களும், இளைஞீகளும் டீ-சர்ட்டில் வாக்கியங்களும், வாழ்க்கை தத்துவங்களும் எழுதி மக்களிடம் மாற்றம் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். இது ஒரு கலாசாரமாகவே மாறி விட்டது போல. இப்படி பல டீ-சர்ட் புரட்சியாளர்களை நான் தினமும் பார்க்கிறேன். அதிலிருந்து ஒரு சின்ன ட்ரைலர் உங்களுக்காக...........






















கீழ் வரும் வாக்கியம் அடங்கிய டீ-சர்டை ஒரு சப்ப ஃபிகர் உடுத்திருந்தாள்……..





இதையோ ஒரு திம்ஸு கட்டை.......







பஸ் வந்ததும் தாவி குதுச்சி, உள்ளே நுழைந்து சீட் பிடிச்சாச்சு. இந்த இடத்திலிருந்து என் கம்பெனிக்கு செல்ல ஒரு 15 நிமிடமாகும். பெங்களூர் நகர் பேருந்துகளில் பயணித்தவர்களுக்கு தெரிந்திருக்கும் பின் பக்க கதவுக்கு பக்கத்தில் இடது பக்கமாக இரண்டு சீட்கள் பஸ்ஸின் பின் புறத்தை பார்த்தது போல இருக்கும், அதர்க்கு எதிர் சீட்டில் ஜன்னல் ஓரமாக அமர்ந்துக் கொண்டேன். என் முன்னே அமர்ந்திருந்தவர் கையில் “பெங்களூர் மிரர்என்ற தினசரியை வைத்திருந்தார். பஸ் நகர ஆரம்பித்ததும், அவர் நாளிதழை விரித்து படிக்க ஆரம்பித்தார். பின் பக்கத்தில் கவர்ச்சியான புகைபடத்துடன் ஒரு ஹாட் செய்தி. நடிகை தன் அடுத்த கன்னட படத்தில் நிர்வாணமாக நடிப்பதை பற்றிய ஒரு எக்ஸ்க்லூசீவ் கவரேஜ். முதல் கேள்வியே, ‘எப்படி இந்த மாதிரி நிர்வாணமாக நடிக்க ஒத்துக் கிட்டீங்கஎன்பதுதான். அதற்க்கு என்ன பதில் வந்திருக்கும் என்று உங்களுக்கே தெரிந்திருக்கும். எல்லா பக்கங்களையும் முடித்து, கடைசி பக்கத்துக்கு வந்த ஆசாமி அந்த செய்தியையே ஒரு 10 நிமிடம்  படித்திருப்பார். 10 நிமிடம் அந்த செய்திக்கா இல்லை புகைபடத்துக்கா என்று தெரியவில்லை. சரியாக 15 நிமிடங்கள் கழித்து நான் இறங்க வேண்டிய இடம் வந்தது. இது ஒரு இண்டஸ்ட்டிரீயல் ஏரியா, இதர்க்கு பெயர் ‘ஜிகினி இண்டஸ்ட்டிரீயல் ஏரியா’. இங்கலிருந்து கொஞ்ச தூரம் நடந்து சென்று என் கம்பனியை சேர்ந்தேன் அரை மணி நேரம் தாமதமாக.



     மாலை 5.30 மணி ஆனவுடன் பள்ளியில் படித்தபோது செய்தது போல குடு குடு வென வீட்டை நோக்கி ஓட தோன்றும் ஆனால், இது பள்ளியும் இல்லை நான் மாணவனும் இல்லை. மாலையில் வீடு திரும்பும்போது என்னுடன் பணி புரியும் ஒரு சக நண்பனுடன் செல்வதுதான் வழக்கம். காலையில் இவன் என்னைவிட இன்னும் அரை மணி நேரம் தாமதமாகதான் வருவான். இவனுடன் பயணிப்பது எனக்கு விருப்பமில்லை என்றாலும் இவனும் ஓசூரில் இருப்பதால் செல்ல வேண்டிய கட்டாயம். இருவரும் 6 மணிக்கு வெளியே வந்தோம்.

     வெளியே வந்ததும், ‘மச்சா ஏனோ ஒடம்பு முடியல, ஜரதோசமா இருக்கு ஒரு 90 அடிச்சா சரியா போயிடும், காசு வெச்சிருக்கியாஎன்று கேட்டான். ‘இல்ல டா பஸ்ஸுக்கு மட்டும்தான் ஒரு 50 ரூபா வெச்சிருக்கேன்என்று பதிலளித்தேன்.       ‘சரி நான் என்கிட்ட இருக்குற காசுல அடிக்கிறேன், நீ எனக்கு பஸ்ஸுக்கு டிக்கெட் எடுத்துருஎன்றவனுடன் வைய்ன் ஷாப் பை நோக்கி நடந்தோம். ஜரதோசத்துக்கு சரக்கு அடித்தால் மேலாகும்னு எவன் சொன்னானோ தெரியல. வாயில் பொரியை போட்டுக் கொண்டே வந்தவன், பொறி கிளம்ப பேசினான். ‘மச்சா நீ உண்மையிலே க்ரேட்டுடா, என்கூட தினமும் இந்த வைய்ன் ஷாப் வரைக்கும் வர ஆனா சரக்கு அடிக்க மாட்டேன்குற க்ரேட் டா க்ரேட்என்றவனை மடக்கி. ‘என்னடா அதுக்குள்ள வேல செய்ய ஆரம்பிச்சிருச்சாஎன்று வினவினேன். ‘இல்ல டா அதுக்கு இன்னும் கொஞ்ச நேரமாகும்என்றவன் தொடர்ந்து பஸ் நிறுதத்தை நோக்கி நடந்தவாரே எந்த எந்த சரக்கு அடித்தால் எப்படி எப்படி இருக்கும் என்று எனக்கு பாடம் சொல்லி கொடுத்தான். பஸ் நிறுதத்தில் மீண்டும் கொடைய ஆரம்பித்தான். ‘மச்சா எவ்ளோ காசு வெச்சிருக்க மொத்தமா, சரக்கு அடிச்சதும் ஏதாவது சாப்பிடனும்என்று கேட்டவனிடம் ‘என்கிட்ட மொத்தமா 55 ரூபா இருக்குஎன்றேன். ‘சரி ஒரு எக் ப்ரைட் ரைஸ் சாப்பிடலாம் 20 ரூபாதான்’, ‘டேய் அப்பரம் பஸ்ஸுக்கு காசு பத்தாதுடா’, ‘இல்ல இல்ல இங்கலிருந்து டைரக்ட் அத்திபள்ளி பஸ் பிடிச்சோம்னா கரக்டா இருக்கும்’, ‘டேய் வேணாம் டா இப்பவே டைம் 6.45 ஆச்சு இந்த நேரத்துல அந்த பஸ்லாம் கிடைக்காது’, ‘அதெல்லாம் கிடைக்கும் வாடாஎன் கையை பிடித்து ப்ரைட் ரைஸ் கடைக்கு இழுத்துக் கொண்டு போனான். ‘எனக்கு வேண்டாம் நீயே சாப்பிடுஎன சாப்பிட வைத்தேன்.  சாப்பிட்டு முடித்து, பஸ்ஸுக்காக காத்திருந்தோம். அவன் சொன்னதுபோல அத்திபள்ளி பஸ் கிடைத்தால்தான் கையில் இருக்கும் காசுக்கு வீடு போய் சேர முடியும். நேரம் 7.15 ஆனது இன்னும் அந்த பஸ் வரவில்லை, நான் காலையில் வந்தது போல் இங்கலிருந்து பொம்மசந்த்ரா போயி ஓசூர் பஸ்ஸை பிடித்தாலும் என்னிடம் இருக்கும் காசுக்கு ஒருவருக்கு கூட பத்தாது, இதில் இருவரும் எப்படி வீடு சேரப்போகிறோம் என்ற கவலை சூள்ந்துக் கொண்டது. அவனிடம் சற்று கோபமாக பேச ஆரம்பித்தேன், ‘நா அப்பவே சொன்னயில்ல அந்த பஸ் இந்நேரத்துக்கு வராதுனு, இப்ப பாரு என்ன செய்றது’. ‘இப்பவும் ஒன்னுமில்ல இப்படியே நடந்து போயி ஒரு நான்கு, ஐந்து ஸ்டாப் தள்ளிபோயி ஏறினால் டிக்கெட்டுக்கான விலை குறையும்என்று சற்றும் யோசிக்காமல் சொன்னான். ஆனால் அவன் சொன்னதையே வேறு வழியில்லாமல் ஆமோதிக்க வேண்டியிருந்தது.

     நேரம் 7.30, இந்த இருட்டில் எரிச்சலுடன் நடக்க ஆரம்பித்தேன்(தோம்), ரோட்டிலோ யாருமில்லை இங்கு நிறைய வழிபறி நடந்திருக்குனு கேள்வி பட்டிருக்கேன்(கோம்). ஒரு பதினைந்து நிமிடத்திர்க்கு மேல் நடக்க முடியவில்லை. ‘டேய் நில்லு டா நடக்க முடியவில்லை, இங்கையே பஸ் வந்தா ஏறிக்கு(வோம்)’, ‘டேய் இங்கலிருந்து ஏறுனா காசு அதிகமாகும் டா, இன்னுமொறு ரெண்டு ஸ்டாப் தள்ளிபோவோம் டா’, ‘டேய் என்ன ஆனாலும் பரவாயில்லை இனி என்னால் முடியாது, அதோ வர்ர பஸ்ல ஏறுஎன்று கதரினேன். பஸ்ஸில் ஏறி பொம்மசந்த்ராவுக்கு டிக்கெட் வாங்கினேன், ஒருவருக்கு 8 ரூபாய் ஆக 16 ரூபாய் கழிந்து 19 ரூபாய் மீதம் இருந்தது. இப்போ இன்னும் பயம் அதிகமாகிவிட்ட்து எப்படி இந்த காசை வைத்துக் கொண்டு இருவரும் வீடு சேருவோம் என்று. அவனிடம் பேசுவதையே நிறுத்தி விட்டேன், இப்போ பொம்மசந்த்ராவிலிருந்து ஓசூருக்கு நேராக பஸ் பிடிக்க முடியாதுனு தெரிந்துவிட்டது ஏனென்றால் ஒருத்தருக்கே 19 ரூபாய் ஆகும். சரி அங்கலிருந்து அத்திபள்ளி போக ஒருவருக்கு 12 ரூபாய் ஆகும், என்ன செய்வதென்றே தெரியவில்லை பேசாமல் இவனை தவிர்த்துவிட்டு நான் மட்டும் தனியாக சென்று விடலாமா என்றுகூட ஒரு கனம் யோசித்தேன். நான் நல்ல குடும்பத்துல பொறந்ததுனால அப்படி செய்யவில்லை. பொம்மசந்த்ரா நெருங்க நெருங்க பதட்டம் அதிகமானது. பஸ்ஸை விட்டு இறங்கியவுடன் மீண்டும் ஒரு யோசனை சொன்னான், ‘டேய் ஒன்னும் பயபடாதடா பி.எம்.டி.சி ல போனாதான் 12 ரூபாய் ஆகும், ப்ரைவேட் பஸ்ல போனா கொஞ்சம் கம்மியா இருக்கும் அதுல அத்திபள்ளி போயி அங்கிருந்து என் ப்ரெண்டுக்கு போன் செய்தா அவன் வண்டி கொண்டு வருவான்என்றான். அவன் சரக்கு அடித்திருந்தாலும், ஏனோ அவன் சொன்ன யோசனைகளை என்னால் நிராகரிக்க முடியவில்லை. அவன் சொன்னபடியே ஒரு ப்ரைவேட் பஸ் பிடித்தோம் என்னா ஆச்சர்யம் அத்திபள்ளிக்கு இருவருக்கும் சேர்த்து 14 ரூபாய் மட்டும்தான் வாங்கி கொண்டனர். ‘டேய் இனிமே டெய்லி இப்படியே வருவோம் டாஎன்று படு உற்சாகமாக சொன்னான். நான் அப்படியே ஸ்லோ மோஷனில் பல்லை கடித்துக் கொண்டு அவனை முறைத்துப் பார்த்தேன், அவன் தன் முகத்தை இன்னொறு பக்கம் திருப்பிக் கொண்டான்.  மீதம் இருப்பதோ 5 ரூபாய், அத்திபள்ளியிலிருந்து ஓசூருக்கு ஒருவருக்கு 4 ரூபாய் ஆனால் இந்த நாதாரி ஓசூர் வரைக்கும் வர மாட்டான் பாதி வழியிலையே இறங்கிக் கொள்வான். திடீர் என்று அவன் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு, ‘டேய் இருடா என்கிட்ட 1 ரூபாய் 50 காசு இருக்குஎன்றான் சிரித்துக் கொண்டே. அவன் சிரிப்பதை பார்த்தால் எனக்கு பத்திக்கிட்டு வந்தது.என் ஸ்டாபுக்கு 2 ரூபா 50 காசு தான் எப்படியோ கரக்டா இருக்கு இல்லஎன்று தன் குழசாமியை வேண்டிக் கொண்டான். அவன் கடைசியாக பஸ்ஸைவிட்டு இறங்கும்போது நான் கண்டுகொள்ளவில்லை. கடந்த ஒரு மணி நேரமாக எனக்கு ஏற்பட்ட அனுபவமும், பதட்டமும் நான் வாழ்நாளில் என்றும் சந்தித்ததில்லை. என்னடா இவன் ஸ்ட்ரேஞ்சர பத்தி சொல்லறனு சொல்லிட்டு நண்பன பத்தி சொல்லிக் கொண்டிருக்குறானெனு யோசிக்க செய்கிறீர்களா. இவ்வளவும் நடந்த பிறகு எப்படி அவனை என் நண்பனாய் பார்க்க முடியும். இனி அவனும் எனக்கு  ஸ்ட்ரேஞ்சர்தான்.

பின் குறிப்பு:

     ந.வி – நலம் விரும்பிகள்;

யார் இந்த நலம் விரும்பிகள்?.... என் எழுத்தை தொடர்ந்து படித்துக் கொண்டு வரும் நண்பர்கள்..................

ப்ரவீன் வெங்கடேஷ்; சூர்ய குமார்; ப்ரவீன் வின்; சபரி தாஸ்; பால குமார்; மீரா (சில பாதுகாப்பு காரணங்கள் குறிச்சு பெயர் மாற்றம் செய்யப் பட்டிருக்கிறது); லாவண்யா (என் ப்ரூஃப் ரீடர்); ராஜ ராஜேந்திரன்; அருண் டி பாஸ்; நிர்மல் ம்ரின்ஸோ; பால கனேசன்; அருண் டிர்; விஜயபாஸ்கர் விஜய்; பிரியமுடன் துரோகி; பூர்ண சந்திரன்.



2 comments:

  1. vaazthukkal...

    Padhivu arpudhamaaga vandhu ulladhu...

    Rombavum rasithu padithen

    ReplyDelete
  2. உங்கள் கடிதத்திற்கு என் பதில்.

    // நான் ஒவ்வொரு ப்ளாகின் ஆரம்பத்திலும் இது எந்த வகையான(genre) கட்டுரை அல்லது கதை என்பதை சொல்லிவிட்டுதான் ஆரம்பிக்கிறேன் அதை கண்டுக் கொள்ளாமல் படித்து முடித்துவிட்டு ‘ஏங்க ஒரு சிறுகதையா எழுத வேண்டியத ஏன் இப்படி தேவையில்லாமல் ஃபிக்‌ஷன் ஸ்டோரியா எழுதுறீங்க’, ‘ஏ இத பயண கட்டுரையா எழுத போனீங்க, இத வெச்சு ஒரு அஞ்சு சிறுகதை எழுதி இருக்கலாமே’ இது போன்ற பின்னூட்டன்கள் படிக்கும் போது கடுப்பாகுதுங்க. எதுக்காக உங்க விருப்பத்த என் மேல தினிக்கறீங்கனு புரியல, எனக்கு இப்போ சிறுகதை எழுத விருப்பமில்லை.// யார் திணித்தது? நான் சொன்னது என்னவென்றால், உங்களிடம் நிறைய கதைகள், அதுவும் சுவாரஸ்யமான கதைகள் கொட்டிக் கிடக்கின்றது. ஆனால் அதை சொல்ல வரும்போது நீங்கள் கோட்டை விட்டு விடுகிறீர்கள். எனவே அதை கட்டுரையாக எழுதாமல், கதைகளாக எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். காரணம், நீங்கள் எழுத ஆசைப்படுகிறீர்கள். ஆனால் உங்களுக்கு வரும் விமர்சனங்கள் எதிர்மறையாக இருப்பதால் ஒரு நண்பன் என்ற அடிப்படையில் நான் அதை சொன்னேன். மற்றபடி உங்களின் மீது என் கருத்தை நான் திணிக்க வேண்டிய அவசியமே இல்லை.

    // என் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்காதீர்கள்.// யார் இருந்தார்கள்? நீங்கள்தான் எங்கள் பெயரை டேக் செய்தீர்கள். படித்தவன் கருத்து சொல்லத்தான் செய்வான். என்ன தவறு? நான் உங்களிடம் ஏற்கனவே ஒரு முறை சொன்னேன், என் வலைப்பூவில் முதலில் நான் பத்து கட்டுரைகள் எழுதினேன். ஆனால் அதற்கு வந்த பின்னூட்டங்கள் எல்லாம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் என் எழுத்துக்களை குறை சொன்னன. நான் அதில் இருந்த நியாயத்தை முழுக்க முழுக்க ஏற்றுக் கொண்டு பின்னர் மெல்ல சிறுகதைகளை எழத ஆரம்பித்தேன். அவை சுவாரஸ்யமாக இல்லை என்றாலும், படிக்கும்படியாகவாவது இருப்பதாய் இப்போது சொல்கிறார்கள். அவர்கள் திட்டியதை முட்டுக்கட்டையாக நான் எடுத்திருந்தால் இது சாத்தியமா? உங்கள் கட்டுரையிலோ, கதையிலோ சுவாரஸ்யம் இல்லை என்று சொல்வது படிக்கும் எங்களுக்குத்தான் தெரியும். உங்கள் கதையோ கட்டுரையோ உங்கள் திருப்திக்கு எழுதப்படுபவை என்றால் அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்? நாங்கள் உணர்ந்ததை சொல்லத்தானே செய்வோம். முட்டுக்கட்டை போட நினைப்பவன் உங்களுக்கு தொலைபேசியில் இப்படி எழுதினால் இன்னும் ன்றாய் வரும் என்று டிப்ஸ் கொடுக்கமாட்டான். நீயெல்லாம் ஏன் எழுதுகிறாய்? என்று நேரடியாக கேட்பான்).

    //உங்கள் விருப்பத்திர்க்கு எழுத என்னால் முடியாது, நான் விரும்புவதையும், என் எண்ணங்களின் ப்ரதிபளிப்பாகதான் என் எழுத்தும் இருக்கும்// அதுதான் எங்களின் விருப்பமும்.நானும் அதையேதான் எழுதுகிறேன். ஆனால் நீங்கள் அதை பதிவிடுவது பொதுவெளியில்.அதை மறந்து விடாதீர்கள். உங்களுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு அப்போதே பதில் சொல்லிவிடுங்கள். இப்படி கடிதம் எல்லாம் எழுத வேண்டிய அவசியம் இல்லை.

    இந்த பதில் கடிதம் கூட கீழே நீங்கள் நலம் விரும்பி என்ற பெயரில் என் பெயரை குறிப்பிட்டதால்தான் நான் எழுதினேன்.)

    ReplyDelete