நானும் சாரு நிவேதிதாவும்
நான் என் கல்லூரிப் படிப்பை முடித்து வேலைக்கு சேர்ந்தப் பிறகு ஒரு தனிமைத்தனத்தை உண்ர்ந்தேன். என் நண்பர்கள், பெற்றோர்கள், சகோதரர்கள், உறவினர்களைத் தாண்டி ஒரு பினைப்பு தேவைப்பட்ட்து. ‘அந்த பினைப்புதான் வாசிப்பு’. நான் முதலில் வாசிக்க ஆரம்பித்தது ‘ஆனந்த விகடன்’ வார இதழைத்தான். ஆனந்த விகடன் வாசிக்க ஆரம்பித்தப் பிறகுதான் தமிழில்யுள்ள அறிய பெரிய அறிஞர்கள், படைப்பாளிகள், எழுத்தாளர்கள் எனக்கு அறிமுகமானார்கள். ஆனந்த விகடன் வாசிக்க ஆரம்பித்த சில நாட்க்களில் ஒரு அறிவிப்பு வந்தது, சாரு நிவேதிதா என்னும் எழுத்தாளர் அடுத்த வாரத்திலிருந்து “மனம் கொத்திப் பறவை” என்னும் தலைப்பில் ஒரு தொடரை எழுதப்பொகிறார் என்று. இதுதான் எனக்கும் சாருவுக்குமான முதல் சந்திப்பு. அதற்கு முன்பு அவர் பெயரைக்கூட நான் கேள்விப்பட்ட்தில்லை.
மனம் கொத்திப் பறவை
மனம் கொத்திப் பறவைத் தொடரை படிக்க ஆரம்பித்தப் பிறகு, உண்மையாகவே என் மனதைக் கொத்திவிட்டார் சாரு. அந்த தொடரை படிக்க படிக்க நான் சாருவை மிகவும் நேசிக்க ஆரம்பித்துவிட்டேன். ஏனென்றால் அந்த தொடரில் சாரு நம் கையைப் பிடித்து நம்மளையும் அவருடன் பயணிக்க செய்வார். நான் அதுவரை ரஜினிகாந்துக்கு மட்டும்தான் வெறியனாக இருந்தேன் இப்போ சாரு நிவேதிதாவோட வெறியனாகவும் மாறினேன்.
அவரைப் பற்றிய தகவல்களையும், செயல்களையும் இணையத்தில் தேடி தேடி படித்தேன். அப்போதுதான் அவர் இயற்றிய புதினம் ஏதேனும் ஒன்றை வாங்கிப் படிக்கலாம் என்று முடிவு செய்தேன். என் ஊரில் சாரு புத்தகங்கள் கிடைக்காமல் போக, சென்னையில்யுள்ள என் நண்பன் சூரியக்குமாரிடம் சொல்லி ‘ஸீரோ டிகிரி’ என்னும் சாருவின் ‘Magnum Opus’ புத்தகத்தை வாங்க சொன்னேன்.
ஸீரோ டிகிரி
என் நண்பன் சென்னையில் பல புத்தகக்கடையில் தேடியும் புத்தகம் கிடைக்கவில்லை, மிகவும் வருத்தமாக இருந்தது. ஒரு நாள் “ஸீரோ டிகிரி வாங்கி விட்டேன்” என்று ஒரு SMS வந்தது, நான் மிகுந்த சந்தோஷத்தில் திகைத்து கிடந்தபோது, என் நண்பன் போனில் அழைத்து ‘ டேய் மச்சான் நான் இந்த புக்க கொஞ்சம் படிச்சேண்டா, ரொம்ப ஆபாசமா இருக்குடா வீட்டில் யாருக்கும் தெரியாமல் இதைப் படிடா’ என்று கூறியப்பிறகு. நான் சற்று யோசித்தேன் என்னடா இது இப்படி சொல்றான், இருந்தாலும் எனக்கு சாரு மேலிருந்த வெறியினால் அனுப்பிவிடுடா பரவாயில்லை என்று சொன்னேன்.
கூரியரில் வந்துசேர்ந்த்து ஸீரோ டிகிரி, படிக்க ஆரம்பித்துவிட்டேன். என் நண்பன் கூறியதைப் போலவே ஆரம்பத்திலிருந்தே ஆபாசமாக இருந்தது. அதுவும் தந்தை மகளுக்கு எழுதும் கடிதத்திலேயே அவ்வளவு ஆபாசம். சேரி கடைசியில் இதை வைத்துக்கொண்டு ஏதாவது ஒரு நியதி கூரியிருப்பார் என்று கருதி மேலும் படிக்க ஆரம்பித்தேன். படித்துக் கொண்டிருக்கும்போது, ‘என்னடா இவரு நம் சமுதாயத்தில் நடக்கும் அத்தனை கொடுரங்களையும், அந்தரங்கமான விசயங்களையும் மிக வெளிப்படையாக பதிவு செய்கிறாரே இவர் இந்தியாவில்தான் இருக்கிறார என்ற சந்தேகம் எழுந்தது. ஏனென்றால் நம் நாட்டில் உள்ள ஒரு எழுத்தாளர் இவ்வளவு சுதந்திரமாக எழுதிகிறாரே என்று ஆச்சிரியப்பட்டேன்.
இதில் நடுவில் என் நண்பன் அடிக்கடி போன் செய்து ‘மச்சா எப்படிடா போயிட்டிருக்கு’ என்று கேட்ப்பான். எனக்கு என்ன சொல்றதுனே தெரியாது ஏதோ சொல்லி சமாளித்துக் கொண்டு, மேலும் படிக்க தொடர்ந்தேன். படிப்பதர்க்கே மிகவும் கடிணமாக இருந்தது ஒரு கோர்வையாகவும், ஒரு சாப்டருக்கும் இன்னோரு சாப்டருக்கும் தொடர்பு இல்லாமலும் இருந்தது, அதை பிறகு Non-linear format என்று தெரிந்துக்கொண்டேன். நான் இதற்கு முன்பு சில ஆங்கில புதினங்கள் படிக்க முயற்சி செய்துள்ளேன் ஆனால் ஒன்றும் புரியாது. இந்த ஸீரோ டிகிரியை படித்தப்பிறகும் ஒன்றும் புரியவில்லை. ஆஹா என்னடா இது ஆங்கிலத்தில் படிச்சாதான் புரியமாட்டேன்கிறதேனு நமக்கு நல்லா தெரிஞ்ச தமிழ்ல படிச்சாலும் புரிய மாட்டேங்குதே. இதற்க்காகவே இந்த புதினத்தை கொண்டாடலாம் என தோன்றியது.
இவ்வளவு நாளாக சாருவைப் பற்றி தேடி படித்துக் கொண்டிருந்த நான் இப்போழுது ஸீரோ டிகிரியை பற்றி தேட ஆரம்பித்து விட்டேன். அப்படி எனக்கு கிடைத்த செய்தி என்னவென்றால், இந்தியாவிலையே முதன்முறையாக ஸீரோ டிகிரிதான் lipogrammatic style லில் எழுதப்பட்ட புதினம், இந்த ஒரு விசையத்திர்காகவே தமிழ் சமுதாயம் சாருவை கொண்டாட வேண்டும். இது தெரிந்தப் பிறகு மேலும் சாருவின் தீவிரமான வெறியனானேன். ஸீரோ டிகிரியை கொண்டாடிக் கொண்டிருந்தபோதே ஒரு அறிவிப்பு வந்தது, சாருவின் ஆறாவது நாவலான ‘எக்ஸைல்’ டிசம்பர் 6ம் தேதி வெளியிடபோகிறார்கள் என்று. மீண்டும் சென்னையிலுள்ள என் நண்பன் சூரியக்குமாருக்கு போன் செய்து இந்த சமாசாரத்தை கூறி, ‘எக்ஸைல்’ லை வான்கச் சொன்னேன். அவனும் ‘எக்ஸைல்’ கான தேடுதல் வேட்டை ஆரம்பித்து கடைசியாக சென்னை புத்தக்க் கண்காட்சியில் வாங்கினான். எக்ஸைல் என்னிடம் வந்து சேர்ந்ததும் பர பர வென்று ஒரு பத்து நாட்களில் படித்து முடித்தேன்.
‘எக்ஸைல்’ விமர்சனம்
வெற்றிகரமாக ‘எக்ஸைல்’ ஐ படித்து முடித்துவிட்டேன். ‘எக்ஸைல்’ படிக்க ஆரம்பித்தவுடனே ‘Auto fiction’ என்றால் என்ன என்பதை தெரிந்துக்கொள்ள முடியும். இந்த புதினத்தைப் பற்றி கூற வேண்டுமானால் இதில் வரும் கதப்பாத்திரங்களை அறிமுக படித்திதான் கூறமுடியும். உதயா, அஞ்சலி ஆகிய இருவரும்தான் இந்த புதினத்தின் பிரதான்ப் பாத்திரங்கள். அடுத்து, உதயாவின் நண்பர்களாக வரும் சிவா மற்றும் கொக்கரக்கோ. இதில் என்னை மிகவும் கவர்ந்த கதாப்பாத்திரம் ‘கொக்கரக்கோ’. இவருடைய சிறப்பு என்னவென்றால், கதைக்கு உள்ளே பயணிக்காமல் கதைக்கு வெளியே பயணிப்பதுதான். கொக்கரக்கோவை எனக்கு மிகவும் பிடிக்க இன்னோறு காரணம், அவர் என் ஊரான ஓசூர் வழியாக பயணம் செய்யும்பொழுது ஒரு பிரச்சணையை சந்திப்பதுதான். கொக்கரக்கோ என் ஊரில் அப்படி ஒரு சம்பவம் நடந்த்தர்க்கு நான் உங்களிடம் மண்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
உதயா, அஞ்சலிப் பற்றி கூறுவதர்க்கு முன்பு சிவாப் பற்றி கூறிவிடுகிறேன். சிவா உதயாவின் பால்ய சிநேகிதன், சிவாவுடைய வாழ்கையில் நடக்கும் சம்பவங்களை வைத்து வாசகர்களுக்கு ஒரு பாடம் கர்ப்பித்துள்ளார். உண்மையில் சிவா யாரென்று சாரு கடைசியில் கூறுவது எதிர்ப் பார்க்காத திருப்பம். இப்போ உதயா, அஞ்சலியிடம் வருவோம். இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த காதலோடு அலைந்துக் கொண்டிருப்பார்கள். யார் காதல் யாரை விஞ்சுகிறது என்று கூறுவது மிகவும் கஷ்டமாக இருக்கும். அஞ்சலியின் வாழ்வில் எப்படியெல்லாம் ஆண்கள் ஆதிக்கம் செய்தார்கள் என்பதை கேட்டுக் கொண்டும், எதிர்த்துக் கொண்டும் இருந்த உதயா. கடைசியில் தானும் ஒரு ஆணாதிக்கவாதியாக மாரியதை உணரும்போது, கொக்கரக்கோ தலையிட்டு தன் வாழ்வில் கடந்த பெண்களைப் பற்றிக்கூறி இதுபோன்ற பெண்கள் இருக்கும் பொழுது ஆணாதிக்கம் செழுத்துவது தவறில்லை என்பதை ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது.
இந்த ‘எக்ஸைல்’ லில் இவ்வளவு தானா என்றால் அது கண்டிப்பாக இல்லை. ஸீரோ டிகிரிப்போல் இதில் புரியாமல் இருக்க ஒன்னும் இல்லை, மிக மிக யதார்த்தமாக பயணம் செய்திருக்கிறது சாருவின் எழுத்து. இந்த புதினத்தை என் நண்பர்கள் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
அருமையான பதிவு, சாருவின் மீது உள்ள காதலை உங்கள் எழுதிதுக்களில் காணமுடிகறது. தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.
ReplyDeleteThank you for ur support....
Deleteநண்பா... அருமை..நிறைய எழுதுங்கள்.
ReplyDeleteThank you for ur support....
Delete