Saturday 11 February 2012

நான் அனுபவித்த ஹைக்கூக்கள்

முதலில் ஹைக்கூவைப் பற்றி ஒரு சிரிய அறிமுகம். ஹைக்கூவின் பூர்வீகம் ஜப்பான் என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஹைக்கூவின் அமைப்பு எப்படி இருக்க வேண்டுமென்றால், யாரும் எளிதில் புரிந்துக் கொள்ள முடியாதபடியும், அதை நங்கு ஆராய்ந்தால் அதில் பல நிகழ்வுகள் உள்ளதை உண்ரும்படியாகவும் இருக்க வேண்டும். ‘சுஜாதா அவர்கள் “ஹைக்கூ – ஒரு புதிய அறிமுகம் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் இயற்றியுள்ளார்.

அதில், ஜப்பானில் ஹைக்கூ எத்தனை வகை இருக்கிறது, அங்கு ஏன் ஹைக்கூ பிரபலமாக உள்ளது, தமிழில் ஹைக்கூ எழுதும்போது எந்த அமைப்பில் இருக்க வேண்டும் போன்ற பல தகவல்களை கொடுத்துள்ளார். அவர் பார்வையில் நம் திருக்குறள் கூட ஒரு வகையில் ஹைக்கூ தான் என குறிப்பிடுகிறார். ஆனால், பெரும்பாலான ஜப்பான் ஹைக்கூக்கள் மூன்று வரிகளில் அமைந்திருப்பதால் தமிழிலும் அதையே பின்பற்றுவதுதான் உசிதமென கூறிகிறார். சுஜாதா அவர்கள் வழிகாட்டியதை பின்பற்றி நான் இயற்றிய சில ஹைக்கூக்கள் உங்களுக்காக………

v பேனா மைத் தீர்ந்தது
கண் நோட்டமிட்டது அடுத்தவன் சட்டைப் பை
கையொப்பம் யிட.

v சில்லரை இல்லை
பேருந்தில் ஏறினேன்
சில்லரை தேவைப்பட்டதால்.

v மிகவும் பசித்ததால்
சாப்பிடலாம் என்றான்
துட்டு இருக்கிறதா என்று கேட்க்காமல்.

v சாலையோரம் போர்டு
வழி விடு (GIVE WAY)
வாழ்வதர்காகவா.

v பேசிக் கொண்டிருந்தேன்
பத்து ரூபாய் விழுந்த்து
சேர்த்தேன் மூதாட்டியின் கையில்.

v நான் ரசித்தேன் முதலில்
அவள் சிரித்ததை
அவள் அறியாள்.

கடைசியாக உள்ளது ஹைக்கூ அல்ல, ஏனேன்றால் ஹைக்கூ எழுதும்போது நான், அவள், அவன் போன்ற பாலை குறிப்பிட கூடாது என்பது சட்டம். இருந்தாலும் நல்லாயிருக்கில்ல படிங்க, படிச்சு எப்படி இருக்குனு சொல்லுங்க.

No comments:

Post a Comment