என் முதல் பாகத்தை படித்த என் நண்பர்கள், என்னை பாராட்டியும் மேலும் பல ஹைக்கூக்களை எழுதும் படியும் கேட்டுக்கொண்டனர். இந்த பாகம்-2, என் படைப்பை மதித்த என் நண்பர்களுக்கு சமர்ப்பனம்........
v துணிக்கடை
தென்பட்டன பல
கையில் பிடித்தது பிடித்ததை.
v காதலிப்பவர்கள்
நினைத்ததை பேசவில்லை
நினைக்காததை பகிர்ந்தனர்.
v வரிசையாக
கண்கள் இணைந்தன
வரிசை நகர்ந்தது தொடர்பு துண்டித்தது.
v நேர் கோட்டில் நடந்தது
பின் அழகை ரசிக்க
முன் அழகை தவிர்க்க.
v விழுந்ததும்
கண்டுக் கொள்ளவில்லை எழுந்ததும்
காட்டிக் கொள்ளவில்லை.
v கணக்கு இடித்தது
கொடுத்து விட்டேன்
சரியானது இன்னொரு நாள்.
v அமர்ந்தோம்
ஆரம்பித்தது முளித்தோம்
முடிந்துவிட்டது.
v ஜன்னல் திறக்க
காற்று புகுந்தது
கண்கள் குளிர்ந்தன.
v பகலில்
தொலைந்ததர்க்கு இரவு
விழுத்திருக்கிறேன்.
v உரிமையாக
கேட்டதால்
மறைந்தது வெறுமை.
என்ன படித்துவிட்டீர்களா!.... மேல் இருப்பவைகளில் எல்லாமே ஹைக்கூதானா என்பது எனக்கே சந்தேகமாக உள்ளது, அப்படி உங்களுக்கு அது ஹைக்கூ இல்லை என்று தொன்றினால் அதை ஒரு கவிதையாக எடுத்துக் கொள்ளுங்கள். எப்படி இருந்தது என்ற உங்கள் கருத்தை தயவு செய்து பதிவு செய்யுங்கள், ஏனென்றால் உங்கள் பாராட்டும், விமர்சனமும்தான் என்னை மேலும் எழுத ஊக்குவிக்கும். அதுதான் என் weakness point……. நன்றி.
எனக்கும் ஹைக்கூவுக்கும் காததூரம், எளிமையான கவிதைகள்தான் எனக்குப் புரியும், எனவேதான் உங்கள் ஹைக்கூ 1 படித்து, கமென்ட் அடிக்க முடியவில்லை, நண்பர் ராஜேஷ் த ஸ்கார்ப் ஒரு கவிதை எழுதியிருந்தார், அது-
ReplyDeleteஇன்று
செவ்வாய் கிழமை
நாளை
புதன் கிழமை
அதுகூட பரவாயில்லை
நேற்று
திங்கள் கிழமையாம் !
இதுமாதிரி ஜாலிக்கவிதைகள்தான் எனக்குப் புரியும், இருந்தாலும் ஹைக்கூ எழுத தனித்திறமை தேவை, அது உங்களிடம் இருப்பதாக நம்பலாம் !
நல்ல முயற்சி நண்பா... இன்னும் நிறையப் படிக்கவும்..... ஆனால் சபாஷ் என்று சொல்லும் அளவிற்கு இல்லை...
ReplyDeleteதயவு செய்து கவிக்கோ அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன்,கவிஞர் மீரா போன்றவர்களின் படைப்பை படித்துவிட்டு பிறகு ஹைக்கூவிற்கு வாருங்கள்.. உண்மையான ஹைக்கூ என்பது மூன்றாம் வரியில் வருவது முதல் இரண்டு வரிகளுக்கு சம்மந்தமில்லாதவையாக இருக்கவேண்டும்
ReplyDeleteஅது எப்படி தெரிஞ்சிக்கனும்னா முதல் இரண்டு வரியை படித்து விட்டு நிறுத்திவிட வேண்டும்.. மூன்றாம் வரியை படிக்கக்கூடாது.. மீண்டும் முதல் இரண்டு வரியை படித்து இப்பொழுது மூன்றாம் வரியை படிக்கவேண்டும்.. உதாரணத்திற்கு அப்துல் ரகுமானின் ஹைக்கூ கவிதை ஒன்று
"புத்தகங்களே
சமர்த்தாய் இருங்கள்
பிள்ளைகளை கிழித்துவிடாதீர்கள்"
“ பசிக்கு அழுகிறது குழந்தை
கஞ்சி காய்ச்சினான் தந்தை
சுவரொட்டி ஒட்ட”
இது தான் பாஸ் ஹைக்கூ.. சும்மா மூனு வரியில எழுதறதெல்லாம் ஹைக்கூனு சொல்லிக்கிட்டு இருக்காதீங்க.. ப்ளீஸ்.