Wednesday 5 December 2012

நேநோ



Nano.
Recueil de nouvelles.
Charu nivedita.

    ‘நேநோ’ சிறுகதை தொகிதியை படித்து முடித்து பல நாட்கள் ஆயினும் இன்றுதான் அதைபற்றி பதிவுபோட நேரம் கிடைத்தது. இங்கே இந்த வட்டத்தில் சாருவின் தீவிர வாசிப்பாளர்கள் (நானும் தீவிரம்தான்) மற்றும் வாசிப்பு உலகில் அதிக அனுபவம் பெற்றவர்கள் நிறைய பேர் இருப்பதால் கூட இந்த தாமதம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நான் அவர்களை போல, சாருவின் எழுத்தை புரிந்து கொள்ளுமளவுக்கு உள் வளர்ச்சி(Mental Maturity) பெறவில்லை போலும். இருந்தும் என்னால் இந்த சிறுகதை தொகுதியை படித்த பிறகு எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும், என்னுள் ஏற்பட்ட மாற்றத்தையும் இங்கு பகிராமல் இருக்க முடியவில்லை. என் பகிர்தளில் ஏதேனும் சிறு பிள்ளைதனம் இருந்தால் நிறாகரித்துவிடுங்கள். சில நேரங்களில் சாருவின் வாசகனாக இருப்பதற்க்கு எனக்கு தகுதி இருக்கிறதா என்றுகூட யோசிப்பேன். இருந்தாலும் சாருவின் ஒரு சாதாரண வாசகனாக என்னை பாருங்கள்.

  இந்த தொகுதியில் இருக்கும் சிறுகதைகள் அனைத்தும் கிட்டதட்ட 20, 25 வருடங்களுக்கு முன்பு எழுதியவை. அப்போதே அதீத நுன்னறிவுடன் இப்பேர்பட்ட உலக தரம் வாய்ந்த சிறுகதைகளை கொடுக்க முடிந்திருக்கிறது சாரு அவர்களால். சாரு அவ்வப்போது தன்னை ஒரு Wisdom என்று சொல்லி கொள்வார். அது அப்பட்டமான உண்மைதான். சாருவிடம் யாராவது ‘நீங்கள் உங்களை விஸ்டம் என்று சொல்லி கொள்கிறீர்கள், அதற்கு ஏதேனும் ஆதாரம் காட்டுங்கள்’ என்று கேட்டால் இந்த ‘நேநோ’ சிறுகதை தொகுதியை தாராளமாக சமர்பிக்கலாம். எத்தனை வகையான அனுபவங்களின் வெளிபாடுகள் அடங்கியுள்ளது தெரியுமா இந்த தொகுதியில். அத்தனையும் அபாரம் ஒவ்வொரு சிறுகதையும் ஒரு ஜெம் (Gem) என்று சொல்லலாம்.
சிறுகதைக்கேவுரிய எந்த வழிமுறைகளையும் வைத்துக் கொள்ளாமல் ஒவ்வொரு சிறுகதையையும் தனக்கான நடையில் ஒரு தனித்தன்மையுடன் கலக்கியிருப்பார். அதில் குறிப்பாக கணையாழி மற்றும் தினமலர் பத்திரிக்கைக்கு எழுதிய சிறுகதைகள் அனைத்தும், அனைவரும் ரசிக்கும்படி அவ்வளவு ஜனரன்ஜகமாக இருக்கும். சாருவின் பின் – நவீனத்துவ எழுத்துக்களை விமர்சிப்பவர்கள் கட்டாயமாக இந்த தொகுதியை படித்து பார்க்க வேண்டும்.

 ‘முள்’ என்ற சிறுகதையுடன் இந்த தொகுதி ஆரம்பிக்கிறது. அதை தொடர்ந்து வரும் ஒவ்வொரு சிறுகதைகளும் unique. ‘டீ, மொகலாய தோட்டம்’ போன்ற சிறுகதைகளில் வறுமையை எவ்வளவு கொண்டாட்டமாக காட்டி நம்மளையும் ரசிக்க வைக்கிறார். நான் என் சிறு வயது முதல் இன்றுவரை வறுமையிலையே வெந்து சாகின்றேன். சில நேரங்களில் வாழ்கையே வெறுத்து போயி இறப்பை நோக்கி பயணிக்க மனம், புத்தி இரண்டும் யோசிக்கும். ஆனால் இந்த இரண்டு சிறுகதைகளை படித்த பிறகு எத்தனை கடுமையான வறுமை வந்தாலும் அதை தாங்கிக் கொள்ளும் மன தைரியமும், பக்குவமும் எனக்கு கிடைத்திருக்கிறது. I am back with resurrection, through your WISDOM Charu. Thanks, thanks a lot.

பின்னர் ‘பிளாக் நம்பர் : 27, திர்லோக்புரி’ என்ற சிறுகதையில் கூறியிருக்கும் கொடுமையான சம்பவத்தை படிக்கும்போது அதில் இருக்கும் பதற்றமும், பயமும் நம்மிடேயும் தொற்றிக்கொள்கிறது. ஒரு சாமான்யனின் வெகுளிதனமும், புத்திசாலித்தனமும் வெளிகாட்டிருப்பார். வழக்கம் போல Non – linear கதைகளான Nano, The joker was here, The book of fuzoos…. போன்ற சிறுகதைகள் இன்னும்  என் அறிவுக்கு எட்டா கனியாகவே உள்ளது. இந்த கதைகளில் இருக்கும் சாரம்சம் (Essence) புரியாமல் இதற்கான தேற்றம் (Theorem) என்ன என்பதை இன்னும் தேடிகொண்டே இருக்கிறேன். இது போன்ற Non – linear கதைகளில்தான் சாருவின் பெரும் திறமை வெளிபடுகிறது என நம்புகிறேன், இதுதான் இவரை மற்ற எழுத்தாளர்களிடம் இருந்து வேறுபடுத்தியும் காட்டுகிறது.

இதை எல்லாவற்றைவிடவும் எனக்கு இந்த தொகுதியில் மிக மிக மிக மிகவும் பிடித்த சிறுகதை ‘என் முதல் ஆங்கில கடிதம்’. எப்பா அட்டகாசம், எக்ஸைலில் உதயா – அஞ்சலி காதலை விட இதில் வீரீயம் அதிகம்தான். காதல் பாணத்தை பருகவைத்து, காதல் சுவைமணத்தையும் ருசிக்க வைக்கிறார். உண்மையான Divine of Love  என்றால் என்ன என்பதை இந்த கதையில்தான் உணர்ந்தேன். என் போன்ற இளைஞர்களுக்கு இந்த கதை காதல் செய், காதல் செய் என  ஊக்கம் அளிக்கிறது.

மொத்தத்தில் இந்த சிறுகதை தொகுதி ஒரு பொக்கிஷம். எப்படி சூரிய ஒளி மனித உடம்பின் மீது விழும்போது அவன் வைட்டமின் சத்தை பெறுகிறானோ. அதேபோல் இந்த சிறுகதை தொகுதி படிக்கும் ஒவ்வொருவருக்கும் மன பக்குவம், மன எழுச்சி போன்ற மன வள மேம்பாட்டிற்கு தேவையான வைட்டமின்கள் கிடைக்கிறது. எப்படி ஒரு மனிதனை, விசையத்தை பகுப்பாய்வு செய்வது, அதனால் ஏற்படும் விளைவுகளிலிருந்து  வெளிவருவது எப்படி, போன்ற நிகழ்வு வார்ப்புருகளை கற்றுக் கொடுக்கிறது. தவறாமல் அனைவரும் இந்த சிறுகதை தொகுதியை படித்துவிடுங்கள்.

நன்றி
அன்புடன்,
பிரவீன் வெங்கடேஷ்.

No comments:

Post a Comment